Type Here to Get Search Results !

10th MARCH 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


10th MARCH 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

அசாம்கரில் ரூ.34,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
  • பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உத்தரப்பிரதேச மாநிலம் ஆசம்கரில் ரூ.34,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டினார்.
  • சிவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கு பெரும் ஊக்கமளிக்கும் வகையில், நாடு முழுவதும் ரூ .9800 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான 15 விமான நிலையத் திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர், அடிக்கல் நாட்டினார். 
  • புனே, கோலாப்பூர், குவாலியர், ஜபல்பூர், தில்லி, லக்னோ, அலிகார், அசாம்கர், சித்ரகூட், மொராதாபாத், ஷ்ராவஸ்தி மற்றும் ஆதம்பூர் விமான நிலையங்களில் 12 புதிய முனைய கட்டிடங்களை அவர் திறந்து வைக்கிறார். 
  • கடப்பா, ஹுப்பள்ளி மற்றும் பெலகாவி விமான நிலையங்களின் மூன்று புதிய முனைய கட்டிடங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
  • லக்னோ மற்றும் ராஞ்சியில் கலங்கரை விளக்கத் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். இதன் கீழ் நவீன உள்கட்டமைப்புடன் கூடிய 2,000-க்கும் மேற்பட்ட மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
  • உத்தரப்பிரதேசத்தில் சுமார் ரூ.11,500 கோடி மதிப்பிலான பல்வேறு சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
  • பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.3,700 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான 744 ஊரக சாலைத் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்தத் திட்டங்களின் விளைவாக உத்தரப்பிரதேசத்தில் சுமார் 59 மாவட்டங்களுக்கு மொத்தமாக 5,400 கிலோ மீட்டர் ஊரகச் சாலைகள் அமைக்கப்படும்.
பாகிஸ்தானின் 14வது அதிபராக பதவியேற்றார் ஆசிஃப் அலி ஜா்தாரி
  • இஸ்லாமாபாத்தில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் ஆசிஃப் அலி ஜா்தாரிக்கு தலைமை நீதிபதி குவாசி ஃபேஸ் இசா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப், முப்படைத் தலைவர்கள், மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  • பாகிஸ்தானின் அடுத்த அதிபராக, மறைந்த முன்னாள் பிரதமா் பேநசீா் புட்டோவின் கணவரும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சா் பிலாவல் புட்டோ ஜா்தாரியின் தந்தையுமான ஆசிஃப் அலி ஜா்தாரி சனிக்கிழமை அதிகாரபூா்வமாகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
  • அந்த நாட்டு நாடாளுமன்றத்துக்கு கடந்த மாதம் 8-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலுக்குப் பிறகு முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சி ஆட்சியமைக்க பிலாவல் புட்டோ ஜா்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) ஆதரவு அளித்தது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel