Type Here to Get Search Results !

இந்தியாவில் வேலைவாய்ப்பு குறித்த ஆய்வு அறிக்கை 2023 / EMPLOYMENT IN INDIA REPORT 2023

  • இந்தியாவில் வேலைவாய்ப்பு குறித்த ஆய்வு அறிக்கை 2023 / EMPLOYMENT IN INDIA REPORT 2023: இந்தியாவில் வேலையின்மை முன்பு இருந்ததை விட கணிசமாக குறைந்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 
  • கிராமப்புறங்களில் வேலையின்மை விகிதம் 2022-23ல் 2.4% ஆக குறைந்துள்ளது என்றும், அதே நேரத்தில், நகர்ப்புறங்களில் வேலையின்மை 5.4 சதவீதமாக குறைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • குறிப்பாக பெண்களுக்கு மத்தியில் வேலைவாய்ப்பு சதவீதமும் அதிகரித்துள்ளது. ஏஎன்ஐ செய்தி நிறுவனம் அரசு நிறுவனங்களின் தரவுகளை ஆய்வு செய்த பிறகு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 
  • ஐந்து அரசாங்க நிறுவனங்களின் தரவுகளின் பகுப்பாய்வில், கடந்த சில ஆண்டுகளில் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பு (PLFS), EPFO, RBI, தேசிய தொழில் சேவைகள் NCS போர்டல் மற்றும் மத்திய அரசின் பல்வேறு வேலைகளை மையப்படுத்திய திட்டங்கள் ஆகியவற்றின் தரவுகளில் கடந்த சில ஆண்டுகளில் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும், வேலையின்மை விகிதத்தில் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
  • கடந்த ஆறு ஆண்டுகளில் காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பு அல்லது PLFS தரவின்படி தொழிலாளர் பங்கேற்பு விகிதம் மற்றும் தொழிலாளர் மக்கள் தொகை விகிதத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
  • 2017-18ல் 46.8 சதவீதமாக இருந்த வேலை வாய்ப்பு 2022-23ல் 50 சதவீதமாக உயர்ந்துள்ளதாக கடந்த ஆறு ஆண்டுகளுக்கான PLFS தரவு காட்டுகிறது. 
  • அதேபோல், தொழிலாளர் பங்கேற்பு 2017-18ல் 49.8 சதவீதத்திலிருந்து 2022-23ல் 57.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2017-18ல் 6 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம் 2022-23ல் 3.2 சதவீதமாக குறைந்துள்ளது.
  • குறிப்பாக பெண்களிடையே வேலையின்மை குறைந்துள்ளதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. கிராமப்புறங்களில் வேலையின்மை விகிதம் 2017-18ல் 5.3 சதவீதத்தில் இருந்து 2022-23ல் 2.4 சதவீதமாக குறைந்துள்ளது. 
  • அதே காலகட்டத்தில் நகர்ப்புறங்களில் 7.7 சதவீதத்தில் இருந்த வேலையின்மை 5.4 சதவீதமாக குறைந்துள்ளது. பெண்களிடையே வேலையின்மை விகிதம் 2017-18ல் 5.6 சதவீதத்தில் இருந்து 2022-23ல் 2.9 சதவீதமாக குறைந்துள்ளது. 
  • இதே காலகட்டத்தில் இளைஞர்களிடையே வேலையின்மை விகிதம் 17.8 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைந்துள்ளது.
  • கடந்த ஆறு ஆண்டுகளில் படித்த நபர்களுக்கான வேலைவாய்ப்பு கணிசமாக அதிகரித்துள்ளது PLFS தரவு காட்டுகிறது. பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 2017-18ல் 49.7 சதவீதத்திலிருந்து 2022-23ல் 55.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. 
  • முதுகலை பட்டதாரி மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கான வேலைவாய்ப்பு விகிதம் 67.8 சதவீதத்தில் இருந்து 70.6 சதவீதமாக அதிகரித்துள்ளது என தெரிய வந்துள்ளது.
  • ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் தரவுகளின் பகுப்பாய்வில் 6.1 கோடி நபர்கள் புதிய உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கடந்த ஆறு ஆண்டுகளில். RBI ஆல் வெளியிடப்பட்ட சமீபத்திய KLEMS தரவுத்தளமும் (பொருளாதாரத்தின் 27 தொழில்கள்/துறைகளை உள்ளடக்கியது) 9 ஆண்டுகளில் நாட்டில் 2013-14ல் 47 கோடியாக இருந்த வேலை வாய்ப்பு 2021-22ல் 55.3 கோடியாக அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுகிறது. 
  • 2022-23 உடன் ஒப்பிடும்போது 2023-24 இல் 214 சதவீதம் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக தேசிய தொழில் சேவை (NCS) போர்டல் கண்டுள்ளது.

ENGLISH

  • EMPLOYMENT IN INDIA REPORT 2023: A recent survey revealed that unemployment in India has dropped significantly from earlier levels. The unemployment rate in rural areas has come down to 2.4% in 2022-23, while unemployment in urban areas has come down to 5.4%.
  • The percentage of employment has also increased, especially among women. News agency ANI published this information after analyzing the data of government agencies.
  • An analysis of data from five government agencies revealed that employment opportunities have increased over the past few years.
  • Data from the Periodic Labor Force Survey (PLFS), EPFO, RBI, National Career Services NCS portal and various job-focused schemes of the central government have indicated an increase in employment and a decline in the unemployment rate over the past few years.
  • The Periodic Labor Force Survey or PLFS data also revealed an improvement in the labor force participation rate and labor force population ratio over the past six years.
  • PLFS data for the last six years shows that employment has increased from 46.8 per cent in 2017-18 to 50 per cent in 2022-23.
  • Likewise, labor force participation has increased from 49.8 percent in 2017-18 to 57.9 percent in 2022-23. The unemployment rate has come down from 6 percent in 2017-18 to 3.2 percent in 2022-23.
  • The report also indicates that unemployment among women has decreased. The rural unemployment rate has come down from 5.3 per cent in 2017-18 to 2.4 per cent in 2022-23.
  • During the same period, urban unemployment fell from 7.7 percent to 5.4 percent. The unemployment rate among women has come down from 5.6 percent in 2017-18 to 2.9 percent in 2022-23.
  • During the same period, the youth unemployment rate fell from 17.8 percent to 10 percent.
  • PLFS data shows that employment for educated persons has increased significantly in the last six years. Graduate employment has increased from 49.7 per cent in 2017-18 to 55.8 per cent in 2022-23.
  • It has been revealed that the employment rate for postgraduates and above has increased from 67.8 per cent to 70.6 per cent.
  • An analysis of data from the Employees' Provident Fund showed that 6.1 crore people joined as new members.
  • In the last six years. The latest KLEMS database released by RBI (covering 27 industries/sectors of the economy) also shows that in 9 years employment in the country has increased from 47 crore in 2013-14 to 55.3 crore in 2021-22.
  • The National Career Service (NCS) portal has seen a 214 per cent increase in job openings in 2023-24 compared to 2022-23.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel