4th MARCH 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தெலங்கானாடிவில் ரூ.56 ஆயிரம் கோடியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
- தெலங்கானாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கிவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டினார்.
- பிரதரின் அதிகாரப்பூர்வ விழாவில் மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
- நீண்ட நாள்களுக்குப் பிறகு தெலங்கானா முதல்வர் பிரதமர் மோயை வரவேற்று அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியில் அவருடன் மேடையைப் பகிர்ந்துகொண்டார்.
- இந்த நிகழ்ச்சியில், 800 மெகாவாட் (பூனிட்-2) தெலங்கானா சூப்பர் தெர்மல் பவர் திட்டத்தை பெட்டபள்ளியில் பிரதமர் தொடங்கிவைத்து அடிக்கல் நாட்டினார்.
- ஜார்கண்டின் சத்ராவில் வடக்கு கரன்புரா சூப்பர் அனல் மின் திட்டத்தின் 660 மெகாவாட் (அலகு-2) திட்டத்தையும் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
- ஹிசாரில் உள்ள ஜிண்டால் ஸ்டெய்ன்லஸ் நிறுவனத்தில் இந்தியாவின் முதலாவது பசுமை ஹைட்ரஜன் ஆலையை மத்திய எஃகு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
- பிஇஎம்எல் நிறுவனம், பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் (பிஇஎல்) மற்றும் மிஸ்ரா தாது நிகாம் நிறுவனம் (மிதானி) ஆகியவற்றுடன் பாதுகாப்பு அமைச்சகம் கனரக பயன்பாட்டு என்ஜின்களுக்கான மேம்பட்ட எரிபொருள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பை உள்நாட்டிலேயே உருவாக்குவதற்காக முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், பி.இ.எம்.எல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு சாந்தனு ராய்; மிதானி நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் எஸ்.கே.ஜா; பெல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு பானு பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா ஆகியோர் 2024 மார்ச் 04, அன்று புதுதில்லியில் பாதுகாப்புத்துறைச் செயலாளர் திரு கிரிதர் அரமனே முன்னிலையில் கையெழுத்திட்டனர்.
- இந்தக் கூட்டு முயற்சி மேம்பட்ட செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை வழங்கும். மேம்பட்ட எரிபொருள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பை வடிவமைத்தல், சோதனை செய்தல், உற்பத்தி செய்ய உள்நாட்டு திறன்களை மேம்படுத்துவதில் இது கவனம் செலுத்தும்.
- என்ஜின் தொழில்நுட்பம் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளில் சமீபத்திய முன்னேற்றங்களைப் பயன்படுத்துவதன் மூலம், நிறுவனங்கள் போர் வாகனங்கள் துறையில் தன்னம்பிக்கையை உறுதி செய்யும்.
- 'தற்சார்பு இந்தியா' முன்முயற்சியின் கீழ் நாட்டிற்குள் முக்கியமான தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான அரசின் தீர்மானத்தை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் உறுதிப்படுத்துகிறது.