Type Here to Get Search Results !

1st APRIL 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


1st APRIL 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

ஆகாஷ் ஏவுகணை அமைப்பின் சோதனை வெற்றி
  • இந்தியப் பாதுகாப்புப் படைகளின் தயார்நிலையை மதிப்பிடுவதற்கான வழக்கமான பயிற்சியின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்பட்டது.
  • ஆகாஷ் ஏவுகணை அமைப்பு, மத்திய அரசின் சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (DRDO) உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.
  • ஆகாஷ் ஏவுகணை அமைப்பு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (டிஆர்டிஓ) கட்டமைக்கப்பட்ட ஏவுகணை அமைப்பாகும். இது ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்தின் (IGMDP) கீழ் உருவாக்கப்பட்டது. 
  • நாக், அக்னி மற்றும் திரிசூல் ஏவுகணைகள் மற்றும் பிருத்வி பாலிஸ்டிக் ஏவுகணை ஆகியவையும் இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டவை.
  • இந்திய விமானப்படை மற்றும் இந்திய இராணுவம் பயன்பாட்டுக்காக இரண்டு ஏவுகணைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்திய ராணுவம் ஆகாஷ் ஏவுகணைகளின் முதல் தொகுப்பை மே 2015 இல் அறிமுகப்படுத்தியது. 
  • முதல் ஆகாஷ் ஏவுகணை மார்ச் 2012 இல் இந்திய விமானப் படைக்கு வழங்கப்பட்டது. இந்த ஏவுகணை ஜூலை 2015இல் இந்திய விமானப்படையில் முறையாக சேர்க்கப்பட்டது.
  • ஆகாஷ் ஏவுகணை அமைப்பு லாஞ்சர், ஏவுகணை, கட்டுப்பாட்டு மையம், ஒருங்கிணைந்த பணி வழிகாட்டுதல் அமைப்பு, ஃபயர் கன்ட்ரோல் ரேடார், டிஜிட்டல் ஆட்டோபைலட் போன்ற பல அம்சங்களைக் கொண்டுள்ளது.
மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.78 லட்சம் கோடி
  • 2024 மார்ச் மாதத்தில் 1.78 லட்சம் கோடியாக இருந்தது. இது 2023ல் இதே மாதத்துடன் ஒப்பிடும் போது 11.5 சதவீதம் அதிகமாகும். இந்த வரிவசூல் இதுவரையிலான ஜிஎஸ்டி வசூலில் இரண்டாவது பெரிய தொகையாகும்.
  • மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (சிஜிஎஸ்டி) - ரூ.34,532 கோடி
  • மாநில சரக்கு மற்றும் சேவை வரி (எஸ்ஜிஎஸ்டி) - ரூ.43,746 கோடி
  • ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஐஜிஎஸ்டி) - இறக்குமதி செய்யப்ட்ட பொருட்கள் மீது வசூலிக்கப்பட்ட ரூ. 40,322 கோடி உட்பட ரூ.87,947 கோடி
  • செஸ் - இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீது வசூலிக்கப்பட்ட ரூ. 996 கோடி உட்பட ரூ. 12,259 கோடி
  • தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2024 மார்ச் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ரூ. 11,017 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 19 சதவீத வளர்ச்சியாகும். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ. 9,245 கோடி வருவாய் கிடைத்தது.
  • புதுச்சேரியை பொறுத்தவரை மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.221 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை விட 9 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் புதுச்சேரியில் ரூ.204 கோடி வருவாய் கிடைத்தது.
2024, பிப்ரவரி மாதத்தில் எட்டு முக்கிய தொழில்களில் நிலக்கரி துறை 11.6% அதிக வளர்ச்சியை அடைந்துள்ளது
  • வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட எட்டு முக்கிய தொழில்களின் குறியீட்டின்படி (அடிப்படை ஆண்டு 2011-12), 2024 பிப்ரவரி மாதத்தில் எட்டு முக்கிய தொழில்களில் நிலக்கரித் துறை மிக உயர்ந்த வளர்ச்சியை 11.6% எனக் கண்டுள்ளது. 
  • கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 190.1 புள்ளிகளுடன் ஒப்பிடும்போது பிப்ரவரி மாதத்தில் நிலக்கரி தொழில்துறையின் குறியீடு 212.1 புள்ளிகளை எட்டியுள்ளது. அதன் ஒட்டுமொத்த குறியீடு 2023 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி வரை முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியை விட 12.1% அதிகரித்துள்ளது.
  • சிமெண்ட், நிலக்கரி, கச்சா எண்ணெய், மின்சாரம், உரங்கள், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், எஃகு ஆகிய எட்டு முக்கிய தொழில்களின் ஒருங்கிணைந்த மற்றும் தனிப்பட்ட உற்பத்தி செயல்திறனை ஐசிஐ அளவிடுகிறது.
  • எட்டு முக்கிய தொழில்களின் ஒருங்கிணைந்த குறியீடு முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 2024, பிப்ரவரி மாதத்தில் 6.7% அதிகரிப்பை கொண்டுள்ளது.
  • கடந்த எட்டு மாதங்களில் நிலையான இரட்டை இலக்க வளர்ச்சியையும், கடந்த இரண்டு நிதியாண்டுகளில் எட்டு முக்கிய தொழில்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை விட கணிசமாக அதிக வளர்ச்சியையும் வெளிப்படுத்தி நிலக்கரித் தொழில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
  • இந்தக் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு பின்னால் உள்ள உந்து சக்தி 2024, பிப்ரவரி மாதத்தில் நிலக்கரி உற்பத்தியில் குறிப்பிடத்தக்க எழுச்சிக்கு காரணமாக இருக்கலாம். 
  • இந்த மாதத்தில் உற்பத்தி 96.60 மில்லியன் டன்களை எட்டியது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 11.83% அதிகரிப்பைக் குறிக்கிறது. 
பத்திரிகை தகவல் அலுவலகத்தின் முதன்மைத் தலைமை இயக்குநராக திருமதி ஷெய்பாலி ஷரண் பொறுப்பேற்றார்
  • பத்திரிகை தகவல் அலுவலகத்தின் முதன்மை தலைமை இயக்குநராக இருந்த திரு மணீஷ் தேசாய், நேற்று ஓய்வு பெற்றதையடுத்து, திருமதி ஷெய்பாலி பி. ஷரண் இன்று, பத்திரிகை தகவல் அலுவலகத்தின் முதன்மை தலைமை இயக்குநராக பொறுப்பேற்றார். திருமதி ஷரண் 1990 ஆம் ஆண்டு தொகுப்பைச் சேர்ந்த இந்தியத் தகவல் பணி அதிகாரி ஆவார்.
  • மூன்று தசாப்தங்களாக நீடித்த சிறப்புமிக்க பணியில், நிதி, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் போன்ற அமைச்சகங்களுக்கான பத்திரிகை தகவல் அலுவலக அதிகாரியாக, பெரும்பாலும் ஊடக விளம்பரப் பணிகளை கவனிக்கும் பொறுப்புகளை அவர் வகித்துள்ளார். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel