4th & 5th JUNE 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஒடிசாவில் பாஜக முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது
- 18-வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதோடு, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்களும் நடைபெற்றது.
- இதில், 21 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 147 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட ஒடிசாவில் கடந்த 2000 முதல் பிஜு ஜனதா தளம் கட்சி ஆட்சியிலிருக்கிறது.
- வாக்கு எண்ணிக்கைத் தொடங்கிய முதலே முன்னிலையிலிருந்த பாஜக கூட்டனி தற்போது, மொத்தமுள்ள 147 இடங்களில் 80 இடங்களில் முன்னிலை வகிக்க 48 இடங்களுடன் ஆளும் பிஜு ஜனதா தளம் பின்தங்கியிருக்கிறது.
- இதன்மூலம், பாஜக முதல்முறையாக ஆட்சியைப் பிடிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது. இவை தவிர காங்கிரஸ் 15 இடங்களுடன் முன்னிலையில் இருக்கிறது.
- ஆந்திர பிரதேசத்தில் பகல் 2 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 4 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
- அதேபோல, மொத்தமுள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 16 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
- ஆந்திர பிரதேசத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியை தக்கவைப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், எதிர்க்கட்சியான சந்திரபாபு தலைமையிலான தெலுங்குதேசம் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.
- சட்டப்பேரவைத் தேர்தலில், தெலுங்குதேசம் 120க்கும் மேற்பட்ட இடங்களிலும், ஜனசேனை 15க்கும் மேற்பட்ட இடங்களிலும், பாஜக 5க்கும் மேற்பட்ட இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
- நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை(மே 4) காலை 8 மணிமுதல் நடைபெற்றது.
- இந்த தேர்தலின் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற்றுள்ளது.
- பாஜகவுக்கு எதிரான கட்சிகள் ஒன்றிணைந்து ’இந்தியா’ என்ற பெயரில் உருவான கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி அடைந்துள்ளது. இதில், தேசியவாத காங்கிரஸ்(சரத்) வேட்பாளர் போட்டியிட்ட ஒரு தொகுதியில் மட்டும் வாக்கு எண்ணிக்கை முடிவு இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், முன்னிலை பெற்றுள்ளார்.
- பாஜக 240 தொகுதிகளிலும் காங்கிரஸ் 99, சமாஜவாதி 39, திரிணமூல் காங்கிரஸ் 29, திமுக 21, தெலுங்கு தேசம் 16 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
- ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை 272 தொகுதிகளில் எந்தக் கட்சியும் வெற்றி பெறாததால், தனித்து ஆட்சி அமைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
- இந்த முறை பாஜக 36.56 சதவிகிதமும், காங்கிரஸ் 21.19 சதவிகிதமும் வாக்குகள் பெற்றுள்ளன.
- தமிழ்நாட்டில் 39 இடங்களிலும் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.
- தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக - 240, தெலுங்கு தேசம் - 16, ஐக்கிய ஜனதா தளம் - 12, சிவசேனை(ஷிண்டே) - 7, லோக் ஜனசக்தி ராம்விலாஸ் - 5, மதசார்பற்ற ஜனதா தளம் - 2, ஜனசேனா - 2, ராஷ்டிரிய லோக் தளம் - 2, தேசியவாத காங்கிரஸ் - 1, அப்னா தால் (சோனிலால்) - 1, பிற - 4 என மொத்தம் 292 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
- இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் - 99, சமாஜவாதி - 37, திரிணமூல் - 29, திமுக - 22, சிவசேனை(உத்தவ்) - 9, தேசியவாத காங்கிரஸ்(சரத்) - 8, மார்க்சிய கம்யூ. - 4, ராஷ்டிரிய ஜனதா தளம் - 4, ஆம் ஆத்மி - 3, ஜேஎம்எம் - 3, முஸ்லிம் லீக் - 3, இந்திய கம்யூ. - 2, விடுதலை சிறுத்தைகள் - 2, ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி - 2, கேரள காங்கிரஸ் - 1, மதிமுக - 1, பிற - 5 என மொத்தம் 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
- தனித்துப் போட்டியிட்ட கட்சிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் - 4, ஏஐஎம்ஐஎம் - 1, சிரோமணி அகாலி தளம் - 1, ஜோரம் மக்கள் இயக்கம் - 1, சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா - 1, சுயேச்சைகள் - 7, பிற - 2 என மொத்தம் 17 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
- பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று குடியரசுத்தலைவரை சந்தித்து அமைச்சரவையுடன் சேர்த்து தமது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
- அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட குடியரசுத்தலைவர் புதிய அரசு பொறுப்பேற்கும் வரை திரு நரேந்திர மோடியையும் அவரது அமைச்சர்களையும் பொறுப்பில் நீடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
- உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி "தாயின் பெயரில் ஒரு மரம்" என்ற இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
- தில்லியில் உள்ள புத்த ஜெயந்தி பூங்காவில் அரச மரக்கன்றை திரு மோடி நட்டார். நமது புவியின் நலனுக்காக அனைவரும் பங்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.