Type Here to Get Search Results !

25th APRIL 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

25th APRIL 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

வடகிழக்கு பிராந்தியத்தில் சுற்றுலா மேம்பாட்டுக்கான பணிக்குழுவின் 4-வது கூட்டம்

  • வடகிழக்குப் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான பணிக்குழுவின் 4-வது கூட்டம் புதுதில்லியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அசாம், அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய அனைத்து வடகிழக்கு மாநிலங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 
  • நித்தி ஆயோக், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம், ஜவுளி அமைச்சகம், சுற்றுலா அமைச்சகம், கலாச்சார அமைச்சகம், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், ஆகியவற்றைச் சேர்ந்தவர்களும் தனியார் பங்குதாரர்களும் இதில்  கலந்து கொண்டனர்.
  • தனியார் துறை உள்ளிட்ட பங்குதாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் வடகிழக்கு பிராந்தியத்தில் சுற்றுலாவின் விரிவான மற்றும் நிலையான வளர்ச்சிக்கு செயல் திட்டத்துடன் உத்திகள் குறித்து பணிக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
26-வது உலக எரிசக்தி மாநாடு
  • நெதர்லாந்தின் ரோட்டர்டாமில் 26-வது உலக எரிசக்தி மாநாடு நடைபெறுகிறது. இதில் அமைச்சர்கள் நிலையிலான வட்டமேசை மாநாடு நடைபெற்றது. 
  • துபாயில் நடைபெற்ற ஐ.நா பருவநிலை மாற்ற மாநாட்டின் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் குறித்து இந்த வட்ட மேசை மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
  • எரிசக்தி கண்டுபிடிப்பு, ஒத்துழைப்பு மற்றும்  பரிமாற்றங்களை நிர்வகிப்பது குறித்து அமைச்சர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 
  • உலக எரிசக்தி மாநாட்டின் மூன்றாம் நாளில்  நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில், நெதர்லாந்தின் துணைப் பிரதமரும் பருவநிலை மற்றும் எரிசக்தி கொள்கை அமைச்சருமான திரு ராப் ஜெட்டன் கலந்து கொண்டார். இந்தியா சார்பில் இதில் மத்திய மின்துறைச் செயலாளர் திரு பங்கஜ் அகர்வால் பங்கேற்றார்.
  • உலகெங்கிலும் தூய்மையான எரிசக்தி மாற்றத்திற்கான  முக்கிய மாநாடக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'மக்கள் மற்றும் பூமிக்கு ஏற்ற வகையில் எரிசக்தியை மறுவடிவமைப்பு செய்தல்’ என்ற கருப்பொருளில் இந்த மாநாடு நடைபெறுகிறது.  
  • நான்கு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், உலகளாவிய எரிசக்தி மாற்றங்களை முன்னோக்கிக் கொண்டு செல்வதில் பல்வேறு தரப்பினரின் பங்கு குறித்து விரிவாக விவாதிக்கப்படுகிறது.
  • உலக எரிசக்தி கவுன்சில் நீடித்த எரிசக்தி விநியோகம் மற்றும் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் 1923 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. 
  • இதில் இந்தியா உறுப்பினராக உள்ளது. மத்திய மின்சார அமைச்சகத்தின் ஆதரவிலும், நிலக்கரி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் வெளியுறவு அமைச்சகங்களின் ஆதரவுடனும் உலக எரிசக்தி கவுன்சிலில் இந்தியா செயல்பட்டு வருகிறது.
ஆர்இசி லிமிடெட் நிறுவனத்திற்கும் எஸ்ஏசிஇ நிறுவனத்திற்கும் இடையே கடன் ஒத்துழைப்பு ஒப்பந்தம்
  • இந்தியாவில் நிலையான வளர்ச்சியை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மகாரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனமும், மின்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள முன்னணி வங்கிசாரா நிதி நிறுவனமுமான ஆர்இசி லிமிடெட், இந்தியாவில் தகுதியான பசுமை திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக ஜப்பானிய யென் தொகையான 60.536 பில்லியனை பசுமைக் கடனாகப் பெறுகிறது. 
  • இத்தாலிய ஏற்றுமதி கடன் நிறுவனம், எஸ்ஏசிஇ-யிடமிருந்து இந்தக் கடன் பெறப்படுகிறது.  இந்திய அரசின் ஒரு  நிறுவனத்திற்கும் எஸ்ஏசிஇ நிறுவனத்திற்கும் இடையே ஏற்படும் முதல் கடன் ஒத்துழைப்பு இதுவாகும்.
  • இந்த கடன் வசதி ஆர்இசி நிறுவனத்திற்கான உத்திசார் முதலீடாக அமையும். இது இந்த நிறுவனத்தின் பசுமை நிதி கட்டமைப்புடன் இணைந்து, நிலையான வளர்ச்சியை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel