16th APRIL 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தென்மேற்குப் பருவமழை குறித்து கணிப்பு
- டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2024ஆம் ஆண்டின் தென்மேற்குப் பருவமழை தென்மேற்குப் பருவமழை குறித்து விளக்கமளித்தார்.
- பருவகால மழையின் நீண்ட கால சராசரி 106% ஆக இருக்கும் என்றும், இது 5% கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கலாம் என்றும் தெரிவித்தார். 1971-2020 தரவுகளின் அடிப்படையில் நாடு முழுவதும் பருவகால மழையின் நீண்டகால சராசரி 87 செ.மீ. ஆக உள்ளது.
- இந்த முன்னறிவிப்பு இயக்கவியல் மற்றும் புள்ளிவிவர மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டது என்றும், வடமேற்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகளைத் தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிக மழை பெய்யக்கூடும் என்றும் டாக்டர் ரவிச்சந்திரன் கூறினார்.
- வடக்கு அரைக்கோளத்தில் இயல்பை விட குறைவான பனி உறைவு, 2024 தென்மேற்குப் பருவமழை காலத்தில் மழைக்கு சாதகமாக இருக்கும்.
- கடந்த மூன்று மாதங்களில் (ஜனவரி முதல் மார்ச் 2024 வரை) வடக்கு அரைக்கோளத்தில் பனிப்பொழிவு இயல்பை விட குறைவாக இருந்தது.
- தொடர்ச்சியாக, முறையே ஜூன், ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் அடுத்தடுத்து வரும் ஒரு மாதத்திற்கான மாதாந்திர மழை முன்னறிவிப்பு வெளியிடப்படுகிறது.
- கூடுதலாக, நாடு முழுவதற்குமான மழை அளவு முன்னறிவிப்புகளும், பருவத்தின் இரண்டாம் பாதியில் (ஆகஸ்ட்-செப்டம்பர்) மழைப்பொழிவின் அளவும் ஆகஸ்ட் மாத முன்னறிவிப்புடன் ஜூலை மாத இறுதியில் வெளியிடப்படுகின்றன.
- அதன்படி, மே கடைசி வாரத்தில் பருவ மழைக்கான புதுப்பிக்கப்பட்ட கணிப்புகளை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
- தூய்மை இருவாரவிழா 2024-ஐ, (2024 ஏப்ரல் 16 முதல் 30 வரை) நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலாளர் திரு உமங் நருலா இன்று தொடங்கி வைத்தார்.
- இந்தக் காலகட்டத்தில், அமைச்சகத்தின் நிலுவையில் உள்ள அனைத்து கோப்புகளும் ஆய்வு செய்யப்பட்டு தேவையற்றவை அகற்றப்படும். பழைய, காலாவதியான மின்னணு மற்றும் பிற பொருட்கள் சேகரிக்கப்பட்டு ஏலம் விடப்படும்.
- மேலும், இந்த இருவாரவிழாவின் போது தில்லியில் அடையாளம் காணப்பட்ட பள்ளிகளில் ஒன்றில், பள்ளிகளுக்கு இடையேயான கட்டுரைப் போட்டியை நடத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
- அனைத்து இடங்களிலும் தூய்மையின் முக்கியத்துவம் மற்றும் செயல்திறன் குறித்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இது மேற்கொள்ளப்படுகிறது.
- தூய்மை அளவுகோல்களில் சிறந்த இடத்தைப் பெறும் முதல் மூன்று பிரிவினருக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலாளர் பரிசுகளை வழங்குவதுடன் இருவாரவிழா 2024 ஏப்ரல் 30 அன்று நிறைவடையும்.