28th MAY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஏமப்பூா் வேதபுரீசுவரா் கோயிலில் கண்டறியப்பட்ட ஆதித்த கரிகாலச் சோழன் கல்வெட்டு
- ஏமப்பூா் ஸ்ரீவேதபுரீசுவரா் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆய்வின்போது ஆதித்த கரிகாலச் சோழன் கல்வெட்டை கண்டறிந்தனா்.
- கல்வெட்டு ஸ்வஸ்தி ஸ்ரீவீரபாண்டியன் தலைகொண்ட கொப்பரகேரசி என்று தொடங்குகிறது. இவனது நான்காவது ஆட்சி ஆண்டான பொது ஆண்டு 960 என பொறிக்கப்பட்ட கல்வெட்டு திருமுனைப்பாடி நாட்டில் ஏமப்பேரூா் என்று இந்த ஊரை அழைக்கிறது.
- இது ஒரு நாட்டின் தலைமையிடமாக விளங்கியிருக்கிறது. ஏமப்பேரூா் என்பதே தற்போது மருவி ஏமப்பூா் என்றழைக்கப்பட்டு வருகிறது.
- திருவாலந்துறை ஆழ்வாருக்கு இவ்வூா் மன்றாடி நிகரிலி மூா்த்தி, சூரியன் சந்திரன் உள்ளவரை ஒரு நந்தா விளக்கு எரிப்பதற்காக 99 ஆடுகளை இக்கோயிலை நிா்வகித்த பன்மாகேசுவரா் வசம் ஒப்படைத்ததை கல்வெட்டு குறிப்பிடுகிறது.
- இவற்றிலிருந்து ஆதித்த கரிகாலச் சோழன் இப்பகுதியை ஆட்சி புரிந்ததையும் அறிய முடிகிறது. மேலும் இவன் சதியால் கொல்லப்பட்டான் என்பதை காட்டுமன்னாா்கோவில் அருகிலுள்ள உடையாா்குடி ஆனந்தீசுவரா் கோயில் கல்வெட்டு குறிப்பிட்டதோடு, அவா்களின் பெயா் பட்டியலையும் தெளிவாக தெரிவிக்கிறது.
- மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு, மே 27, 2024 அன்று, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை செயலாளரும், டிஆர்டிஓ தலைவருமான டாக்டர் சமீர் வி காமத்தின் பணிக்காலத்தை அவரது ஓய்வு வயதைத் தாண்டி (மே 31, 2024) ஒரு வருட காலத்திற்கு அதாவது மே 31, 2025 வரை நீட்டிக்க ஒப்புதல் அளித்தது.
- அவர் ஆகஸ்ட் 25, 2022 அன்று இந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டார். ஐ.ஐ.டி காரக்பூர் மற்றும் அமெரிக்காவின் ஓஹியோ பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான டாக்டர் காமத், 1989 இல் டிஆர்டிஓவில் இணைந்தார். பல்வேறு பொறுப்புகளில் திறம்பட அவர் பணியாற்றி பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
- அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை 2024 மே 27 முதல் 28-ம் தேதி வரை தில்லியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் பருவநிலை மாற்றம் தொடர்பான இரண்டு நாள், மாநாட்டை நடத்தியது.
- இந்தியச் சூழலில் பருவநிலை செயல்திட்டம், தரவுகளின் தரக் கட்டுப்பாடு, பருவநிலை கணிப்புகளை மேம்படுத்துதல், மக்களுடனான தொடர்புகளை வலுப்படுத்துதல் போன்றவை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. இதில் இந்தியா முழுவதிலுமிருந்து நிபுணர்கள் பங்கேற்றனர்.
- தில்லி ஐஐடி, புவனேஸ்வர் ஐஐடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், தில்லி பல்கலைக்கழகம், காஷ்மீர் பல்கலைக்கழகம், ஐஐஎஸ்சி, அலகாபாத் பல்கலைக்கழகம், வாடியா இன்ஸ்டிடியூட் ஆப் ஹிமாலயன் ஜியாலஜி, இந்திய வானிலை ஆய்வுத் துறை, ஐசிஆர்ஐஎஸ்ஏடி, அறிவியல் தொழில்நுட்ப சிறப்பு மையங்கள் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.