
25th JUNE 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஜூன் 3 ஆம் தேதி செம்மொழி நாளாக கடைபிடிக்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு
- மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3 ஆம் தேதி செம்மொழி நாளாக கடைபிடிக்கப்படும் என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
- மேலும், அடுத்த ஆண்டு முதல் ஜனவரி 25 ஆம் தேதி தமிழ் மொழி தியாகிகள் நாளாக கடைப்பிடிக்கப்படும் எனவும் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அறிவித்துள்ளார்.
- விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளத்தில் வைப்பாற்றின் வடகரையில் உள்ள மேட்டுகாடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
- இந்த நிலையில், திங்கள்கிழமை 30.7 மி.மீ. உயரமும், 25.6 மி.மீ அகலமும் கொண்ட சுடுமண்ணாலான குந்தளம் என்ற சிகை அலங்காரத்துடன்கூடிய பாவை பொம்மையின் தலைப்பகுதி கண்டெடுக்கப்பட்டது.
- முன்னதாக, இந்தப் பகுதியில் நடைபெற்ற அகழாய்வில் கண்ணாடி மணிகள், கல்மணிகள், பழங்கால செங்கற்கள் உள்ளிட்ட தொன்மையான பொருள்கள் கிடைத்தன.
- மேலும், இரண்டாம் கட்ட அகழாய்வின் போது, இதேபோன்று பாவையின் சுடுமண் பொம்மை கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது.
- மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் புதன்கிழமை (ஜூன் 26, 2024) நடைபெறுகிறது.
- துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க பாஜக மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடத்தும் நிலை உருவாகியுள்ளது.
- மக்களவை சபாநாயகர் பதவியில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து, பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.
- அதன்படி, மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், இந்திய கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷூம் போட்டியிடுகின்றனர்.
- இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் ஒருமனதாக சபாநாயகரை தேர்ந்தெடுத்து வந்தனர். ஆனால், இந்த முறை இந்த பாரம்பரியம் உடைகிறது.
- இலங்கையின் ஆரம்ப சுகாதார நிலைய சேவைகளின் தர மேம்பாடு மற்றும் பயன்பாட்டை அதிகரிக்க 150 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 12,500 கோடி) நிதியளிக்க உலக வங்கியின் நிர்வாக இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- உள்ளூர் மக்களுக்கு அத்தியாவசிய சுகாதார சேவைகளை அளிக்கும் ஆரம்ப சுகாதார நிறுவனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும் அவை அளிக்கும் சேவையின் தரத்தை மேம்படுத்தவும் உதவும் இத்திட்டத்திற்கு உலக வங்கி திங்கள்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
- 550 சுகாதார நிலையங்களில் ஏற்கெனவே உலக வங்கியின் ஆதரவில் அத்தியாவசிய மருத்துவ கருவிகள், மருந்துகள், சோதனை வசதிகள் மற்றும் சுகாதார பணியாளர்கள் மேம்பாட்டுக்கான திட்டம் இலங்கையில் நடைமுறையில் உள்ளது.
- இந்த புதிய திட்டம் இலங்கை முழுவதும் 100 சதவிகிதம் பகுதியில் உள்ள மக்களுக்கு சேவையளிக்க 1000-க்கும் அதிகமான சுகாதார நிலையங்களில் சேவையை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படவுள்ளதாக உலக வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.