Type Here to Get Search Results !

உலகின் முதல் 10 பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியல் / WORLD TOP 10 BUSIEST AIRPORT LIST 2024

  • உலகின் முதல் 10 பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியல் / WORLD TOP 10 BUSIEST AIRPORT LIST 2024: கொரோனா காலத்தில் ரொம்பவே பாதிக்கப்பட்ட ஒரு துறை என்றால் அது விமான துறை தான். உலகின் பல நாடுகளும் விமான போக்குவரத்திற்குக் கட்டுப்பாடு விதித்தால் அது மொத்தமாக முடங்கிப் போனது. அதன் பிறகு இப்போது தான் விமான துறையில் மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.
  • கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும் சர்வதேச அளவில் 8 பில்லியன் பயணிகள் விமானத்தில் பயணித்துள்ளனர். இது முந்தைய ஆண்டை காட்டிலும் 27.2% அதிகமாகும். சர்வதேச அளவில் கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு விமான பயணங்கள் திரும்பி வருகிறது. 
  • இதற்கிடையே உலகின் டாப் 10 பிஸியான விமான நிலையங்கள் குறித்த லிஸ்ட் வெளியாகி உள்ளது. அதில் இந்தியாவில் இருந்து ஒரு விமான நிலையம் அந்த லிஸ்டில் இடம்பெற்றுள்ளது. 
  • இதில் அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் இருக்கும் அட்லாண்டா விமான நிலையம் தான் உலகின் பிஸியான விமான நிலையமாக உருவெடுத்துள்ளது.2023இல் மட்டும் சுமார் 10 கோடி பேர் இந்த விமான நிலையத்தில் இருந்து பயணித்துள்ளனர். இது 2022ல் இருந்து 12% அதிகமாகும். இருப்பினும், கொரோனவுக்கு முந்தைய 2019ஆம் ஆண்டை விட இது 5% குறைவாகும். இதுதான் உலகின் டாப் பிஸியான விமான நிலையமாக இருக்கிறது.
  • இரண்டாவது இடத்தில் துபாய் சர்வதேச விமான நிலையம் இருக்கிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இந்த விமான நிலையம் சர்வதேச போக்குவரத்தில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. 
  • ஐரோப்பிய நாடுகளைத் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் இணைக்கும் ஒரு ஹப் போல இது செயல்படுகிறது. இதனால் இங்கே உள்நாட்டுப் பயணிகளை விட சர்வதேச பயணிகளின் எண்ணிக்கையே அதிகம். 2021இல் 27ஆவது இடத்தில் இருந்த இந்த ஏர்போர்ட் 2022இல் 5வது இடத்திற்கு வந்த நிலையில், இப்போது 2ஆவது இடத்தை பிடித்துள்ளது. 
  • அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் ஏர்போர்ட் 2023இல் 8.1 கோடி பயணிகளைக் கையாண்டு இருக்கிறது. ஐந்து டெர்மினல்கள் மற்றும் 168 கேட்களுடன் 26 சதுர மைல்களுக்குப் பரந்து விரிந்து இருக்கும் இந்த ஏர்போர்ட் ஒரு மினி சிட்டி போலவே செயல்படுகிறது. 2030க்குள் ஜீரோ கார்பன் எமிஷனை நோக்கிச் செல்லும் இந்த ஏர்போர்ட் சர்வதேச அளவில் 3ஆவது இடத்தில் இருக்கிறது. 
  • லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம், 2023இல் 7.9 கோடி பயணிகளைக் கையாண்டு, 4ஆவது இடத்தில் இருக்கிறது. மிகவும் சிறிய கேப்பில் ஜப்பான் தலைநகர் டோக்கியோ 4ஆவது இடத்தை மிஸ் செய்துள்ளது. 7.9 கோடி பணிகள் டோக்கியோ விமான நிலையம் மூலம் பயணித்துள்ளனர். 
  • டோக்கியோ ஏர்போர்ட் இந்த லிஸ்டில் 5ஆவது இடத்தில் இருக்கிறது. 2022ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் இதன் பயணிகளின் எண்ணிக்கை 55% உயர்ந்துள்ளது. 2023இல் 16வது இடத்திலிருந்து இந்த ஏர்போர்ட் இப்போது 5வது இடத்தை பிடித்துள்ளது. 
  • லிஸ்டில் 7.7 கோடி பயணிகளுடன் டென்வர்எ ஏர்போர்ட் 6ஆவது இடத்தை பிடித்துள்ள நிலையில், 7.6 கோடி பயணிகளுடன் இஸ்தான்புல் ஏர்போர்ட் 7ஆவது இடத்திலும் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையம் 7.5 கோடி பயணிகளுடன் எட்டாவது இடத்திலும் இருக்கிறது. 9ஆவது இடத்தில் மற்றொரு அமெரிக்க ஏர்போர்ட் ஆன சிகாகோ ஏர்போர்ட் 7.4 கோடிகளுடன் இருக்கிறது. 
  • இந்த லிஸ்டில் 10ஆவது இடத்தில் தான் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் இருக்கிறது. டெல்லி ஏர்போர்ட் 2023இல் 7.2 கோடி பணிகளைக் கையாண்டது. இந்தியாவுக்கு வரும் பல சுற்றுலாப் பயணிகள் டெல்லி மலமாகவே வருகிறார்கள்.
  • இதில் மொத்தம் 3 டெர்மினல்கள் உள்ளன. குறிப்பாக டெர்மினல் 3 இந்தியாவின் மிகப்பெரிய முனையமாகவும் உலகளவில் ஐந்தாவது பெரியதாகவும் இருக்கிறது. மேலும் ஆசியாவிலேயே முதல் ஜீரோ காரன் எமிஷன் ஏர்போர்ட்டாகவும் இது இருக்கிறது. 

ENGLISH

  • WORLD TOP 10 BUSIEST AIRPORT LIST 2024: One sector that has been affected a lot during the Corona era is the aviation sector. When many countries of the world imposed restrictions on air traffic, it was completely paralyzed. After that, it is only now that normalcy is returning to the aviation industry.
  • Tourists: In 2023 alone, 8 billion international passengers will travel by air. This is 27.2% higher than the previous year. International air travel is returning to pre-Corona levels. Meanwhile, the list of top 10 busiest airports in the world has been released. One airport from India is included in the list.
  • In this, the Atlanta airport in the state of Georgia in the United States has emerged as the busiest airport in the world. In 2023 alone, about 10 crore people have traveled from this airport. This is a 12% increase from 2022. However, this is 5% lower than the pre-corona 2019. This is the world's top busiest airport.
  • In second place is Dubai International Airport. This airport in the United Arab Emirates is a major hub for international traffic. It acts like a hub connecting European countries with Southeast Asian countries. As a result, the number of international passengers is more than domestic passengers. The airport was ranked 27th in 2021, moved to 5th in 2022, and is now ranked 2nd.
  • Dallas Airport in Texas, USA is expected to handle 8.1 million passengers by 2023. Spread over 26 square miles with five terminals and 168 gates, the airport functions like a mini city. The airport is the 3rd in the world to aim for zero carbon emissions by 2030.
  • London's Heathrow Airport will handle 7.9 million passengers by 2023, ranking 4th. Japan's capital Tokyo has missed the 4th position by a very small gap. 7.9 crore passengers traveled through Tokyo airport. Tokyo Airport is at number 5 on this list. Its passenger numbers have increased by 55% compared to 2022. The airport is now ranked 5th, up from 16th in 2023.
  • Denver Airport is ranked 6th on the list with 7.7 million passengers, followed by Istanbul Airport at 7th with 7.6 million passengers and Los Angeles Airport at 8th with 7.5 million passengers. At 9th place is another US airport, Chicago Airport with 7.4 crores.
  • Delhi's Indira Gandhi International Airport is at number 10 on this list. Delhi Airport to handle 7.2 crore jobs by 2023 Many tourists who come to India visit Delhi as a destination. It has total 3 terminals. Terminal 3 in particular is the largest terminal in India and the fifth largest globally. It is also the first zero carbon emission airport in Asia.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel