Type Here to Get Search Results !

போஷன் திட்டம் | POSHAN SCHEME IN TAMIL

  • போஷன் திட்டம் | POSHAN SCHEME IN TAMIL: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறிப்பிடத்தக்க வகையில் இருந்தாலும், ஊட்டச்சத்து குறைபாடு என்ற சவால் தொடர்ந்து நீடித்து வருகிறது. 
  • இந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 44% பேர் தேவையானதை விட குறைவான உடல் எடை கொண்டுள்ளனர் என்பது கசப்பான உண்மை.
  • அதுமட்டுமின்றி, 72% குழந்தைகள் மற்றும் 52% திருமணமான பெண்களுக்கு ரத்தசோகை இருப்பதும் சமீபத்திய ஆய்வுகளில் (studies) தெரிய வந்துள்ளது.
  • ஊட்டச்சத்து குறைபாட்டு சவாலை சமாளிக்க ஒரு ஒருங்கிணைந்த முயற்சியை இந்தியா மேற்கொண்டுள்ளது, குறிப்பாக குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களிடையே ஊட்டச்சத்து குறைபாட்டை சரி செய்ய சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. 
  • 2022க்குள் இந்தியாவை ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் போஷன் (POSHAN -Prime Minister's Overarching Scheme for Holistic Nourishment) திட்டம் செயல்படுத்தப்பட்டது.
  • ஊட்டச்சத்து குறைபாடு அதிகம் உள்ள மாவட்டங்களில் முக்கிய அங்கன்வாடி மையங்களின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கும், அவற்றின் தரத்தை உயர்த்துவதற்கும் இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது இந்த திட்டம். 
  • மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் போஷன் அபியான் நாடு முழுவதும் பல கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது.
  • முதல் ஆண்டில் 315 மாவட்டங்களிலும், இரண்டாம் ஆண்டில் 235 மாவட்டங்களிலும், மூன்றாம் ஆண்டில் மீதமுள்ள மாவட்டங்களிலும் என செயல்படுத்தப்பட்டது.
  • போஷன் அபியான் என தொடங்கப்பட்ட இந்த திட்டம் தற்போது போஷன் 2.0 என மாற்றமடைந்துள்ளது. இது இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான ஒரு பயணத்தை குறிக்கிறது. 
  • போஷன் அபியான் திட்டத்தின் வெற்றியை அடிப்படையாக கொண்டு, உருவாக்கப்பட்டுள்ள போஷன் 2.0 திட்டம், புதிய உத்திகளை நடைமுறைப்படுத்துவதையும், ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான ஒத்துழைப்பை ஊக்குவிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது.

போஷன் உத்சவ் புத்தகம் மற்றும் கார்ட்டுன் கதாபாத்திரங்களின் கூட்டணி

  • போஷன் திட்டம் | POSHAN SCHEME IN TAMIL: இந்தியாவை ஊட்டச்சத்து மிகுந்த நாடாக மாற்றுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கொண்டு வந்துள்ள போஷன் சே பதாய் தக் என்ற முன்முயற்சி, போஷன் 2.0இன் கீழ், நாடு எதிர்கொள்ளும் ஊட்டச்சத்து சவால்களை எதிர்கொள்ள ஒரு தொலைநோக்கு அணுகுமுறையை கையாள்கிறது (various strategies and interventions). 
  • குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் ஊட்டச்சத்து ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை இது வலியுறுத்துகிறது.
  • போஷன் சே பதாய் தக் திட்டம், குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடையே ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்கான புதுமையான வழிகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த முன் முயற்சியின் முக்கிய அம்சம் "போஷன் உத்சவ் புத்தகம் " மற்றும் "கார்ட்டூன் கூட்டணி" என்ற புதிய உத்திகள் ஆகும்.
  • போஷன் உத்சவ் புத்தகம் என்பது ஊட்டச்சத்து நடைமுறைகள் மற்றும் உணவு முறைகள் குறித்து மக்களுக்கு அறிவூட்டும் ஒரு விரிவான வழிகாட்டியாகும். இந்த புத்தகம் சமூகங்களுக்கு அறிவூட்டுவதை நோக்கமாக கொண்டுள்ளது. 
  • இது அடிமட்டத்தில் இருந்து விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுகிறது. ஊட்டச்சத்து குறித்த புரிதலை எளிதாக கொண்டு சேர்க்கும் வகையில், இந்த புத்தகம் தகவல்களை வழங்குவதால், சமூகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் தகவல்களை சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • மறுபுறம், கார்ட்டூன் கூட்டணி ஊட்டச்சத்து மற்றும் சுகாதார கல்வியில் குழந்தைகளை ஈடுபடுத்துவதில் ஒரு புதுமையான அணுகுமுறையை கையாள்கிறது. 
  • பிரபலமான இந்திய கார்ட்டூன்கள் மூலம் ஊட்டச்சத்து குறித்த கற்றலை சுவாரஸ்யமானதாகவும், அணுகக் கூடியதாகவும் மாற்றுகிறது. 
  • கார்ட்டூன்களை பயன்படுத்தி சிறு வயதில் இருந்தே ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் ஊட்டச்சத்து பற்றிய அறிவை வளர்க்க முடியும். 
  • இந்த புதுமையான முறை, உணவு மற்றும் உடல்நலம் குறித்த குழந்தைகளின் புரிதல்களிலும், அணுகுமுறைகளிலும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துவதாக உறுதி அளிக்கிறது.

போஷன் அபியான் திட்டத்தின் தாக்கம்

  • போஷன் திட்டம் | POSHAN SCHEME IN TAMIL: போஷன் அபியான் திட்டம் மற்றும் அதன் முன்முயற்சிகள் நமது சமூகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. 
  • பச்சிளம் குழந்தைகள் மற்றும் இளம் குழந்தைகளுக்கு உணவளித்தல் (IYCF), உணவு மற்றும் ஊட்டச்சத்து, நோயெதிர்ப்பு மருந்து, மருத்துவமனைகளில் பிரசவம் பார்ப்பது போன்ற பல்வேறு உத்திகள் மூலம் தற்போதுள்ள திட்டங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பை உருவாக்கி, ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்த இந்த திட்டம் முயற்சிக்கிறது. 
  • தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் (NFHS-5) ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து குறிகாட்டிகளில் முன்னேற்றங்கள் இருப்பதாகவும், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் வளர்சிதை மாற்றம் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களின் பலனாக தான் இவற்றை பார்க்க வேண்டும்.
  • சமூக ரீதியாக இந்த திட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்கு ஏதுவாக போஷன் அபியான் திட்டத்தின் கீழ் 10 லட்சம் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதும் (10 lakh Anganwadi workers under POSHAN Abhiyaan) முக்கிய பங்கு வகிக்கிறது. 
  • இந்த பயிற்சி பெற்ற அங்கன்வாடி பணியாளர்கள் தான், அபியான் திட்டத்தின் முதுகெலும்பாக உள்ளனர். நாட்டின் பல்வேறு தொலைதூரப் பகுதிகளில் இந்த திட்டத்தின் செயல்பாட்டு வெற்றியை இவர்கள் தான் உறுதி செய்கின்றனர்.
  • போஷன் அபியானின் தனித்துவமான அம்சம், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தாக்கத்தை அதிகப்படுத்துவதாகவும். தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வலுவான தளமான போஷன் டிராக்கர்( Poshan Tracker,) இந்தியா முழுவதும் கூடுதல் ஊட்டச்சத்து விநியோகத்தை கண்காணிப்பது, நிகல் நேர கண்காணிப்பு மற்றும் சேவைகளை நிர்வகிப்பது போன்ற செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. 
  • இந்த அணுகுமுறை ஊட்டச்சத்து திட்டங்கள் எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றன என்பதை கண்காணிக்க உதவுகிறது. இது சரியான நேரத்தில் மாற்றங்களை கொண்டு வரவும் உதவி செய்கிறது. 
  • போஷன் டிராக்கர் போன்ற நடைமுறை, அங்கன்வாடி தொழிலாளர்களுக்கு முறையான பயிற்சி அளித்து ஊட்டச்சத்து திட்டங்களை திறம்பட செயல்படுத்தவும், சமூகங்களுக்கு சீரான உணவின் முக்கியத்துவம் குறித்து கற்பிக்கவும் வழி வகை செய்கிறது.

ஊட்டச்சத்து மற்றும் கல்வி கற்ற இந்தியா

  • போஷன் திட்டம் | POSHAN SCHEME IN TAMIL: போஷன் அபியான் மற்றும் அதனுடன் தொடர்புடைய முயற்சிகளான போஷன் உத்சவ் மற்றும் போஷன் சே பதாய் தக் ஆகியவை ஊட்டச்சத்து குறைப்பாட்டை எதிர்த்து போராடுவதிலும், நல்ல சுகாதார நடைமுறைகளை ஊக்குவிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. 
  • இந்த திட்டத்தின் பொருத்தம், நிலைத்தன்மை மற்றும் சமத்துவம் ஆகியவற்றில் திருப்திகரமான செயல்திறன் கொண்டிருப்பது நிதி ஆயோக் அமைப்பின் கீழ் உள்ள கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அலுவலகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது இந்த திட்டத்தின் விரிவான அணுகுமுறைக்கு சான்றாகும்.
  • அடுத்த தலைமுறைக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை உறுதி செய்யும் வகையில், நன்கு ஊட்டச்சத்து மற்றும் கல்வியறிவு கொண்ட இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையை நனவாக்குவதில் அரசு, பங்குதாரர்கள் மற்றும் சமூகங்களின் கூட்டு முயற்சி முக்கியம்.
  • ஆரோக்கியமான, வளமான இந்தியாவை உருவாக்கும் இந்த புதிய பயணத்தில் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்கலாம் வாருங்கள்.

ENGLISH

  • POSHAN SCHEME IN TAMIL: Despite India's remarkable economic growth, the challenge of malnutrition persists. It is a bitter truth that 44% of children under 5 years of age in India are underweight. Moreover, recent studies have revealed that 72% of children and 52% of married women are anemic.
  • India has made a concerted effort to tackle the challenge of malnutrition, with special attention being paid to correcting malnutrition among children and pregnant and lactating mothers. 
  • POSHAN (Prime Minister's Overarching Scheme for Holistic Nourishment) was implemented with the aim of making India a malnutrition-free country by 2022.
  • The project aims to improve the utilization and quality of major Anganwadi centers in districts with high levels of malnutrition. Administered by the Ministry of Women and Child Development, Pothan Abhiyan is being implemented across the country in several phases. 
  • It was implemented in 315 districts in the first year, 235 districts in the second year and remaining districts in the third year.
  • Started as Potion Abhiyan, the program has now evolved into Potion 2.0. It represents a journey to improve the nutrition and well-being of women and children in India. 
  • Building on the success of the Potion Abhiyan project, Potion 2.0 aims to implement new strategies and promote collaboration for a healthier future.

Poshan Utsav is an amalgamation of book and cartoon characters

  • POSHAN SCHEME IN TAMIL: Poshan Se Padai Thak, an initiative that has made significant progress in making India a nutrition-rich country, under Poshan 2.0, deals with a visionary approach (various strategies and interventions) to address the nutritional challenges faced by the country. 
  • It emphasizes commitment to improving the nutritional health of children, pregnant and lactating mothers in particular.
  • The Poshan Se Padai Thak program has introduced innovative ways to spread awareness about nutrition among children and adults. The highlight of this initiative is the new strategies of "Poshan Utsav Book" and "Cartoon Alliance".
  • Boshan Utsav Book is a comprehensive guide to enlighten people about nutrition practices and diet. This book aims to enlighten the communities. It helps create awareness from the grassroots level. 
  • This book plays an important role in imparting information to all sections of the society as it provides information to facilitate the understanding of nutrition.
  • On the other hand, Cartoon Alliance is dealing with an innovative approach in engaging children in nutrition and health education. Makes learning about nutrition interesting and accessible through popular Indian cartoons. 
  • Cartoons can be used to inculcate healthy eating habits and knowledge of nutrition from an early age. This innovative method promises to have a lasting impact on children's understandings and attitudes towards food and health.

Impact of Poshan Abyan Project

  • POSHAN SCHEME IN TAMIL: The Boshan Abhiyan program and its initiatives have made a significant impact on our society. The program seeks to improve nutritional status by creating synergies between existing programs through various strategies such as infant and young child feeding (IYCF), food and nutrition, immunization, and hospital delivery. 
  • The National Family Health Survey (NFHS-5) reported improvements in nutritional indicators of under-five children, and reductions in undernutrition and metabolism. These should be seen as the results of these schemes.
  • Training of 10 lakh Anganwadi workers under POSHAN Abhiyaan is also playing an important role for effective implementation of this project socially. It is these trained Anganwadi workers who form the backbone of the Abhiyan programme. It is they who ensure the operational success of this project in various remote areas of the country.
  • Potion Abhiyan's unique feature is the use of technology to maximize impact. Poshan Tracker, an IT-based robust platform, plays a vital role in tracking supplementary nutrition supply, mealtime tracking and managing services across India. 
  • This approach helps monitor how nutrition programs are managed. It also helps to bring about timely changes. A practice like Potion Tracker provides proper training to Anganwadi workers to effectively implement nutrition programs and educate communities about the importance of a balanced diet.

A Nutrition and Educated India

  • POSHAN SCHEME IN TAMIL: Boshan Abhiyan and its associated initiatives like Boshan Utsav and Boshan Se Padai Thak play an important role in fighting malnutrition and promoting good hygiene practices. 
  • A survey conducted by the Office of Monitoring and Evaluation under NITI Aayog has revealed satisfactory performance in terms of relevance, sustainability and equity of the scheme. This is a testament to the comprehensive approach of this project.
  • Collaborative efforts of government, stakeholders and communities are essential to realize the vision of a well-nourished and literate India to ensure a healthy future for the next generation. 
  • To know more about India's journey to improve nutrition and health, visit the official website of Potion Abhiyan. Come join us in this new journey of creating a healthy and prosperous India.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel