27th APRIL 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ஒன்றிய அரசு ரூ.285 கோடி ஒதுக்கியது
- தமிழகத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ரூ.115.49 கோடியும், அதே மாதம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த மழை, வெள்ள பாதிப்புக்காக ரூ.160.61 கோடியும் நிவாரணமாக ஒன்றிய அரசு விடுவித்துள்ளது.
- அதேபோல் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளதாக நிவாரணம் கோரிய கர்நாடக அரசுக்கு ரூ.3,454 கோடி நிதியை ஒன்றிய அரசு விடுவித்தது.
- சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்திய அணிகள் 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்கள்.
- மகளிர் அணி (ஜோதி சுரேகா, அதிதி ஸ்வாமி, பர்ணீத் கௌர் கூட்டணி) இத்தாலியை 236-225 என்ற புள்ளிகளில் வீழ்த்தி தங்கம் வென்றது.
- ஆடவர் அணி (அபிஷேக் வர்மா, பிரயன்ஷ், பிரதமேஷ்) நெதர்லாந்தினை 238-231 என்ற புள்ளிகளில் வீழ்த்தி தங்கம் வென்றது.
- காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வா்மா/ஜோதி சுரேகா கூட்டணி எஸ்டோனியாவை 158-157 புள்ளிகளில் வென்று தங்கம் வென்றனர். நடப்பு ஆசிய விளையாட்டு சாம்பியன் ஜோதிக்கு இது இரட்டை தங்கப் பதக்கமாகும்.