Type Here to Get Search Results !

இந்திய குடும்பங்களின் சேமிப்பு 2021 - 2023 / SAVINGS OF INDIAN HOUSEHOLD 2021 - 2023

  • இந்திய குடும்பங்களின் சேமிப்பு 2021 - 2023 / SAVINGS OF INDIAN HOUSEHOLD 2021 - 2023: கடந்த 2022-23 வரையிலான 3 ஆண்டு காலத்தில், இந்தியாவில் குடும்ப சேமிப்புகள் ரூ.14.16 லட்சம் கோடியாக சரிந்துள்ளது என்று மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறையின் தேசிய கணக்குப் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அந்தப் புள்ளவிவரத்தின்படி, கடந்த 2020-21-ஆம் ஆண்டில் நிகர குடும்ப சேமிப்புகள் ரூ.23.29 லட்சம் கோடியாக உச்சம் தொட்டது. அதன் பின்னா், அந்த சேமிப்புகளில் சரிவு ஏற்படத் தொடங்கியது.
  • கடந்த 2021-22-ஆம் ஆண்டு ரூ.17.12 லட்சம் கோடியாக சரிந்த அந்த சேமிப்புகள், 5 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு 2022-23-ஆம் ஆண்டில் ரூ.14.16 லட்சம் கோடியாக குறைந்தது. இதற்கு முன்பு 2017-18-ஆண்டில் நிகர குடும்ப சேமிப்புகள் ரூ.13.05 லட்சம் கோடியாக மிகவும் சரிந்தது.
  • கடந்த 2020-21-ஆம் ஆண்டில் பரஸ்பர நிதி மீதான குடும்ப முதலீடு ரூ.64,084 கோடியாக இருந்தது. இது 2022-23-ஆம் ஆண்டில் சுமாா் 3 மடங்கு அதிகரித்து ரூ.1.79 லட்சம் கோடியாக உயா்ந்தது.
  • கடந்த 2020-21-ஆம் ஆண்டு பங்குகள் மற்றும் கடன் பத்திரங்கள் மீதான குடும்ப முதலீடு ரூ.1.07 லட்சம் கோடியாக இருந்தது. இது 2022-23-ஆம் ஆண்டு சுமாா் இருமடங்கு உயா்ந்து ரூ.2.06 லட்சம் கோடியாக அதிகரித்தது.
  • கடந்த 2020-21-ஆம் ஆண்டு குடும்பங்களுக்கு அளிக்கப்படும் வங்கிக் கடன் ரூ.6.05 லட்சம் கோடியாக இருந்த நிலையில், இது 2022-23-ஆம் ஆண்டு ரூ.11.88 லட்சம் கோடியாக இருமடங்கு அதிகரித்தது.

ENGLISH

  • SAVINGS OF INDIAN HOUSEHOLD 2021 - 2023: Household savings in India fell to Rs 14.16 lakh crore in the three-year period to 2022-23, according to the National Accounts Statistics of the Central Department of Statistics and Plan Implementation.
  • According to the data, net household savings peaked at Rs 23.29 lakh crore in 2020-21. After that, those savings started to decline.
  • Those savings, which fell to Rs 17.12 lakh crore in 2021-22, fell to a five-year low of Rs 14.16 lakh crore in 2022-23. Earlier in 2017-18, net household savings fell sharply to Rs 13.05 lakh crore.
  • Last year 2020-21, household investment in mutual funds was Rs.64,084 crore. It has increased by about 3 times to Rs.1.79 lakh crore in 2022-23.
  • Last year 2020-21, household investment in stocks and bonds stood at Rs 1.07 lakh crore. This will almost double to Rs 2.06 lakh crore in 2022-23.
  • Bank credit to households was Rs 6.05 lakh crore in 2020-21, which doubled to Rs 11.88 lakh crore in 2022-23.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel