18th APRIL 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
பசுமை ஹைட்ரஜன் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திட்டங்களை அதிகரிக்க இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு ஆணையத்தின் அலுவலகம் குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரத்தில் அமைக்கப்பட்டுள்ளது
- இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு ஆணையம் காந்திநகரில் உள்ள குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரில் ஓர் அலுவலகத்தைத் திறந்துள்ளது.
- இது பசுமை ஹைட்ரஜன் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திட்டங்களுக்கான நிதிச் செலவுகளைக் கணிசமாகக் குறைக்கும்.
- 2024, ஏப்ரல் 17 அன்று அபுதாபியில் நடைபெற்ற உலக எதிர்கால எரிசக்தி உச்சி மாநாடு 2024-ல் நடைபெற்ற "நீண்ட கால எரிசக்தி சேமிப்புக்கான எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகள்" என்ற குழு விவாதத்தின் போது இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சி ஆணைய நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு பிரதீப் குமார் தாஸ், பசுமையான எதிர்காலத்தை நோக்கிய நாட்டின் பயணத்திற்கு பங்களிக்கும் முன்முயற்சியை எடுத்துரைத்தார்.
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் 2024, ஏப்ரல் 18 அன்று ஒடிசா கடற்கரையில் உள்ள சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துப் பார்த்தது.
- இச்சோதனையின் போது, அதன் அனைத்து துணை அமைப்புகளும் எதிர்பார்த்தபடி செயல்பட்டன. பல்வேறு இடங்களில் ஒருங்கிணைந்த சோதனை மையத்தால் நிறுவப்பட்ட ரேடார், எலக்ட்ரோ ஆப்டிகல் டிராக்கிங் சிஸ்டம், டெலிமெட்ரி போன்ற பல்வேறு சென்சார்களால் ஏவுகணை செயல்திறன் கண்காணிக்கப்பட்டது. இந்திய விமானப்படையின் சுகோய் -30-எம்கே-ஐ விமானத்தில் இருந்தும் ஏவுகணை பறப்பது கண்காணிக்கப்பட்டது.
- இந்த ஏவுகணையில் மேம்பட்ட ஏவியோனிக்ஸ் மற்றும் சிறந்த செயல்திறனை உறுதி செய்வதற்கான மென்பொருள் பொருத்தப்பட்டுள்ளது.
- இந்த ஏவுகணையை பெங்களூருவில் உள்ள டிஆர்டிஓ ஆய்வக ஏரோநாட்டிகல் மேம்பாட்டு அமைப்பு மற்றும் பிற ஆய்வகங்கள் மற்றும் இந்திய தொழில்துறைகளின் பங்களிப்புடன் உருவாக்கியுள்ளது.
- இந்த சோதனையை பல்வேறு டிஆர்டிஓ ஆய்வகங்களைச் சேர்ந்த பல முதன்மை விஞ்ஞானிகள் மற்றும் உற்பத்தி பங்குதாரரின் பிரதிநிதிகள் பார்வையிட்டனர்.
- பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகளை பிலிப்பைன்ஸ்-க்கு எடுத்து செல்லும் பணியானது இந்திய விமானப்படையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- இதற்கு, தேவையான உதவிகளை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம், ஏா்போா்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா உள்ளிட்டவை செய்து வருகின்றன.
- இங்கு மக்களவை தேர்தல் தொடங்கும் அதே நேரத்தில், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிஸ் பிரம்மோஸ் ஏவுகணைகள் தரையிறங்க உள்ளன. இந்திய பாதுகாப்பு ஏற்றுமதி ஒப்பந்தத்தில் இது திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
- வெளிநாடு ஒன்றுடன் கையெழுத்தான மிகப் பெரிய பாதுகாப்பு ஒப்பந்தம் இதுவாகும். முதல் பிரம்மோஸ் ஏற்றுமதி ஏவுகணை நாக்பூரில் இருந்து IAF C-17 Globemaster போக்குவரத்து விமானத்தில் இன்று இரவு புறப்பட உள்ளது.
- நாளை (ஏப்ரல் 19ம் தேதி) அதிகாலை பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவை சென்றடையும். பிரம்மோஸ் ஏவுகணையின் கூடுதல் பாகங்கள், மூன்று சரக்கு விமானங்களில் எடுத்து செல்லப்பட உள்ளன.