Type Here to Get Search Results !

16th JUNE 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


16th JUNE 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

செங்கொடி 2024 பயிற்சி
  • ஜூன் 04 முதல் ஜூன் 14 வரை அமெரிக்க விமானப்படையின் அலாஸ்காவில் உள்ள ஈல்சன் விமானப்படை தளத்தில் நடத்தப்பட்ட சிவப்பு கொடி 2024 பயிற்சியில் இந்திய விமானப்படை குழு பங்கேற்றது. 
  • இது செங்கொடி 2024 இன் இரண்டாவது பதிப்பாகும், இது ஒரு மேம்பட்ட வான்வழி போர் பயிற்சியாகும். இது அமெரிக்க விமானப்படையால் ஒரு வருடத்தில் நான்கு முறை நடத்தப்படுகிறது. 
  • இந்த பயிற்சியில் இந்திய விமானப்படை, சிங்கப்பூர் குடியரசு விமானப்படை, இங்கிலாந்தின் ராயல் விமானப்படை, ராயல் நெதர்லாந்து விமானப்படை, ஜெர்மன் லுஃப்ட்வாஃபே மற்றும் அமெரிக்க விமானப்படை (யுஎஸ்ஏஎஃப்) ஆகியவை பங்கேற்றன.
  • ரஃபேல் விமானம் மற்றும் விமானக் குழுவினர், தொழில்நுட்ப வல்லுநர்கள், பொறியாளர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் துறை வல்லுநர்கள் அடங்கிய பணியாளர்களுடன் இந்திய விமானப்படையின் படைப்பிரிவு பங்கேற்றது.
  • செங்கொடி என்பது யதார்த்தமான போர் அமைப்புகளை வழங்க வடிவமைக்கப்பட்ட பல வகைகளில் நடத்தப்படும் ஒரு வான் போர் பயிற்சியாகும். 
  • விரும்பிய சூழலை உருவகப்படுத்துவதற்காக படைகளின் எல்லை நிர்ணயம் செய்யப்படுகிறது, சிவப்பு படை வான் பாதுகாப்பு கூறுகளை உருவகப்படுத்துகிறது. நீலப்படை தாக்குதல் கலப்பு கூறுகளை உருவகப்படுத்துகிறது.
  • IAF இந்திய விமானப்படையின் ரஃபேல் விமானங்கள் செங்கொடி பயிற்சியில் பங்கேற்றது இதுவே முதல் முறையாகும். சவாலான வானிலை மற்றும் கிட்டத்தட்ட பூஜ்ஜியத்திற்கும் குறைவான வெப்பநிலை இருந்தபோதிலும், ஐ.ஏ.எஃப் பராமரிப்பு குழுவினர் பயிற்சியின் காலம் முழுவதும் அனைத்து விமானங்களின் சேவைத்திறனை உறுதி செய்ய விடாமுயற்சியுடன் பணியாற்றினர்.
நாஸ்திரா-1 ட்ரோன் இந்திய ராணுவத்தில் சேர்ப்பு
  • நாக்பூரைச் சேர்ந்த சோலார் இண்டஸ்ட்ரீஸ் எகனாமிக்ஸ் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் (இஇஇஎல்) நிறுவனம் 'நாகாஸ்திரா-1' ட்ரோனை உருவாக்கி உள்ளது.
  • உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட 'நாகாஸ்திரா-1' ட்ரோன் முதல் தொகுப்பு இந்திய ராணுவத்திடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. எதிரிகளின் இலக்கை கச்சிதமாக தாக்கி அழிக்கும் நாகாஸ்திரா-1 என்ற தற்கொலைப்படை ட்ரோன் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
  • நாகாஸ்திரா-1 ட்ரோன்கள் எதிரிகளின் பயிற்சி முகாம்கள், ஏவுதளங்கள் மற்றும் ஊடுருவல்களை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டவை. 
  • எனவே ராணுவ வீரர்களுக்கு ஏற்படும் ஆபத்தை குறைக்கும்.இந்திய ராணுவம் இஇஇஎல் நிறுவனத்துக்கு 480 ட்ரோன்களை ஆர்டர் செய்தது. அவற்றில் 120 நாகாஸ்ட்ரா-1 ட்ரோன்கள் ராணுவ வெடிமருந்து கிடங்கிற்கு வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
  • நாகாஸ்திரா-1 என்ற ராணுவ ட்ரோனை மனிதர்கள் எளிதில் எடுத்துச்செல்ல முடியும். 9 கிலோ எடை கொண்ட நாகாஸ்திரா ட்ரோன், வானில் 30 நிமிடங்கள் வரை பறக்கும் திறன் கொண்டது. 
  • 30 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் நாகாஸ்திரா ட்ரோன்கள் 200 மீட்டர் உயரம் வரை வானில் எளிதாக பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தென் ஆப்பிரிக்க அதிபராக மீண்டும் ராமபோசா தேர்வு
  • தென் ஆப்பிரிக்காவின் அதிபராக தற்போதைய அதிபா் சிறில் ராமபோசா மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். 400 உறுப்பினா்களைக் கொண்ட தென் ஆப்பிரிக்க நாடாளுமன்றத்துக்கு கடந்த மாதம் 29-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது.
  • இந்தத் தோ்தலில் ஏஎன்சி கட்சிக்கு 159 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இதன் மூலம், நெல்சன் மண்டேலா தலைமையில் நிறவெறியிலிருந்து நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித் தந்த அந்தக் கட்சி கடந்த 30 ஆண்டுகளில் முதல்முறையாக பெரும்பான்மை இழந்தது.
  • மற்ற கட்சிகளுக்கும் ஆட்சிமைப்பதற்குத் தேவையான 201 இடங்கள் கிடைக்காததால் புதிய அரசை அமைப்பதில் இழுபறி நீடித்துவந்தது. 
  • இந்தச் சூழலில், தோ்தலில் 87 இடங்களைக் கைப்பற்றி 2-ஆவது இடத்தில் இருந்த ஜனநாயக முன்னணிக்கும் ஏஎன்சி கட்சிக்கும் இடையே தேசிய ஒற்றுமை அரசை அமைப்பதற்கான ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. 
  • அதன் தொடா்ச்சியாக, நாட்டின் பிரதமராக சிறில் ராமபோசா மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். இது தொடா்பாக நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற வாக்கெடுப்பில் அவருக்கு 283 வாக்குகள் கிடைத்தன. 
  • அவரை எதிா்த்துப் போட்டியிட்ட பொருளாதார சுதந்திரப் போராளிகள் (இஎஃப்எஃப்) கட்சித் தலைவா் ஜூலியஸ் மலேமாவுக்கு 44 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.அதையடுத்து, நாட்டின் அதிபராக ராமபோசா மீண்டும் 2-ஆவது முறையாகப் பதவியேற்கவிருக்கிறாா். 
  • அவரது பெரும்பாலும் வெள்ளை இன எம்.பி.க்களைக் கொண்ட ஜனநாயக முன்னணி, தோ்தலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்த இங்கதா சுதந்திரக் கட்சி (ஐஎஃப்பி), சிறுபான்மையினா் கட்சியான தேசபக்தா்கள் முன்னணி (பிஎஃப்) ஆகியவை இடம் பெறும்.
உக்ரைன் அமைதி மாநாடு 2024
  • 100 நாடுகளுக்கும் மேல் பங்கேற்கும் உக்ரைன் அமைதி மாநாடு ஸ்விட்சா்லாந்தில் சனிக்கிழமை தொடங்கியது. இந்த மாநாட்டில் வரலாறு படைக்கப்படும் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கூறினாலும், இதில் ரஷியா பங்கேற்காததால் கள நிலவரத்தில் இந்த மாநாடு மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது என்றே கருதப்படுகிறது.
  • ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் 2 ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்றுவரும் போா் குறித்து விவாதிப்பதற்காக ஸ்விட்சா்லாந்தின் நிட்வால்ட் பகுதியில் அமைந்துள்ள பா்கன்ஸ்டாக் சுற்றுலா விடுதியில் சா்வதேச மாநாடு சனிக்கிழமை தொடங்கியது.
  • இரு நாள்களுக்கு (ஜூன் 15, 16) நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்க ஈக்வடாா், ஐவரி கோஸ்ட், கென்யா, சோமாலியா மற்றும் ஏராளமான ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 50 நாடுகளின் தலைவா்கள், சுமாா் 100 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனா். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel