Type Here to Get Search Results !

நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க உயர்நிலைக் குழு அமைப்பு / HIGH-LEVEL COMMITTEE SET UP TO PROBE NEET QUESTION PAPER LEAK ISSUE

  • நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க உயர்நிலைக் குழு அமைப்பு / HIGH-LEVEL COMMITTEE SET UP TO PROBE NEET QUESTION PAPER LEAK ISSUE: நீட், நெட் தேர்வுகளில் வினாத்தாள் கசிந்ததான வெளியான தகவலையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க மத்திய அரசால் உயர்நிலைக் குழு அமைக்கப்படுமென கடந்த வியாழன்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்திருந்தார்.
  • இந்த நிலையில், இந்திய விண்வெளி ஆய்வு மையம் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் முனைவர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 உறுப்பினர்களைக் கொண்ட உயர்நிலைக் குழுவை மத்திய அரசு சனிக்கிழமை(ஜூன் 22) அமைத்துள்ளது.
  • என்டிஏ மூலம் வெளிப்படையான, சுமூகமான, நியாமான முறையில் தேர்வுகள் நடத்தப்படுவதை உறுதிசெய்ய மத்திய கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறையின் கீழ் நிபுணர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது மத்திய கல்வி அமைச்சகம்.
  • தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை முன்னாள் தலைவர் டாக்டர் ரந்தீப் குலேரியா உள்ளிட்டோர் இந்த குழுவில் உள்ளனர்.
  • தேர்வு நடைமுறைகளில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்புகள், பாதுகாப்பு நெறிமுறைகள், தேசிய தேர்வு முகமை(என்டிஏ) செயல்பாடுகளில் என்னென்ன மேம்பாடுகளை உட்புகுத்தலாம் ஆகியவை குறித்த விரிவான பரிந்துரைகளை ஆய்வு செய்து, அடுத்த 2 மாதங்களில் இந்த குழு அதன் அறிக்கையை சமர்ப்பிக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்நிலைக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் விவரம்

  • தலைவர் - டாக்டர் கே. ராதாகிருஷ்ணன், இஸ்ரோ முன்னாள் தலைவர், கான்பூர் ஐஐடி நிர்வாக வாரியத் தலைவர்
  • உறுப்பினர்கள் - டாக்டர் ரன்தீப் குலேரியா, தில்லி எய்ம்ஸ் முன்னாள் இயக்குநர், பேராசிரியர் பி.ஜே. ராவ், ஐதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், பேராசிரியர் கே.ராமமூர்த்தி, சென்னை ஐஐடி, சிவில் இன்ஜினீரிங் துறை முன்னாள் பேராசிரியர், திரு பங்கஜ் பன்சால், பீப்பிள் ஸ்ட்ராங் இணை அமைப்பாளர், கர்மயோகி பாரத் வாரிய உறுப்பினர், பேராசிரியர் ஆதித்ய மிட்டல், மாணவர் நலப்பிரிவு டீன், தில்லி ஐஐடி, திரு கோவிந்த் ஜெய்ஸ்வால், மத்தியக் கல்வி அமைச்சக இணைச்செயலாளர்.

ENGLISH

  • HIGH-LEVEL COMMITTEE SET UP TO PROBE NEET QUESTION PAPER LEAK ISSUE: Union Education Minister Dharmendra Pradhan had announced on Thursday that a high-level committee would be set up by the central government to investigate the question paper leak in the NEET and NET examinations.
  • In this situation, the former head of Indian Space Research Centre- ISRO, Dr. K. The central government on Saturday (June 22) constituted a 7-member high-level committee headed by Radhakrishnan.
  • The Union Ministry of Education informed that a high-level committee of experts under the Higher Education Department of the Union Ministry of Education has been constituted to ensure transparent, smooth and fair conduct of examinations by NDA.
  • Dr. Randeep Guleria, former chairman of AIIMS, Delhi, is part of the committee.
  • It is said that the committee will examine detailed recommendations on reforms to be made in examination procedures, security protocols and what improvements can be made in the functioning of the National Examination Agency (NDA) and submit its report in the next two months.

Details of Chairman and Members of High Level Committee

  • Chairman – Dr. K. Radhakrishnan, former chairman of ISRO, chairman of IIT Kanpur Board of Trustees
  • Members - Dr. Randeep Guleria, Former Director, AIIMS, Delhi, Professor B.J. Rao, Vice-Chancellor, Central University, Hyderabad, Prof. K. Ramamurthy, Ex-Professor, Department of Civil Engineering, IIT Chennai, Mr. Pankaj Bansal, People Strong Co-Organizer, Karmayogi Bharat Board Member, Prof. Aditya Mittal, Dean, Student Welfare, IIT Delhi, Mr. Govind Jaiswal, Joint Secretary, Union Ministry of Education

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel