24th JUNE 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
18வது மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பார்த்ருஹரி மஹ்தாப் பதவியேற்பு
- 18வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 293 இடங்களைக் கைப்பற்றி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்தது.
- காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்றது. 240 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்தது.
- எனினும், தனிப்பெரும்பான்மை (272) கிடைக்காததால், தெலுங்கு தேசம் (16), ஐக்கிய ஜனதா தளம் (12) உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் பாஜக ஆட்சியமைத்தது.
- பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி கடந்த ஜூன் 9-ம் தேதி பதவியேற்றார். இந்தச் சூழலில், 18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கி ஜூலை 3-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
- இதேபோல், மாநிலங்களவையின் 264வது அமர்வு ஜூன் 27-ம் தேதி தொடங்கி ஜூலை 3 வரை நடைபெறவிருக்கிறது. ஜூன் 27-ம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றவுள்ளார்.
- மக்களவை கூட்டத் தொடரின் முதல் இரு நாள்களில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்கவுள்ளனர். மக்களவை இடைக்கால தலைவர் பர்த்ருஹரி மகதாப் முன்னிலையில் எம்.பி.க்கள் பதவியேற்பு நடைபெறும். ஜூன் 26-ம் தேதி மக்களவைத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது.
- இந்த நிலையில் இடைக்கால சபாநாயகராக பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் 'பார்த்ருஹரி மஹ்தாப்' பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
- புகையிலை பயன்பாடு இந்தியாவில் தடுக்கக்கூடிய இறப்புகள் மற்றும் நோய்களுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது. நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.35 மில்லியன் இறப்புகளுக்கு இது காரணமாகிறது.
- புகையிலை உற்பத்தியிலும், பயன்பாட்டிலும் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. உலகளாவிய இளைஞர் புகையிலை கணக்கெடுப்பு 2019-ன் படி, நாடு முழுவதும் 13 முதல் 15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களில் 8.5 சதவீதம் பேர் வெவ்வேறு வடிவங்களில் புகையிலையைப் பயன்படுத்துகின்றனர்.
- நமது பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் வளாகங்களைச் சுற்றி பல்வேறு வடிவங்களில் புகையிலைப் பொருட்கள் எளிதாக கிடைப்பது இந்த நிலைக்கு முக்கியக் காரணிகளில் ஒன்றாக நம்பப்படுகிறது.
- தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், புகையிலை பயன்பாட்டிலிருந்து சிறார்களையும் இளைஞர்களையும் பாதுகாப்பதற்கான புகையிலை இல்லாத கல்வி நிறுவனம் என்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
- கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை பள்ளிகளுக்கான "புகையிலை இல்லா கல்வி நிறுவன செயல்பாட்டு கையேட்டை" உருவாக்கி, 2024 மே 31 அன்று, உலக புகையிலை எதிர்ப்பு தினத்தில் அறிமுகப்படுத்தியது.
- நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் புகையிலை இல்லாத வழிகாட்டுதல்களுக்கு இணங்க புகையிலை இல்லாத பகுதியாக கல்வி நிறுவனங்களை #Tobacco Free Area மாற்றுவதே இதன் நோக்கமாகும்.
- குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கை நிறுத்துவதற்கான தேசிய இயக்கத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஜெகத் பிரகாஷ் நட்டா, புதுதில்லியில் இன்று தொடங்கிவைத்தார்.
- மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர்கள் திருமதி அனுப்பிரியா பட்டேல், திரு ஜாதவ் பிரதாப்ராவ் கண்பத்ராவ் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.
- பிரச்சார இயக்கத்திற்கான இலட்சினை, சுவரொட்டிகள், வானொலி விளம்பரங்கள் உள்ளிட்டவற்றையும் இவர்கள் வெளியிட்டனர்.
- மேலும் வயிற்றுப் போக்கு காலத்தில், உடலில் நீர்ச்சத்து குறைபாட்டைப் போக்குவதற்கான ஓஆர்எஸ் கரைசல் மற்றும் ஸிங்க் மாத்திரைகளையும் அவர்கள் குழந்தைகளுக்கு வழங்கினர்.
- வயிற்றுப்போக்கு காரணமாக குழந்தைகள் உயிரிழப்பதை முற்றிலும் தடுப்பதே இந்தப் பிரச்சார இயக்கத்தின் நோக்கமாகும். இதன்படி 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஓஆர்எஸ் கரைசல் வழங்கப்படவுள்ளது.