2nd JUNE 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் மீண்டும் வெற்றி
- முதல்வர் பிரேம் சிங் தமாங் தலைமையிலான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி(எஸ்கேஎம்) 32 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் 31 இடங்களை வென்று வரலாறு படைத்து மலைப்பிரதேசமான சிக்கிமில் இரண்டாவது முறையாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.
- மற்றொரு புறம் இந்தியாவின் நீண்ட காலம் முதல்வராக இருந்தவரும், சிக்கிம் ஜனநாயக முன்னணி (எஸ்டிஎஃப்) கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான பவன் குமார் சாம்லிங் அவர் போட்டியிட்ட இரண்டு இடங்களிலும் தோல்வியைத் தழுவியுள்ளார்.
- சிக்கிம் ஜனநாயக முன்னணி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. ஷியாரி தொகுதியில் போட்டியிட்ட டென்சிங் நோர்பு லாம்தா மட்டும் ஒரேயொரு இடத்தில் வெற்றி பெற்றார்.
- அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கு மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்றது. மொத்தமுள்ள 60 இடங்களில் 10 இடங்களில் போட்டியின்றி பாஜக வெற்றி பெற்றுள்ளதால், மாநிலத்தில் பாஜகவுக்கு சாதகமாக இருந்தது.
- முதல்வர் பெமா காண்டு மற்றும் துணை முதல்வர் சவுனா மெய்ன் ஆகியோர் ஏற்கனவே அந்தந்த இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
- அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையைக் கடந்து 60 இடங்களில் 46 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
- சீனாவின் சாங்’இ-6 விண்கலம் இன்று நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறங்கியுள்ளது. இதன் மூலம் அறியப்படாத நிலவின் தென்பகுதியிலிருந்து மண் மற்றும் பாறை மாதிரிகளை சேகரித்து அப்பகுதியின் தன்மையை ஆராயவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நிலவின் தென் துருவப் பகுதியில் முதன்முதலில் இந்தியா தனது சந்திராயன்-3 விண்கலத்தை இறக்கி கடந்தாண்டு சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து தற்போது சீனாவும் அந்தப் பகுதியில் தனது விண்கலத்தைத் தரையிறக்கியுள்ளது.