26th JUNE 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு தமிழக சட்டசபையில் தீர்மானம்
- சட்டப்பேரவையில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்தக் கோரி தனித் தீர்மானம் கொண்டு வந்து முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.
- முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படவுள்ளது.
- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் 10 ஆம் கட்ட அகழாய்வு பணி கடந்த 18 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
- ஒன்றரை ஏக்கர் நிலங்களில் 12 குழிகள் தோண்டப்பட்டு பத்தாம் கட்ட அகழாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தற்போது இரண்டு குழிகள் மட்டும் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
- இரு குழிகளும் 2 அடி ஆழம் வரை தோண்டப்பட்டுள்ள நிலையில், அகழாய்வில் பாசி மணிகள், கண்ணாடி மணிகள் உள்ளிட்ட 27 பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
- இதைத் தொடர்ந்து தற்போது தா என்ற தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- நாடாளுமன்ற மக்களவையில் புதிய சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (புதன்கிழமை) காலை 11 மணியளவில் நடைபெற்றது. இதில், ஆளும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் 17-வது மக்களவையின் சபாநாயகராக இருந்த ஓம் பிர்லா போட்டியிட்டார்.
- எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரசைச் சேர்ந்த, நாடாளுமன்ற அலுவல்களில் அதிக அனுபவம் பெற்ற மூத்த தலைவரான கொடிக்குனில் சுரேஷ் களமிறக்கப்பட்டார்.
- ஓம் பிர்லா - கொடிக்குனில் சுரேஷ் ஆகிய இருவரில் யார் சபாநாயகர் என்பதை தீர்மானிக்க குரல் வாக்கெடுப்பு முறை கடைபிடிக்கப்பட்டது. அதில் ஓம் பிர்லா வெற்றி பெற்றார். பிரதமர் மோதி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
- இந்தியா கூட்டணிக் கட்சிகளின் மக்களவைக் குழுத் தலைவர்களின் கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடைபெற்றது. இதில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி ஒருமனதாக அறிவிக்கப்பட்டிருந்தார்.
- இந்த நிலையில், இன்று காலை கூடிய மக்களவைக் கூட்டத்தொடரிலும், எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி செயல்படத் தொடங்கினார்.
- தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவராக மக்களவையில் அவைத் தலைவரை வாழ்த்தி தனது முதல் உரையையும் நிகழ்த்தினார்.
- இந்த நிலையில், மக்களவை செயலகம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு அவைத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருக்கான அனைத்து சலுகைகளும் கிடைக்கும் என்றும், ஜூன் 9, 2024 முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.