Type Here to Get Search Results !

8th MAY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


8th MAY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தஞ்சாவூர் அருகே சோழ்கால நந்தி, விஷ்ணு சிலை கண்டெடுப்பு 
  • தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அடுத்த சிற்றூர் சித்திரக்குடியை சேர்ந்தவர் முனைவர் சத்தியா.
  • இவரது நிலத்தில் நந்தி சிலை பாதி புதைந்த நிலையில் இருப்பதாக அவர் கொடுத்த தகவலின் பேரில் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தின் தமிழ்பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான மணிமாறன், அரசு தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் தில்லை கோவிந்தராஜன், அரசு நடுநிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஜெயலெட்சுமி ஆகியோர் அங்கு அந்த பகுதியில் நேற்றுமுன்தினம் களஆய்வு செய்தனர். அப்போது அங்கு நந்திசிலை, சேதமடைந்த விஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டது.
  • இந்த நந்தியானது கி.பி.910ம் நூற்றாண்டு சோழர்காலத்தை சார்ந்ததாக காணப்படுகிறது. நந்தியின் கழுத்தில் மணிமாலை சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. திமில் இப்பகுதியிலிருக்கும் காளைக்கு உள்ளது போலவே இருக்கிறது.
  • அங்கிருந்து 100 மீட்டர் தொலைவில் செல்ல கூடிய ஆனந்த காவிரி வாய்க்காலின் உட்புறத்து தென்புரக்கரையினை ஒட்டியவாறு தலை மற்றும் ஒரு கை உடைந்த நிலையில், இடுப்புக்கு கீழாக பாதி புதைந்த நிலையில் மூன்றடி உயரமுள்ள விஷ்ணு சிலை கண்டறியப்பட்டது. இவை இரண்டும் சோழர்கள் காலத்திய சிற்பங்களாகும். 
கப்பல் கட்டுதலில் உள்நாட்டு தரத்தை மேம்படுத்த தனியார் துறையுடன் இந்திய கடலோரக் காவல்படை புரிந்துணர்வு ஒப்பந்தம் 
  • கப்பல் கட்டுதலில் உள்நாட்டு தரத்தை மேம்படுத்துவதற்காக உள்நாட்டு கடல் தர எஃகு தயாரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய கடலோரக் காவல்படையும், ஜிண்டால் எஃகு மற்றும் மின் நிறுவனமும் (ஜேஎஸ்பி) 2024 மே 07 அன்று கையெழுத்திட்டன. 
  • இந்தக் கூட்டாண்மை மூலம், இரு தரப்பும் உள்நாட்டுமயமாக்கலை வளர்ப்பதற்கும், நாட்டின் நலனுக்காக இந்த பொருட்களை உற்பத்தி செய்து பயன்படுத்துவதற்குமான திறன்களை மேம்படுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளன.
  • இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் சிக்கலான பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதில் பொது-தனியார் கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை குறிப்பிடுவதுடன், அரசு முகமைகளுக்கும் தனியார் துறைக்கும் இடையே ஒத்துழைப்பின் அவசியத்தை வலியுறுத்துகிறது. 
  • மேலும் இந்திய கடலோரக் காவல் படைக்கு கடல்-தர எஃகு பொருட்களை உரிய நேரத்தில் வழங்குவதற்கான உத்தரவாதத்தை கப்பல் கட்டும் தளங்களுக்கு இந்த ஒப்பந்தம் அளிக்கிறது.
  • இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய கடலோரக் காவல்படையின் துணை தலைமை இயக்குநர் (உபகரணம் மற்றும் பராமரிப்பு), திரு எச்கே சர்மா, ஜேஎஸ்பி நிறுவனத்தின் சந்தைப்பிரிவு தலைமை அதிகாரி திரு எஸ்கே பிரதான் ஆகியோர் இந்திய கடலோரக் காவல்படையின் உயர் அதிகாரிகள் முன்னிலையில் கையெழுத்திட்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel