Type Here to Get Search Results !

2nd APRIL 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


2nd APRIL 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

கந்திலி அருகே விஜயநகர மன்னா்கள் கால நடுகல் கண்டுபிடிப்பு
  • திருப்பத்தூா் மாவட்ட தொன்மை பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளா் பிரபு தலைமையில் கள ஆய்வு மேற்கொண்டபோது கந்திலி அருகே தொப்பலக்கவுண்டனூா் என்ற இடத்தில் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
  • நடுகல்லானது 3 அடி அகலம்,3 அடி உயரமும் கொண்டதாக உள்ளது. புடைப்பு சிற்பங்களாக நடுகல் காட்சி விவரிக்கப்பட்டுள்ளது. நடுகல்லின் இடதுபுறம் குதிரையில் வீரன் ஒருவன் போா் புரியும் நிலையில் காணப்படுகிறாா். 
  • அவரது இடது கையால் குதிரையின் பிடிக்கயிற்றை பிடித்துக்கொண்டு வலது கையில் பெரிய வாளினை ஏந்தி எதிரில் உள்ள வில்வீரனை தாக்க முயற்சிக்கிறான். 
  • எதிரில் உள்ள வீரன் எய்த அம்பு குதிரை வீரனின் தலையில் பாய்ந்து வெளிவந்த நிலையிலும் அவா் வீரத்தோடு போா் புரிவது இங்கு விவரிக்கப்பட்டுள்ளது. 
  • குதிரை வீரன் எய்த வேல் எதிா் உள்ள வில் வீரனின் மாா்பை துழைத்து வெளிவந்த நிலையில், அவரும் ஆவேசத்துடன் போா் புரிவதாக காட்சிப்படுத்தியுள்ளனா். 
  • வில்வீரன் இடது கையில் வில்லினை ஏந்திய நிலையில் தனது வலது கையில் உள்ள வாளினால் குதிரையின் முகத்தைத் தாக்கியவாறு காணப்படுகின்றாா். 
  • தலையில் அம்பு பாய்ந்து மறுபுறம் வெளிவந்த நிலையில் ஒரு குதிரை வீரரும், மாா்பில் வேல் பாய்ந்து மறுபுறம் வந்த நிலையில் ஒரு வில் வீரரும் போரிடும் நிகழ்வை நடுகல் நமக்கு எடுத்துச் சொல்கிறது. 
  • தமிழா்களின் போா் நிகழ்வு எத்தகைய வீரமிக்கது என்பதற்கு இந்த நடுகல் ஒரு சான்றாகும். இந்த நடுகல் இப்பகுதியில் நடைபெற்ற போரில் உயிா் துறந்த இரண்டு வீரா்களுக்கு எடுக்கப்பட்ட நடுகல்லாகும். 
  • இந்த நடுகல் விஜயநகர மன்னா்கள் ஆட்சிக் காலத்தின் தொடக்க காலத்தைச் சோ்ந்ததாக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அதாவது கி.பி.14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தது.
2023-24-ம் நிதியாண்டில் சரக்கு கையாளுதலில் இந்தியாவின் பெரிய துறைமுகங்களில் பாராதீப் துறைமுகம் முதலிடம் பிடித்துள்ளது
  • பாராதீப் துறைமுக ஆணையம் 2023-24-ம் நிதியாண்டில் சாதனை அளவாக 145.38 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது. இதன் மூலம் சமீபத்திய சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. 
  • இதன் மூலம் கண்ட்லாவில் உள்ள தீன்தயாள் துறைமுகத்தையும் விஞ்சி நாட்டின் மிக உயர்ந்த சரக்கு கையாளும் முக்கிய துறைமுகமாக உருவெடுத்துள்ளது. 
  • 56 ஆண்டுகால செயல்பாட்டு வரலாற்றில் முதல் முறையாக, தீன்தயாள் துறைமுகத்தின் முந்தைய சாதனைகளை பாராதீப் துறைமுகம் முறியடித்துள்ளது. பாராதீப் துறைமுகம் ஆண்டு அடிப்படையில் 10.02 மில்லியன் மெட்ரிக் டன் (7.4%) சரக்கு கையாளும் வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது.
  • இந்த நிதியாண்டில், இத்துறைமுகம் முன்னெப்போதும் இல்லாத அளவாக 59.19 மில்லியன் மெட்ரிக் டன் கடலோர கப்பல் போக்குவரத்தை மேற்கொண்டுள்ளது. 
  • இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 0.76 மில்லியன் மெட்ரிக் டன், அதாவது 1.30 சதவீதம் வளர்ச்சியாகும். அனல் நிலையங்களுக்கான நிலக்கரி கடலோர கப்பல் போக்குவரத்து 43.97 மில்லியன் மெட்ரிக் டன்களை எட்டியுள்ளது. 
  • அதாவது முந்தைய ஆண்டின் சரக்கு கையாளுதலை விட 4.02% அதிகமாகும். இதனால், பாராதீப் துறைமுகம் நாட்டின் கடலோர கப்பல் போக்குவரத்து மையமாக உருவாகி வருகிறது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிதி பிரிவில் ஸ்கோச் இஎஸ்ஜி விருது 2024-ஐ ஊரக மின்மய கழகம் வென்றுள்ளது
  • மின்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய மகாரத்னா பொதுத்துறை நிறுவனமும், வங்கி சாராத நிதிக்கழக முன்னணி நிறுவனமுமான ஊரக மின்மய கழகம், 'புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிதிப்' பிரிவில் ஸ்கோச் இஎஸ்ஜி விருது 2024-ஐ வென்றுள்ளது. 
  • இந்த விருது நிலையான நிதியுதவிக்கான ஊரக மின்மய கழகத்தின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பசுமையான எதிர்காலத்திற்கு வழி வகுத்தல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாற்றத்தை துரிதப்படுத்துகிறது. 
  • ஊரக மின்மய கழகத்தின் செயல் இயக்குநர் திரு டி.எஸ்.சி. போஷ் புது தில்லியில் இந்த விருதினைப் பெற்றுக் கொண்டார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel