Type Here to Get Search Results !

27th JUNE 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


27th JUNE 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

ஓசூரில் சர்வதேச விமான நிலையம் - முதல்வர் அறிவிப்பு
  • ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை அறிவித்துள்ளார். 
  • ஆண்டுக்கு 3 கோடி பயணிகள் வந்துசெல்லும் வகையில் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் உரையாற்றினார்.
"மாணவர்களுக்கான மின்சாரப் பாதுகாப்பு கையேடு" வெளியிடப்பட்டது
  • மத்திய மின்சார அமைச்சகத்தின், மத்திய மின்சார ஆணையம், மின்சாரப் பாதுகாப்புக்கான தேசிய பொறியாளர்கள் கூட்டமைப்புடன் இணைந்து, இந்திய தர நிர்ணய அமைவனத்தின் ஆதரவுடன், குறிப்பாக பள்ளி மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட, அகில இந்திய மின்சாரப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஜூன் 26-ந் தேதி ஏற்பாடு செய்தது. அன்றைய தினம் "மின்சாரப் பாதுகாப்பு தினமாக" அனுசரிக்கப்பட்டது.
  • அடுத்த வாரம் தேசிய மின்சாரப் பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு மின் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியின் கருப்பொருள் "பள்ளியிலிருந்து பாதுகாப்பு தொடங்குகிறது" என்பதாகும்.
  • மின்சார பொதுத்துறை நிறுவனங்கள், மாவட்ட நிர்வாகம், தேசிய மின்சாரப் பயிற்சி நிறுவனம், எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள், மத்திய பொதுப்பணித்துறை உள்ளிட்டவற்றின் சம்பந்தப்பட்ட துறையினர், தில்லியின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 
  • மக்களிடையே பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு கலாச்சாரத்தை ஊக்குவிப்பதில் அகில இந்திய மின்சாரப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டம் குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel