23rd APRIL 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
2023-24ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி 10,931 கோடி டாலராக உயர்வு
- சர்வதேச பதற்ற நிலையால் சில முக்கிய சந்தைகளில் மந்தநிலை நிலவிய சூழலிலும், கடந்த 2023-24 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி 10,931 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
- முந்தைய 2022-23 ஆம் நிதியாண்டில் இது 10,704 கோடி டாலராக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் நாட்டின் பொறியியல் பொருள்களின் ஏற்றுமதி 2.13 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. காஸா மற்றும் உக்ரைன் போர் காரணமாக முக்கிய ஏற்றுமதி சந்தைகளில் கடந்த நிதியாண்டு மந்தநிலை நிலவியது.
- உலக சாம்பியனுடன் விளையாட உள்ள வீரரை தேர்வு செய்யும் கேண்டிடேட் செஸ் தொடர் கனடாவின் டொராண்டா நகரில் நடைபெற்றது.
- 14 சுற்றுகளை கொண்ட இந்த தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ் தனது கடைசி சுற்றில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவுடன் மோதினார். இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் 71-வது காய் நகர்த்தலின் போது ஆட்டத்தை டிராவில் முடித்தார்.
- 17 வயதான டி.குகேஷ் 9 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சுமார் ரூ.78.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
- இதன் மூலம் கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற 2-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் குகேஷ். இதற்கு முன்னர் 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் கடந்த 2014-ம் ஆண்டு வெற்றி பெற்றிருந்தார்.
- மேலும் 40 ஆண்டுகளுக்குப் பிறகு உலக சாம்பியன்ஷிப் பட்டம் வெல்வதற்கான ஆட்டத்தில் விளையாட தகுதி பெற்றுள்ள இளம் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார் 17 வயதான குகேஷ். இதன் மூலம் அவர், இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார்.
- மகளிருக்கான கேண்டிடேட்ஸ் தொடரில் சீனாவின் ஸோங்ஸி டான் 9 புள்ளிகளை குவித்து சாம்பியன் பட்டம் வென்றார். இந்திய கிராண்ட் மாஸ்டர்களான கொனேரு ஹம்பி, ஆர். வைஷாலி, சீனாவின் டிங்ஜேய் லெய் ஆகியோர் தலா 7.5 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பகிர்ந்து கொண்டனர். கொனேரு ஹம்பி கடைசி சுற்றில் சீனாவின் டிங்ஜேய் லெயையும் ஆர். வைஷாலி, ரஷ்யாவின் கேத்ரினா லக்னோவையும் தோற்கடித்தனர்.
- கேண்டிடேட்ஸ் தொடரில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா, ரஷ்யாவின் நெபோம்னியாச்சி, அமெரிக்காவின் ஃபேபியானோ கருனா ஆகியோர் தலா 8.5 புள்ளிகளுடன் 2 முதல் 4-வது இடங்களை பிடித்தனர்.
- இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா 7 புள்ளிகளுடன் 5-வது இடம் பிடித்தார். அவர், தனது கடைசி சுற்றில் அஜர்பைஜானின் நிஜாத் அபசோவை தோற்கடித்தார்.
- மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டரான விதித் குஜராத்தி 6 புள்ளிகள் பெற்று 6-வது இடத்துடன் தொடரை நிறைவு செய்தார். விதித் குஜராத்தி தனது கடைசி சுற்றில் பிரான்ஸின் ஃபிரோஸ்ஜா அலிரேசாவுக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்திருந்தார். ஃபிரோஸ்ஜா அலிரேசா 5 புள்ளிகளுடன் 7-வது இடத்தையும், நிஜாத் அபசோவ் 3.5 புள்ளிகளுடன் கடைசி இடத்தையும் பிடித்தனர்.
- மத்திய தொலைத் தொடர்புத் துறையின் முதன்மையான தொலைத்தொடர்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான சி-டாட் மற்றும் ஜோத்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) ஆகியவை "5ஜி நெட்வொர்க் மற்றும் அதற்கு அப்பால் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டில் தானியங்கி சேவை நிர்வாகத்தி்ற்கான" ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
- கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் மலிவு விலையில் பிராட்பேண்ட் மற்றும் மொபைல் சேவைகளை செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப வடிவமைப்பு, மேம்பாடு, தொலைத்தொடர்பு தயாரிப்புகள், வணிகமயமாக்கல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு நிறுவனங்களுக்கு நிதி ஆதரவை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியத்தின் (டி.டி.டி.எஃப்) கீழ் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
- 5ஜி போன்ற நெட்வொர்க்கில் உருவாக்கப்பட்ட தொடர்ச்சியான தகவல்களைப் பயன்படுத்தி தானியங்கி நெட்வொர்க் மேலாண்மை, தவறு கண்டறிதல் மற்றும் குறைபாடுகள் கண்டறியும் தொழில் நுட்பங்களுக்கான செயற்கை நுண்ணறிவு கட்டமைப்புகளை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கம் ஆகும்.
- இந்த ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வில் சி-டாட் இயக்குநர் டாக்டர் பங்கஜ் குமார் தலேலா, ஜோத்பூர் ஐஐடியின் மின் பொறியியல் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் சாய் கிரண் ஆகியோர் கலந்து கொண்டனர்.