
22nd JUNE 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
சென்னையில் இளஞ் சிவப்பு ஆட்டோக்களை (Pink Autos) இயக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்
- தமிழக சட்டப்பேரவையில் சமூக நலத்துறை மானியக் கோரிக்கை நடைபெற்றது. அதில், சமூக நலத் துறையின் மூலம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்காக செயல் படுத்தப்படும் நலத்திட்டங்களில் பயன் பெறுவதற்காக வரையறுக்கப்பட்டுள்ள தகுதிகளில் ஒன்றான குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு 72,000 ரூபாயிலிருந்து 1,20,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னையில், பெண்கள் பாதுகாப்பிற்காகவும், சுயதொழில் உருவாக்கும் வகையில், 200 இளஞ் சிவப்பு ஆட்டோக்களை (Pink Autos) இயக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
- ராஜஸ்தான் மற்றும் கர்நாடகாவில் இருந்து 9 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை பிற இடங்களுக்கு பகிர்ந்து விநியோகிக்கும் வகையில் மாநிலங்களுக்கு இடையே மின்சாரம் கொண்டுசெல்லும் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
- இத்திட்டங்கள் கட்டண அடிப்படையிலான போட்டி ஏல முறையில் செயல்படுத்தப்படும். இந்த திட்டங்கள் 2030-ம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை நிறுவி இணைப்பதன் ஒரு பகுதியாகும், இதில் 200 ஜிகாவாட் ஏற்கனவே நிறுவப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.
- பிரதமர் நரேந்திர மோடி - இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோருக்கு இடையே இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது இந்த ஒப்புதல் ஏற்பட்டுள்ளது.
- இரு நாடுகளுக்கும் இடையே ரயில் போக்குவரத்து, கடல்போக்குவரத்து மேம்பாடு, டிஜிட்டல் டொமைன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
- இரு நாட்டுத் தலைவர்களின் பேச்சவார்த்தைக்குப் பின், இந்தியா - வங்கதேசம் இடையே பசுமை கூட்டாண்மைக்கான பகிரப்பட்ட கருத்துருக்களில் கையெழுத்திடப்பட்டது.
- மேலும், இந்தியா - வங்கதேசம் இடையே ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டண்மை ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தையை மேற்கொள்ள ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
- இந்தோ - பசிபிக் பெருங்கடல் முன்முயற்சியில் வங்கதேசம் இணைவது என்ற முடிவுக்கு இந்தியா வரவேற்பு தெரிவிப்பதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
- இந்தியா, எப்போதும், அண்டை நாடுகளுடனான நட்புறவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்றும் மோடி கூறினார்.