11th MAY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
- மூளைச்சாவு அடைந்தவர்கள் கடந்த ஆண்டு 178 பேர் 1000 உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர். 1000 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மூலம் பயன்பெற்றுள்ளனர்.
- இந்தியாவில் உடல் உறுப்பு தானம் மற்றும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அதிகம் மேற்கொண்டதற்கு தமிழகத்திற்கு சிறந்த மாநிலமாக பட்டம் வழங்கினர். கடந்த 2022ம் ஆண்டு 156 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர்.
- கடந்த 2023ம் ஆண்டு முதல் இதுவரை, 280 பேரிடமிருந்து உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டு, 1,595 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளதாக தெரிவித்தார். கடந்த 6, 7 ஆண்டுகளில் இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது.
- தேர்தல் ஆணையத்தின் 07.05.2024 தேதியிட்ட இரண்டு செய்திக் குறிப்பு மற்றும் 08.05.2024 தேதியிட்ட செய்திக் குறிப்பு ஆகியவற்றின் தொடர்ச்சியாக, நடப்பு 2024 பொதுத் தேர்தலில் 93 தொகுதிகளில் நடந்த மூன்றாம் கட்ட தேர்தலில் 65.68% வாக்குகள் பதிவாகியுள்ளன.
- மூன்றாம் கட்ட தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 66.89 சதவீதத்தினரும், பெண் வாக்காளர்கள் 64.41 சதவீதத்தினரும், மூன்றாம் பாலினத்தவர்களில் 25.2 சதவீதத்தினரும் வாக்களித்துள்ளனர்.
- 3 ஆம் கட்டத்திற்கான மாநில வாரியாகவும், தொகுதி வாரியாகவும் வாக்குப்பதிவு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பீகாரில் இரண்டு வாக்குச்சாவடிகளிலும், மத்திய பிரதேசத்தில் நான்கு வாக்குச்சாவடிகளிலும் மூன்றாம் கட்டத் தேர்தலின் மறுவாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
- இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் அவையில் பாலஸ்தீனத்தை முழு நேர உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று அரபு நாடுகள் கூட்டமைப்பு தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தன.
- இந்த தீர்மானத்தின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் அவையின் அவசர கூட்டம் நேற்று (10-05-24) கூடியது. இந்த கூட்டத்தில் பாலஸ்தீனத்தை ஐ.நா அவையில் முழு நேர உறுப்பினராக சேர்ப்பது தொடர்பான அறிக்கை மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. 193 நாடுகள் உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா சபையில், இந்தியா உள்ளிட்ட 143 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.
- இந்த தீர்மானத்திற்கு அமெரிக்கா, இஸ்ரேல், ஹங்கேரி, அர்ஜெண்டினா, பப்புவா நியூ கினியா உள்ளிட்ட 9 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து எதிராக வாக்களித்தன. மேலும், 25 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தன.
- அதிக பெரும்பான்மை ஆதரவின் மூலம், பாலஸ்தீனம் ஐ.நா சபையில் முழு நேர உறுப்பினராக இருக்கவிருக்கிறது.
- கடந்த மாதம், பாலஸ்தீனத்தை உறுப்பு நாடாக அங்கீகரிக்கக் கோரி ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் அமெரிக்காவின் விட்டோ அதிகாரத்தால் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.