7th APRIL 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
கடற்கொள்ளை தடுப்பு ஐஎன்எஸ் சாரதா கப்பலுக்கு விருது
- சோமாலியாவின் கிழக்கு கடற்கரையில் கடற்கொள்ளையர்களால் ஈரான் நாட்டு மீன்பிடி கப்பல் கடத்தப்பட்டது. இதுதொடர்பாக தகவல் கிடைத்ததும் இந்திய கடற்படை ஐஎன்எஸ் சாரதா கப்பபை அனுப்பி வைத்தது.
- அதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 2ம் தேதி கடற்கொள்ளையர்கள் பிடிக்கப்பட்டு, மீன்பிடி கப்பலில் இருந்து 11 ஈரான் நாட்டு மாலுமிகள் மற்றும் 8 பாகிஸ்தானியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
- இந்நிலையில், கொச்சியில் உள்ள தெற்கு கடற்படை தளத்திற்கு வந்த கடற்படை தளபதி அட்மிரல் ஹரிகுமார், கடற்கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாக நடத்தியதற்காக ஐஎன்எஸ் சாரதாவுக்கு 'ஆன் தி ஸ்பாட் யூனிட் சிடேஷன்' விருது வழங்கி பாராட்டினார்.