29th MAY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ’ருத்ரா எம்-2’ ஏவுகணை பரிசோதனை வெற்றி
- இந்திய விமானப் படை, ஒடிசாவின் கடற்கரைப் பகுதியில் சு-30 போர் விமானத்திலிருந்து தரையில் உள்ள இலக்கை குறிவைத்து ருத்ரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
- ருத்ரா எம்-2 ஏவுகணை, அதன் உந்துவிசை அமைப்பு, கட்டுப்பாடு மற்றும் வழிநடத்தும் அல்காரிதம் போன்றவை நேர்த்தியாக செயல்பட்டு, சோதனை நோக்கத்தை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்ததாகப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- இது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட திட-உந்துதல் ஏவுகணையாகும். இது பல வகையான எதிரிகளின் இலக்குகளை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது.
- பல்வேறு டி.ஆர்.டி.ஓ (பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு) ஆய்வகங்களால் உருவாக்கப்பட்ட அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்டு ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.
- இந்த ஏவுகணையின் செயல்திறன் குறித்து பல்வேறு அதிநவீன முறைகளில் பரிசோதனை செய்யப்பட்டது’ எனத் தெரிவித்துள்ளது.
- மத்திய அரசின் வெளியுறவு அமைச்சகம், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் சிஎஸ்சி மின் ஆளுமை சேவைகள் இந்தியா நிறுவனம் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
- இமைகிரேட் எனப்படும் திட்டம் முக்கியமாக குடியேற்ற சோதனை தேவைப்படும் (ECR) நாடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக நடைமுறைப்படுத்தப்படுகிறது.
- இடப்பெயர்வு குடியேற்ற செயல்முறையை இணையதளம் மூலம் தடையற்ற வகையில் வழங்க இது வகை செய்கிறது.
- இதன் மூலம் புலம்பெயரும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். வெளிநாட்டு நிறுவனங்கள், பதிவுசெய்யப்பட்ட ஆட்சேர்ப்பு முகவர்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வ குடியேற்றத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- மின்னணு தொழில் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் மற்றும் நிதி ஆலோசகர் திரு ராஜேஷ் சிங் முன்னிலையில், இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (PFC) நிறுவனம் கோவாவில் நடைபெற்ற புவி நிலைத்தன்மை உச்சிமாநாடு மற்றும் விருதுகள் 2024 நிகழ்ச்சியில் புதைபடிவ எரிபொருள் அல்லாத வணிகப் பிரிவில் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு (சிஎஸ்ஆர்) விருதைப் பெற்றது.
- பொது நிறுவனங்கள் துறை, கோவா ஐஐடி மற்றும் அவுட்லுக் ஊடக நிறுவன அதிகாரிகள் முன்னிலையில், மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் செயலாளர் திரு வி ஸ்ரீனிவாசிடமிருந்து பவர் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திருமதி பர்மிந்தர் சோப்ரா விருதைப் பெற்றுக்கொண்டார்.
- மத்திய மின்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மகாரத்னா பொதுத்துறை நிறுவனமான கிராமப்புற மின்மயமாக்கல் கழகம் (ஆர்இசி), முன்னணி வங்கி அல்லாத நிதி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
- இந்த நிறுவனம் அவுட்லுக் புவிக்கோள் நிலைத்தன்மை உச்சிமாநாடு மற்றும் 2024 விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் சாம்பியன் விருதை வென்றது.
- இந்த விருது வழங்கும் விழாவை கோவா ஐஐடி உடன் இணைந்து அவுட்லுக் குழுமம், கோவாவில் ஏற்பாடு செய்திருந்தது. ஆர்இசியின் மும்பை அலுவலக மூத்த பொது மேலாளர் திருமதி சரஸ்வதி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விருதைப் பெற்றுக் கொண்டார்.