28th JUNE 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
நீட் விலக்கு தனித்தீர்மானம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றம்
- நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்களிப்பதோடு, நீட் தேர்வை கைவிடும் வகையில் மருத்துவ ஆணைய சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.
- இதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானம் பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒரு மனதாக நிறைவேற்றம் செய்யப்பட்டது. தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
- கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், சென்னானூரில் புதிய கற்கால சான்றுகளை சேகரிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது.
- இதற்குமுன் நடைபெற்ற அகழாய்வின்போது பழங்காலப் பொருள்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன. இங்குள்ள மலையடிவாரத்தின் மேற்பரப்பில் 5,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நுண்கற்கருவிகள், புதிய கற்கால கைக்கோடாரிகள், இரும்புக் காலத்தைச் சோ்ந்த கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், இரும்புக் கழிவுகள், பாறை ஓவியங்கள் எனப் பொருள்கள் கிடைத்துள்ளன.
- இங்குள்ள ஒரு கிணற்றில் கிடைத்த செங்கற்கள் 2,000 ஆண்டுகள் பழமையானவை என்பதால் இந்த இடம் சங்ககால மக்களின் வாழ்விடமாக இருக்கக் கூடும் என கருதப்படுகிறது.
- இதையடுத்து இங்கு அகழாய்வுப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக இங்கு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் திங்கள்கிழமை, நான்காயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்லால் ஆன உடைந்த நிலையில் புதிய கற்காலத்தைச் சோ்ந்த கருவி ஒன்றை அகழாய்வுக் குழுவினா் கண்டெடுத்தனா்.
- இந்த நிலையில் அகழ்வாய்வு நடைபெற்று வரும் பகுதியில் ஏ2 என்னும் அகழாய்வு குழியில் 61 செ.மீ ஆழத்தில் சுடுமண் முத்திரை கிடைத்தது.
- இந்த முத்திரையின் நீளம் 4.5 செ.மீ மற்றும் விட்டம் 3.2 செ.மீ கொண்டு காணப்படுகிறது. இந்த முத்திரையானது மண் பானையின் விளிம்பு பகுதியை அழகு படுத்துவதற்காக இந்த முத்திரையை பயன்படுத்தி இருக்கலாம்.
- எட்டு முக்கியத் தொழில்துறைகளின் ஒருங்கிணைந்த குறியீடு 2023 மே மாத குறியீட்டுடன் ஒப்பிடுகையில் 2024 மே மாதத்தில் 6.3 சதவீதம் (தற்காலிகமானது) அதிகரித்துள்ளது.
- மின்சாரம், நிலக்கரி, எஃகு, இயற்கை எரிவாயு ஆகியவற்றின் உற்பத்தி சாதனை அளவாக உயர்ந்துள்ளது.
- 2024 பிப்ரவரி மாதத்திற்கு எட்டு முக்கியத் தொழில்துறைகளின் ஒருங்கிணைந்த குறியீட்டின் இறுதி வளர்ச்சி விகிதம் 7.1 சதவீதமாக இருந்தது.
- கடந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் மே வரையிலான காலத்துடன் ஒப்பிடுகையில், 2024-25 காலத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் 6.5 சதவீதமாக (தற்காலிகமானது) இருந்தது.
- சிமெண்ட் உற்பத்தி 2023 மே மாதத்துடன் ஒப்பிடுகையில், 2024 மே மாதத்தில் பூஜ்யம் புள்ளி 8 சதவீதம் குறைந்துள்ளது.
- நிலக்கரி உற்பத்தி 2023 மே மாதத்துடன் ஒப்பிடுகையில், 2024 மே மாதத்தில் 10.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
- கச்சா எண்ணெய் உற்பத்தி 2023 மே மாதத்துடன் ஒப்பிடுகையில், 2024 மே மாதத்தில், 1.1 சதவீதம் குறைந்துள்ளது.
- மின்சார உற்பத்தி 2023 மே மாதத்துடன் ஒப்பிடுகையில், 2024 மே மாதத்தில், 12.8 சதவீதம் அதிகரித்துள்ளது.
- உரங்கள் உற்பத்தி 2023 மே மாதத்துடன் ஒப்பிடுகையில், 2024 மே மாதத்தில் 1.7 சதவீதம் குறைந்துள்ளது.
- இயற்கை எரிவாயு உற்பத்தி 2023 மே மாதத்துடன் ஒப்பிடுகையில், 2024 மே மாதத்தில் 7.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
- சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்தி 2023 மே மாதத்துடன் ஒப்பிடுகையில், 2024 மே மாதத்தில் பூஜ்யம் புள்ளி 5 சதவீதம் அதிகரித்துள்ளது.
- எஃகு உற்பத்தி 2023 மே மாதத்துடன் ஒப்பிடுகையில், 2024 மே மாதத்தில்7.6 சதவீதம் அதிகரித்துள்ளது.
- 2024 மே மாதம் வரையிலான மத்திய அரசு கணக்குகளின் மாதாந்தர ஆய்வு ஒருங்கிணைக்கப்பட்டு அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
- 2024 மே மாதம் வரை மத்திய அரசின் மொத்த வருவாய் ரூ.5,72,845 கோடியாக இருந்தது. (2024-25 பட்ஜெட் மதிப்பீட்டின் மொத்த வருவாயில் இது 18.6 சதவீதம்) இதில், வரி வருவாய் (மத்திய அரசுக்கு உரியது) ரூ.3,19,036 கோடி, வரியல்லாத வருவாய் ரூ.2,51,722 கோடி, கடன் வசூல் வருவாய் ரூ.2,087 கோடியாகும்.
- இந்தக் காலகட்டத்தில் மத்திய அரசால் மாநில அரசுகளுக்கு அளிக்கப்பட்ட வரிப்பகிர்வு ரூ.1,39,751 கோடி. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் வழங்கப்பட்டதைவிட ரூ.21,471 கோடி அதிகமாகும்.
- 2024 மே மாதம் வரை மத்திய அரசின் மொத்த செலவினம் ரூ.6,23,460 கோடி (2024-25 பட்ஜெட் மதிப்பீட்டில் இது 13.1 சதவீதம்). இதில் ரூ.4,79,835 கோடி வருவாய் கணக்கிலானது. ரூ.1,43,625 கோடி மூலதனக் கணக்கிலானது.
- மொத்த வருவாய் செலவினத்தில் ரூ.1,23,810 கோடி வட்டி வழங்குதலுக்கானது; ரூ.54,688 கோடி பெருமளவிலான மானியங்கள் கணக்கிலானது.