18th MAY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
2024ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.2 சதவீதம் - ஐநா அறிக்கை
- ஐநாவின் பொருளாதாரம் குறித்த சமீபத்திய மதிப்பீட்டு அறிக்கையில் , 2024ம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது 6.9 சதவீதமாக விரிவடையும்.
- 2025ம் ஆண்டில் இது 6.6 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 2025ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 6.6 சதவீதமாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- விமானப்படை குடும்ப நலச் சங்கத்தின் தலைவர் திருமதி நீதா சௌத்ரி விமானப்படை பாலம் விமானப்படை தளத்தில் சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளுக்கான மேம்பட்ட சிகிச்சை மையமான உமீத் நிகேதனைத் திறந்து வைத்தார்.
- சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளின் தனித்துவமான திறன்களுக்கு ஏற்ப பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மூலம் வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்துவது மற்றும் சிறந்த வளர்ப்பு சூழலை உருவாக்க உமீத் நிகேதன் உருவாக்கப்பட்டுள்ளது.
- அவர்களின் உணர்வுகளை ஆய்வு செய்தல், பேச்சு சிகிச்சை, விளையாட்டு போன்றவற்றின் மூலம் இந்த மையம் சிறப்புக் குழந்தைகளின் உடல், மன மற்றும் சமூக நல்வாழ்வை மேம்படுத்தும் வகையில் செயல்படும். பல்வேறு வகையான திட்டங்களை வழங்குகிறது. உமீத் நிகேதன் 55 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சேவை செய்யும்.
- பயிற்சி பெற்ற சிறப்பு கல்வியாளர்கள் குழு இங்கு உள்ளது. இதன் திறப்பு விழாவில் நாடு முழுவதிலுமிருந்து விமானப்படை குடும்ப நலச் சங்கங்களின் அனைத்து மண்டல தலைவர்களும் கலந்து கொண்டனர்.
- விமானப்படை குடும்பங்களின் நலனுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கான இந்திய விமானப்படையின் உறுதிப்பாட்டை இந்த நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகிறது.
- இந்தியா – ஆஸ்திரேலியா – இந்தோனேசியா இடையேயான இரண்டாவது முத்தரப்பு கடல்சார் பாதுகாப்புப் பயிலரங்கம் 2024 மே 15 முதல் 17-ம் தேதி வரை கொச்சியில் உள்ள ஐஎன்எஸ் துரோணாச்சார்யா தளத்தில் நடைபெற்றது.
- 'இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகள்' என்ற கருப்பொருளில் இந்தப் பயிலரங்கம் நடைபெற்றது.
- இந்தப் பிராந்தியத்தில் உள்ள மூன்று கடல்சார் நாடுகளுக்கிடையேயான கடல்சார் பாதுகாப்பு சவால்கள் மற்றும் கடல்சார் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து இதில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
- தெற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தின் சார்பில் நடத்தப்பட்ட இந்தப் பயிலரங்கில் மூன்று நாடுகளின் கடற்படைகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
- பயிலரங்கின் போது, தகவல் பரிமாற்ற வழிமுறைகள், கடல்சார் கள விழிப்புணர்வு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு, கடல்சார் சட்ட அமலாக்கம், திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்றன.