26th MAY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
6ம் கட்ட தேர்தல் வாக்குபதிவு விவரம்
- பொதுத்தேர்தலின் ஆறாம் கட்டத் தேர்தலில் இரவு 11.45 மணி நிலவரப்படி 61.20% வாக்குகள் பதிவாகியுள்ளன. முந்தைய கட்டங்களில் இருந்ததைப் போலவே, வாக்குச்சாவடி வாரியாக, விடிஆர் பயன்பாட்டில் நேரலையில் கிடைக்கும் என்பதால் கள அளவிலான அதிகாரிகளால் இது தொடர்ந்து புதுப்பிக்கப்படும்.
- இரவு 11:45 மணிக்கு மாநில வாரியான தோராய வாக்குப்பதிவு விவரம் பின்வருமாறு பீகார் -08 தொகுதிகள் - 55.24%, ஹரியானா- 10 தொகுதிகள்- 60.4%, ஜம்மு காஷ்மீர்- 1 தொகுதி- 54.30%, ஜார்கண்ட்- 04 தொகுதிகள்- 63.76%, தில்லி - 07 தொகுதிகள் - 57.67 %, ஒடிசா- 06 தொகுதிகள்- 69.56%, உத்தரப் பிரதேசம்- 14 தொகுதிகள் -54.03%, மேற்கு வங்காளம்- 08 தொகுதிகள் - 79.47 %, 8 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் - 58 தொகுதிகள்- 61.2%.
- மாற்றுத்திறனாளிக்கான 11வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் ஜப்பான், கோபியில் நடைப்பெற்று வருகிறது. இதில் 100 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.
- உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி நாளான சனிக்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான 200 மீட்டர் டி12 போட்டியில் சிம்ரன் ஷர்மா 24.95 வினாடிகளில் பந்தய தூரம் கடந்து தங்கப் பதக்கத்தை வென்று இந்தியாவுக்கு ஆறாவது தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தார்.
- சிம்ரன் தனது முந்தைய தனிப்பட்ட சிறந்த 25.16 வினாடிகளில் இருந்து ஒரு வினாடியில் ஐந்தில் ஒரு பங்கை ஷேவ் செய்து தங்கம் வென்றார். தங்கம் வென்ற சிம்ரனுக்கு பாராட்டு மழை குவிந்து வருகிறது.
- T12 பிரிவு பார்வை குறைபாடு உள்ள விளையாட்டு வீரர்களுக்கானது. இந்தியா தற்போது 17 பதக்கங்களுடன் (6 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலம்) புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.
- உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா வென்ற அதிகபட்ச பதக்கங்கள் இதுவாகும். கடந்த ஆண்டு பாரீஸ் நகரில் நடந்த போட்டியில் 10 பதக்கங்கள் (3 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம்) வென்றதே முந்தைய சாதனையாக இருந்தது. அதற்கு முன் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது.
- சீனா 33 தங்கம் உட்பட 87 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. பிரேசில், உஸ்பெகிஸ்தான், கிரேட் பிரிட்டன் மற்றும் அமெரிக்கா அடுத்த இடங்களில் உள்ளன.
- தென்கொரியாவின் யெச்சியான் நகரில் உலக வில் வித்தைப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மகளிா் காம்பவுண்ட் அணிகள் பிரிவில் இறுதிச் சுற்றில் உலகின் நம்பா் ஒன் அணியான இந்தியாவின் ஜோதி சுரேகா வெண்ணாம், அதிதி சுவாமி, பா்னீத் கௌா் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி 232-226 என்ற புள்ளிக் கணக்கில் துருக்கியின் ஹஸல், பேகம் யுவா, அய்ஸெ பெரா ஆகியோா் கொண்ட அணியை வீழ்த்தி தங்கம் வென்றனா்.
- இதன் மூலம் இந்திய மகளிா் அணி காம்பவுண்ட் பிரிவில் ஹாட்ரிக் தங்கம் வென்றுள்ளது. ஷாங்காயில் முதல் கட்டப் போட்டியிலும், இத்தாலியின் டௌனிங் நகரிலும் நடைபெற்ற போட்டியிலும் தங்கம் வென்றிருந்தனா்.
- காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் ஆசிய சாம்பியன் ஜோதி சுரேகா-பிரியான்ஷ் இணை தங்கம் வெல்லும் வாய்ப்பைத் தவற விட்டனா். அமெரிக்க இணையான ஒலிவியா-சாயரிடம் 155-153 என்ற புள்ளிக் கணக்கில் கடும் சவாலுக்கு பின் வெள்ளியைக் கைப்பற்றினா்.