23rd JUNE 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஜிஎஸ்டி கவுன்சிலின் 53-ஆவது கூட்டம்
- ஜிஎஸ்டி கவுன்சிலின் 53-ஆவது கூட்டம், டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது.
- இதில், மத்திய நிதித்துறை இணை அமைச்சர்கள், மாநில நிதியமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமிழ்நாட்டின் சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டார்.
- இந்தக் கூட்டத்தில், உருக்கு, இரும்பு, அலுமினியம் என அனைத்து வகையான பால் கேன்களுக்கும், அதன் பயன்பாட்டின் அடிப்படையில் இல்லாமல், ஒரே மாதிரியாக 12 சதவீத ஜிஎஸ்டி விதிப்பது என முடிவுசெய்யப்பட்டது. அட்டைப் பெட்டிகள் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
- அனைத்து வகையான சூரிய மின்சார குக்கர்கள் மற்றும் தீயணைப்பு நீர் தெளிப்பான்கள் உள்ளிட்ட அனைத்து வகையான தெளிப்பான்களுக்கும் 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்க முடிவுசெய்யப்பட்டது. விமானங்கள் தொடர்பான பொருட்கள் இறக்குமதிக்கு 5 சதவீதம் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி விதிக்கப்பட உள்ளது.
- ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு ரயில்வே துறை வழங்கும் நடைமேடை டிக்கெட்டுகள், ஓய்வறைகள், பொருட்கள் வைக்கும் சேவைகள், பேட்டரியால் இயங்கும் கார் சேவைகள், ரயில்வே-க்குள் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனை ஆகிய சேவைகளுக்கு ஜிஎஸ்டி-யிலிருந்து விலக்கு அளிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
- மாணவர்களுக்காக கல்வி நிறுவனங்களுக்கு வெளியே செயல்படும் விடுதிகளில் தங்கும் மாணவர்களின் கட்டணங்களுக்கு ஜிஎஸ்டி-யிலிருந்து விலக்கு அளிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இது மாதம் ரூ.20,000 வரையான கட்டணம் மற்றும் குறைந்தபட்சம் தொடர்ந்து 90 நாட்களுக்கு தங்கும் மாணவர்களுக்கு பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஜிஎஸ்டி தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், 20 லட்சம் ரூபாய் வரையான விவகாரங்களுக்கு ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கோடி ரூபாய் வரையான வழக்குகளை உயர்நீதிமன்றத்திலும், 2 கோடி ரூபாய் வரையிலான வழக்குகளை உச்சநீதிமன்றத்திலும் தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஜிஎஸ்டி செலுத்தக் கோரி, கடந்த 2017-18-ஆம் நிதியாண்டு முதல் 2019-20-ஆம் நிதியாண்டு வரையான காலத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவகாரங்களில் 2025-ஆம் ஆண்டு மார்ச் 31-க்குள் வரி செலுத்தப்படுவதாக இருந்தால், அதற்கு வட்டி மற்றும் அபராதத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பாதுகாப்புப் படைகளுக்கான குறிப்பிட்ட வகை பொருட்களை இறக்குமதி செய்யும்போது, அதற்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி-யிலிருந்து மேலும் 5 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
- இந்தியாவின் சர்வதேச விமான நிலையங்களில் பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிஉள்ளது.
- இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகம், விமானபோக்குவரத்துத் துறை இணைந்து 'நம்பகமான விமான பயணி' (எப்டிஐ-டிடிபி) என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன.
- டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 'நம்பகமான விமான பயணி' திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.
- RLV LEX-03 என அழைக்கப்படும் தரையிறங்கும் பரிசோதனையானது கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள ஏரோநாட்டிகல் டெஸ்ட் ரேஞ்சில் (ATR) இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.10 மணிக்கு நடத்தப்பட்டது.
- புஷ்பக் என்று பெயரிடப்பட்ட இறக்கைகள் கொண்ட ஆர்எல்வி வாகனம், இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சினூக் ஹெலிகாப்டரில் இருந்து 4.5 கிமீ உயரத்தில் இருந்து விடுவிக்கப்பட்டது. கடுமையான காற்று வீசும் சூழல் நிலவியபோதும் ஆர்எல்வி வாகனம் வெற்றிகரமாக தரையிறங்கியது.
- இதன் மூலம், செயற்கைகோள்களை விண்ணுக்கு சுமந்து செல்லகூடிய ராக்கெட் மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில், ஏவுகலன் பரிசோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக செய்து காட்டியுள்ளது.
- இதன்மூலம் மீண்டும் பயன்படுத்தக்கூடிய புஷ்பக் ஏவுகலனின் (Reusable Launch Vehicle) தரையிறங்கும் பரிசோதனையை மூன்றாவது முறையாக வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது இஸ்ரோ.
- துருக்கியின் அன்டாலியா நகரில் உலகக் கோப்பை வில்வித்தை போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவு இறுதி சற்றில் ஜோதி சுரேகா, அதிதி சுவாமி, பர்னீத் கவுர் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி, எஸ்டோனியா அணியை எதிர்த்து விளையாடியது.
- இதில் இந்திய மகளிர் அணி 232-229 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது. உலகக் கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி தொடர்ச்சியாக 3-வது முறையாக தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
- கடந்த ஏப்ரல் மாதம் சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரிலும், மே மாதம் கொரியாவின் யெச்சியோன் நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரிலும் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றிருந்தது.