Type Here to Get Search Results !

3rd APRIL 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


3rd APRIL 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

2025ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.6 சதவீதம் -  உலக வங்கி 
  • இந்தியாவின் பொருளாதாரம் குறித்த கணிப்புகளை வெளியிட்டுள்ள உலக வங்கி, நாட்டின் ஜிடிபி வளர்ச்சி (GDP) புல்லட் வேகத்தில் இருக்கும் என்று கூறியுள்ளது. 2024ம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.5 சதவீத வளர்ச்சியை எட்டும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. 
  • முன்னதாக, உலக வங்கி இந்த காலகட்டத்திற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை 1.2 சதவீதம் குறைவாக மதிப்பிட்ட நிலையில், இப்போது அது இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி மதிப்பீட்டை 7.5 சதவீதமாக மாற்றியுள்ளது.
  • 2025 ஆம் ஆண்டில் 6.1 சதவீத வளர்ச்சி விகிதத்துடன் தெற்காசியா அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு உலகின் மிக வேகமாக வளரும் பிராந்தியமாக இருக்கும் என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 
  • உலக வங்கி செவ்வாயன்று தெற்காசிய பொருளாதார வளர்ச்சி குறித்து வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில், தெற்காசியாவின் வளர்ச்சி விகிதம் 2024 ஆம் ஆண்டில் 6.0 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும், இதற்கு முக்கிய காரணமாக இருப்பது, இந்தியாவில் ஏற்பட உள்ள வலுவான வளர்ச்சி, பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் நிலை உள்ளது தான் என தெரிவித்தது. எனினும், 2025ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.6 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
  • 2024-25 ஆம் ஆண்டில் வங்கதேசத்தின் பொருளாதாரம் 5.7 சதவிகிதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது அதே நேரத்தில் பாகிஸ்தானின் பொருளாதாரம் 2.3 சதவிகிதம் என்ற அளவிலும், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2.5 சதவிகிதம் என்ற அளவிலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிய விளையாட்டு ஆணையத்தின் உறுப்பினராக ஷைனி வில்சன் நியமனம்
  • இந்திய உணவுக்கழகத்தின் மண்டல பொது மேலாளரும், முன்னாள் ஓட்டப்பந்தய வீராங்கனையுமான ஷைனி வில்சன் ஆசிய விளையாட்டு ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்த நியமனம் 2024 முதல் 2028 வரை நான்கு ஆண்டு காலத்திற்கு உரியதாகும்.
  • இந்த நியமனத்திற்கான ஆசிய விளையாட்டு ஆணையத்தின் கூட்டம் இணைய வழியாக ஆணையத்தின் தலைவரும், ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான முகமத் சுலைமான் தலைமையில் நடைபெற்றது.
பாட்னா ஐ.ஐ.டியுடன் சட்லஜ் ஜல் வித்யுத் நிகம் (எஸ்.ஜே.வி.என்) புரிந்துணர்வு ஒப்பந்தம் 
  • சுரங்கப்பாதை திட்டங்களில் மேம்பட்ட புவியியல் மாதிரிகளைப் பயன்படுத்த பாட்னாவில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்துடன் சட்லஜ் ஜல் வித்யுத் நிகம் (எஸ்.ஜே.வி.என்) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதனால் நேரம் மற்றும் செலவு கணிசமாகக் குறைக்கப்படுகிறது.
  • பல்வேறு புவிசார் தொழில்நுட்ப தரவுகளை ஒருங்கிணைக்கும் அதிநவீன வழிமுறைகளை உருவாக்குவதே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் என்று எஸ்.ஜே.வி.என் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திருமதி கீதா கபூர் தெரிவித்தார். 
  • இவற்றில் புவியியல் ஆய்வுகள், ஆழ்துளை தரவு, புவி இயற்பியல் அளவீடுகள், எஸ்.ஜே.வி.என் திட்டங்களின் கண்காணிப்பு தரவு ஆகியவை அடங்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel