Type Here to Get Search Results !

22nd APRIL 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


22nd APRIL 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்) நிதி நிர்வாகத்திற்கான புதிய 'கணக்கு மேலாளர் மென்பொருளை' செயல்படுத்துகிறது
  • நிதி நிர்வாகத்திற்காக சி.எஸ்.ஐ.ஆர் நிறுவனத்தாலேயே உருவாக்கப்பட்ட 'கணக்கு மேலாளர் மென்பொருளை' (ஏஎம்எஸ்) வெற்றிகரமாக செயல்படுத்துவதன் மூலம் இந்நிறுவனம் நாட்டில் உள்ள மற்ற அனைத்து மத்திய தன்னாட்சி நிறுவனங்களுக்கும் ஒரு முன்மாதிரியை உருவாக்கி உள்ளது.
  • பொது நிதி விதிகள் உருவாக்குவதற்கு காலக்கெடுவான ஜூன் 30-க்கு முன்னதாகவே 2023-24-ம் நிதியாண்டிற்கான தனது வருடாந்தர கணக்குகளை 2024 ஏப்ரல் 01 அன்று சிஎஸ்ஐஆர் உருவாக்கியது. 
  • 2023-24 நிதியாண்டுக்கான வருடாந்தர கணக்குகள் ஏற்கனவே தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி (சிஏஜி) அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
  • சிஎஸ்ஐஆர் மென்பொருளின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று அதன் நிகழ்நேர கண்காணிப்புத் திறன் ஆகும். நிதி நடவடிக்கைகளைப் பயனர்கள் நிகழ்நேரத்தில் கண்காணித்தல், சரியான நேரத்தில் தலையீடு, சிறந்த முடிவெடுத்தல் ஆகியவற்றை இது உறுதிசெய்கிறது.
மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் முய்சுவின் கட்சி 66 இடங்களில் வெற்றி
  • மஜ்லிஸ் எனப்படும் 93 உறுப்பினர்களை கொண்ட மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் (பிஎன்சி) 86 இடங்களில் 66 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. 
  • முன்னாள் அதிபர் இப்ராகிம் முகமது சோலிஹ் தலைமையிலான பிரதான எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி (எம்டிபி) 12 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. 
  • மக்கள் மஜ்லிஸ் என்பது மாலத்தீவின் ஒருசபையை கொண்ட சட்டமன்ற அமைப்பாகும். மாலத்தீவின் அரசியலமைப்பில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள சட்டங்களை இயற்றவும், திருத்தவும் மஜ்லிஸுக்கு அதிகாரம் உள்ளது.
ராஷ்ட்ரிய ரக்ஷா பல்கலைக்கழகம் மற்றும் பிரான்சின் ஸ்டார்பர்ஸ்ட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • காந்திநகர், குஜராத்-22 ஏப்ரல் 2024-ராஷ்ட்ரிய ரக்ஷா பல்கலைக்கழகம் (RRU) மற்றும் பிரான்சின் ஸ்டார்பர்ஸ்ட் ஆகியவை ஒரு முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடும் விழாவின் மூலம் விண்வெளி, பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு கண்டுபிடிப்புகளின் முன்னேற்றத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் கொண்டாடின. 
  • இந்தியாவின் குஜராத்தின் காந்திநகரில் உள்ள லாவாத்தில் உள்ள ஆர்.ஆர். யூ வளாகத்தில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு, ஒரு உருமாறும் ஒத்துழைப்பை முறைப்படுத்துவதைக் காண மதிப்புமிக்க பிரமுகர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் பங்குதாரர்களை ஒன்றிணைத்தது.
  • புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் விழா, பிரான்சின் ஸ்டார்பர்ஸ்ட், ஆர்.ஆர். யூ மற்றும் ராஷ்டிரிய ரக்ஷா பல்கலைக்கழகம் (ஆர். ஆர். யூ) நிறுவிய நிறுவனங்கள் சட்டம் 2013 இன் கீழ் ஒரு பிரிவு 8, இலாப நோக்கற்ற நிறுவனமான பாதுகாப்பு மற்றும் அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி சங்கம் (சாஸ்த்ரா) ஆகியவற்றுக்கு இடையே ஒரு மாறும் கூட்டாண்மை தொடங்கியதைக் குறித்தது. 
  • இந்த மூலோபாய கூட்டணி விண்வெளி, பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு துறைகளில் புதுமைகளை வளர்ப்பது மற்றும் முன்னேற்றங்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஒத்துழைப்பில் சாஸ்த்ராவின் ஒருங்கிணைந்த பங்கு தேசிய பாதுகாப்பு மற்றும் காவல்துறை துறையில் புதுமை, அடைகாக்கும் மற்றும் தொழில்நுட்ப முடுக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது, 
  • மேலும் ஆத்மநிர்பர் பாரத்தை அடைவதற்கான கூட்டு முயற்சிகளை மேலும் மேம்படுத்துகிறது மற்றும் நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை உறுதி செய்கிறது.
ராணுவ மருத்துவ சேவைகள் மற்றும் தில்லி ஐஐடி இடையே கூட்டு ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • ராணுவ மருத்துவ சேவைகள் 2024 ஏப்ரல் 22 அன்று தில்லி இந்தியத் தொழில்நுட்ப கழகத்துடன் கூட்டு ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.  
  • இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ராணுவ மருத்துவ சேவைகள் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் தல்ஜித் சிங், தில்லி ஐஐடி இயக்குநர் பேராசிரியர் ரங்கன் பானர்ஜி ஆகியோர் கையெழுத்திட்டனர். 
  • புதிய மருத்துவ சாதனங்களை உருவாக்குவதற்கான ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை மேற்கொள்வது, பல்வேறு நிலப்பரப்புகளில் பணியாற்றும் ராணுவ வீரர்களின் குறிப்பிட்ட சுகாதாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் கவனம் செலுத்துவது ஆகியவை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
  • இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஆசிரியர்கள் பரிமாற்றத் திட்டம், கூட்டுக் கல்வி நடவடிக்கைகள் மற்றும் கூட்டு பிஎச்டி ஆய்வுகளை உருவாக்கவும் திட்டமிடப்படும்.
குடிமைப் பணியில் மனிதவள மேம்பாட்டுத் துறையில் ஒத்துழைப்புக்காக கம்போடியாவின் குடிமைப் பணி அமைச்சகத்துடன் நிர்வாக சீரமைப்பு மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் 
  • பணியாளர், பொது நிர்வாகம் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை, கம்போடியாவின் குடிமைப் பணி அமைச்சகத்துடன் குடிமைப் பணியின் மனிதவள மேம்பாட்டுத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டது.
  • குடிமைப் பணிகளில் மனிதவள மேம்பாட்டுத் துறையில் இந்தியா மற்றும் கம்போடியா இடையேயான சுமூகமான நட்புறவை அடுத்த 5 ஆண்டுகளுக்கு முன்னெடுத்துச் செல்ல இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது. 
  • இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், கம்போடியா அரசின் சார்பில் துணைப் பிரதமரும், குடிமைப் பணிகள் அமைச்சருமான திரு ஹுன் மனி மற்றும் மத்திய அரசின் சார்பில் கம்போடியா அரசுக்கான இந்திய தூதர் டாக்டர் தேவயானி கோப்ரகடே ஆகியோர் புனோம் பென்னில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கையெழுத்திட்டனர்.
  • 2023-24-ம் ஆண்டில், 156 கம்போடிய அரசு ஊழியர்கள் சிறந்த நிர்வாகத்திற்கான தேசிய மையத்தில் 4 திறன் மேம்பாட்டு திட்டங்களில் கலந்து கொண்டனர். 
  • 2024-25-ம் ஆண்டில், 240 கம்போடிய அரசு ஊழியர்களுக்கு 6 திறன் மேம்பாட்டு திட்டங்களில் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளன. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அனைத்து அம்சங்களையும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்ற இந்தியா உறுதிபூண்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel