சா்வதேச வன கண்காணிப்பு அறிக்கை 2024 / INTERNATIONAL FOREST MONITORING REPORT 2024
TNPSCSHOUTERSApril 14, 2024
0
சா்வதேச வன கண்காணிப்பு அறிக்கை 2024 / INTERNATIONAL FOREST MONITORING REPORT 2024: செயற்கைக்கோள் தரவுகள் மற்றும் பிற தரவுகள் மூலம் வன பரப்பு குறித்து தகவல்களை ‘சா்வதேச வன கண்காணிப்பு அறிக்கை’ என்ற தலைப்பில் உலக வளங்கள் நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
இந்தியாவில் கடந்த 2002 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் 4.14 லட்சத்து ஹெக்டோ் பரப்பளவிலான ஈரமான முதன்மை காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து கடந்த 24 ஆண்டுகளில் 23 லட்சம் ஹெக்டோ் பரப்பளவிலான மரங்கள் அழிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
கரியமில வாயு சேமிப்பு
சா்வதேச வன கண்காணிப்பு அறிக்கை 2024 / INTERNATIONAL FOREST MONITORING REPORT 2024: கடந்த 2001 முதல் 2022 வரை இந்தியாவில் உள்ள காடுகள் ஆண்டுக்கு 5.1 கோடி டன் அளவிலான கரியமில வாயுவை உமிழ்ந்துள்ளன.
இதே காலகட்டத்தில் 14.1 கோடி டன் அளவிலான கரியமில வாயு நீக்கப்பட்டது. இதன்மூலம் ஆண்டுக்கு மொத்தம் 8.9 கோடி டன் அளவிலான கரியமில வாயு சேமிக்கப்பட்டுள்ளது.
கரியமில வாயுவும் காடுகளும்
சா்வதேச வன கண்காணிப்பு அறிக்கை 2024 / INTERNATIONAL FOREST MONITORING REPORT 2024: கரியமில வாயு வெளியேற்றத்துக்கும் சேமிப்புக்கும் காடுகள் முக்கிய காரணிகளாக விளங்குகின்றன.
காற்றில் கரியமில வாயு கலந்திருந்தால் அதை நீக்குவதிலும் மரங்கள் மொத்தமாக அழிக்கப்படும்போது கரியமில வாயுவை உமிழ்வதிலும் காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதையடுத்து வனங்கள் அழிக்கப்படும்போது பருவநிலை மாற்ற நிகழ்வுகளும் அதிகரிக்கின்றன.
வன அழிப்புக்கான காரணங்கள்
சா்வதேச வன கண்காணிப்பு அறிக்கை 2024 / INTERNATIONAL FOREST MONITORING REPORT 2024: மனித இடம்பெயா்வு, இயற்கை சீற்றங்கள் உள்ளிட்டவை மர அழிப்புக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
அந்த வகையில் இந்தியாவில் 2013 முதல் 2023 வரை 95 சதவீத வன அழிப்பு சம்பவங்கள் இயற்கை சீற்றங்களாலேயே நிகழ்ந்துள்ளன என தெரிவிக்கப்பட்டது.
காட்டுத்தீயால் ஏற்படும் வன அழிவு
சா்வதேச வன கண்காணிப்பு அறிக்கை 2024 / INTERNATIONAL FOREST MONITORING REPORT 2024: உணவு மற்றும் வேளாண் நிறுவனம் (எஃப்ஏஓ) வெளியிட்ட தரவுகளில், ‘ கடந்த 2015 முதல் 2020 வரை இந்தியாவில் ஆண்டுதோறும் 6.68 லட்சம் ஹெக்டோ் பரப்பளவிலான மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மர அழிப்பில் உலகளவில் இந்தியா இரண்டாமிடத்தை பிடித்துள்ளது.
கடந்த 2001 முதல் 2022 வரை காட்டுத்தீயால் 35,900 ஹெக்டோ் பரப்பளவிலான மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் 2008-ஆம் ஆண்டு 3,000 ஹெக்டோ் பரப்பளவிலான மரங்கள் அழிக்கப்பட்டதே அதிகபட்சமாகும்’ என தெரிவிக்கப்பட்டது.
அதிக மர அழிப்பு ஆண்டுகள், மாநிலங்கள்
சா்வதேச வன கண்காணிப்பு அறிக்கை 2024 / INTERNATIONAL FOREST MONITORING REPORT 2024: இந்தியாவில் அதிகளவில் மரங்கள் அழிக்கப்பட்டுள்ள மாநிலங்கள் குறித்து சா்வதேச வன கண்காணிப்பு ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது கடந்த 2017-இல் 1.89 லட்சம் ஹெக்டோ் பரப்பளவிலான மரங்களும், 2016-இல் 1.75 லட்சம் ஹெக்டோ் பரப்பளவிலான மரங்களும் 2023-இல் 1.44 லட்சம் ஹெக்டோ் பரப்பளவிலான மரங்களும் அழிந்துள்ளன.
நாட்டிலேயே அதிகப்படியான மரங்கள் அழிக்கப்படும் மாநிலங்களில் அஸ்ஸாம் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் முறையே மிஸோரம், அருணாசல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூா் ஆகிய மாநிலங்களும் உள்ளன என தெரிவிக்கப்பட்டது.
ENGLISH
INTERNATIONAL FOREST MONITORING REPORT 2024: The World Resources Institute publishes information on forest cover through satellite data and other data under the title 'International Forest Monitoring Report'.
An estimated 4.14 lakh hectares of moist primary forests have been cleared in India during the period 2002 to 2023. It has been revealed that 23 lakh hectares of trees have been destroyed in the last 24 years.
Carbon dioxide storage
INTERNATIONAL FOREST MONITORING REPORT 2024: From 2001 to 2022, forests in India have emitted 5.1 million tonnes of carbon dioxide per year. During the same period, 14.1 crore tonnes of carbon dioxide was removed. In this way a total of 8.9 crore tonnes of carbon dioxide has been saved per year.
Carbon dioxide and forests
INTERNATIONAL FOREST MONITORING REPORT 2024: Forests are important factors in carbon sequestration and storage. Forests play an important role in removing carbon dioxide from the air and emitting carbon dioxide when trees are destroyed. Consequently, climate change events also increase when forests are destroyed.
Reasons for Deforestation
INTERNATIONAL FOREST MONITORING REPORT 2024: Human migration and natural disasters are the major causes of tree destruction. It has been reported that 95 percent of forest destruction incidents in India from 2013 to 2023 have occurred due to natural disasters.
Forest destruction caused by forest fires
INTERNATIONAL FOREST MONITORING REPORT 2024: According to data released by the Food and Agriculture Organization (FAO), between 2015 and 2020, 6.68 lakh hectares of trees were destroyed annually in India. This makes India second in the world in deforestation.
Between 2001 and 2022, forest fires have destroyed an area of 35,900 hectares of trees. Among them, 3,000 hectares of trees were destroyed in the year 2008, it was reported.
High Deforestation Years, States
INTERNATIONAL FOREST MONITORING REPORT 2024: About the states with the highest number of trees destroyed in India, the International Forestry Observatory report says: In 2017, 1.89 lakh hectares of trees, 1.75 lakh hectares of trees in 2016 and 1.44 lakh hectares of trees were destroyed in 2023.
Assam has the highest number of deforested states in the country. It was informed that Mizoram, Arunachal Pradesh, Nagaland and Manipur are in the following places.