10th APRIL 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
உலக ஹோமியோபதி தினத்தை முன்னிட்டு ஹோமியோபதி கருத்தரங்கை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்
- உலக ஹோமியோபதி தினத்தை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 10, 2024) புதுதில்லியில் ஹோமியோபதி ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த இரண்டு நாள் ஹோமியோபதி கருத்தரங்கை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தொடங்கி வைத்தார்.
- நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் , எளிமையான மற்றும் எளிதில் அணுகக்கூடிய சிகிச்சை முறையாக ஹோமியோபதி முறை பல நாடுகளில் பின்பற்றப்பட்டு வருகிறது என்றார்.
- உலகம் முழுவதும், சர்வதேச, தேசிய மற்றும் உள்ளூர் மட்டங்களில் பல நிறுவனங்கள் ஹோமியோபதியை ஊக்குவித்து வருவதாகக் கூறிய அவர், இந்தியாவில் ஹோமியோபதி மருத்துவத்தை ஊக்குவிப்பதில் ஆயுஷ் அமைச்சகம், மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சி கவுன்சில், தேசிய ஹோமியோபதி ஆணையம், தேசிய ஹோமியோபதி நிறுவனம் மற்றும் மத்திய அரசின் அனைத்து நிறுவனங்களையும் பாராட்டினார்.
- தேசிய அனல் மின் கழகம், அதன் முதன்மையான பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு முன்முயற்சியாக பெண்களுக்கு அதிகாரமளித்தல் இயக்கத்தின் புதிய முயற்சியை அறிமுகம் செய்துள்ளது.
- ஏப்ரல் 2024 முதல், பெண்களுக்கு அதிகாரமளித்தலின் புதிய முயற்சியின் கீழ் மின்சாரத் துறை, பொதுத்துறை, அடையாளம் காணப்பட்ட 42 இடங்களில், சமூகத்தின் பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 3,000 திறமையான பெண் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். இந்த இயக்கத்தின் மூலம் பயனடையும் குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை 10,000-ஐ தாண்டும்.
- இதுவரை, மொத்தம் 7,424 சிறுமிகள் பயனடைந்துள்ளனர். பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் சீராக அதிகரித்து வருகிறது.
- 2023-ம் ஆண்டில் மட்டும், இந்தியாவின் 16 மாநிலங்களில் பரவலாக உள்ள தேசிய அனல் மின் கழகத்தின் 40 இடங்களில் 2,707 பெண்கள் பயிலரங்கில் பங்கேற்றனர்.
- இந்த இயக்கம் பல்வேறு தலையீடுகள் மூலம் சிறுமிகளுக்கு அதிகாரம் அளிப்பதில் கவனம் செலுத்துகிறது. அவர்களின் தலைமைத்துவ குணங்களை அடையாளம் கண்டு வளர்ப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இதனால் அவர்கள் எதிர்காலத்திற்கு தயாராக இருக்க முடியும். இந்தப் பயிலரங்கு உடல்நலம், சுகாதாரம், பாதுகாப்பு, உடற்பயிற்சி, விளையாட்டு, யோகா ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.