Type Here to Get Search Results !

2nd MARCH 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


2nd MARCH 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

பீகார் மாநிலம் பெகுசாராயில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து புதிய திட்டப் பணிகளுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்
  • பிரதமர் திரு நரேந்திர மோடி பீகாரின் பெகுசாராயில் ரூ. 13,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். 
  • நாடு முழுவதும் சுமார் ரூ. 1.48 லட்சம் கோடி மதிப்பிலான பல்வேறு எண்ணெய் மற்றும் எரிவாயுத் திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
  • பரவுனியில் இந்துஸ்தான் உர்வாரக் மற்றும் ரசாயன் லிமிடெட் (HURL) உரத் தொழிற்சாலையையும் பிரதமர் தொடங்கி வைத்தார். சுமார் ரூ. 3917 கோடி மதிப்பிலான பல்வேறு ரயில்வே திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்து புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
  • நாட்டில் உள்ள கால்நடைகளுக்கான டிஜிட்டல் தரவுத்தளமான 'பாரத் பசுதன்' -ஐ பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். 
  • 'பாரத் பசுதான்' தரவுத்தளத்தின் கீழ் உள்ள அனைத்து தரவுகளையும் தகவல்களையும் பதிவு செய்யும் செயலியான '1962 விவசாயிகள் செயலி' என்ற செயலியையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் ரூ. 21,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நிறைவடைந்த திட்டங்களைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்
  • பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் இன்று ரூ. 21,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். 
  • இன்றைய வளர்ச்சித் திட்டங்களில் சாலை, ரயில்வே, தூய்மை கங்கை உள்ளிட்ட திட்டப் பணிகள் அடங்கும்.
  • ரூ. 18,100 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்ததுடன், பல திட்டங்களுக்கு அடிக்கலும் நாட்டினார்.
  • பீகாரில் தூய்மை கங்கை திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 2,190 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட பன்னிரண்டு திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டம் கிருஷ்ணாநகரில் ரூ.15,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
  • பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாநகரில் ரூ.15,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் மின்சாரம், ரயில் மற்றும் சாலைத் திட்டங்கள் தொடர்புடையவை ஆகும்.
  • புருலியா மாவட்டம் ரகுநாத்பூரில் அமைந்துள்ள ரகுநாத்பூர் அனல் மின் நிலையத்தின் இரண்டாம் கட்டத்திற்கு (2x660 மெகாவாட்) பிரதமர் அடிக்கல் நாட்டினார். தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இந்த நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் திட்டம் மிகவும் திறன் வாய்ந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. புதிய ஆலை நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாக அமையும்.
  • மெஜியா அனல் மின் நிலையத்தின் 7 மற்றும் 8-வது அலகுகளில் ஃப்ளூ கேஸ் டிசல்பிரைசேஷன் (FGD) அமைப்பை பிரதமர் தொடங்கி வைத்தார். சுமார் ரூ. 650 கோடி செலவில் உருவாக்கப்பட்ட எஃப்.ஜி.டி அமைப்பு ஃப்ளூ வாயுக்களில் இருந்து சல்பர் டை ஆக்சைடை அகற்றி, சுத்தமான ஃப்ளூ வாயுவை உற்பத்தி செய்து ஜிப்சம் உருவாக்கும். இது சிமெண்ட் தொழில்துறையில் பயன்படுத்தப்படுகிறது.
  • தேசிய நெடுஞ்சாலை எண் 12-ல் ஃபராக்கா-ராய்கன்ஜ் பிரிவை (100 கிலோமீட்டர்) நான்கு வழிப்பாதையாக மாற்றும் சாலைத் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். சுமார் ரூ. 1986 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த திட்டம், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும்.
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா, தேசிய நகர்ப்புற கூட்டுறவு நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (NUCFDC) என்ற அமைப்பை புதுதில்லியில் தொடங்கி வைத்தார்
  • மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா, நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கான ஒருங்கிணைந்த அமைப்பான தேசிய நகர்ப்புற கூட்டுறவு நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தை புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார். 
  • இந்த நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவுத் துறை இணையமைச்சர் திரு பி.எல்.வர்மா, கூட்டுறவுத் துறை செயலாளர் டாக்டர் ஆஷிஷ் குமார் பூதானி மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நடப்பு நிதியாண்டில் 2024 பிப்ரவரி வரையிலான காலத்தில் நிலக்கரி உற்பத்தி
  • நிறுவனங்களுக்குச் சொந்தமான தனிப் பயன்பாட்டு நிலக்கரிச் சுரங்கங்கள் மற்றும் வணிக ரீதியிலான நிலக்கரிச் சுரங்கங்கள் என இரண்டிலுமே நிலக்கரி உற்பத்தி அதிகரித்துள்ளது. 
  •  2023 ஏப்ரல் 1 முதல் பிப்ரவரி 29, 2024 வரையிலான காலகட்டத்தில் இந்த இரு வகை சுரங்கங்களிலிருந்து மொத்த நிலக்கரி உற்பத்தி மற்றும் பயன்பாட்டுக்கு அனுப்பியது முறையே 126.80 மில்லியன் டன் மற்றும் 128.88 மில்லியன் டன் ஆகும்.
  • இது நிதியாண்டு 2022-23 நிதியாண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது முறையே 27.06 சதவீதம் மற்றும் 29.14 சதவீதம் அதிகமாகும். 
  • இது உயர்ந்த செயல்திறன் மற்றும் வலுவான கட்டமைப்பைப் பிரதிபலிக்கிறது. 29 பிப்ரவரி 2024 நிலவரப்படி, மொத்த உற்பத்தி சுரங்கங்களின் எண்ணிக்கை 54 ஆக இருந்தது.
மத்திய அரசு, திரிபுரா அரசு மற்றும் திரிப்ரா மோத்தா அமைப்புக்கு இடையே முத்தரப்பு ஒப்பந்தம்
  • மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா முன்னிலையில், மத்திய அரசு, திரிபுரா அரசு மற்றும் திரிப்ரா மோத்தா என்று பிரபலமாக அழைக்கப்படும் உள்நாட்டு முற்போக்கு பிராந்திய கூட்டணி மற்றும் சம்பந்தப்பட்ட பிற தரப்பினரிடையே முத்தரப்பு ஒப்பந்தம் புதுதில்லியில் இன்று கையெழுத்தானது.
  • இந்த ஒப்பந்தத்தின் கீழ், திரிபுராவின் பழங்குடி மக்களின் வரலாறு, நிலம் மற்றும் அரசியல் உரிமைகள், பொருளாதார வளர்ச்சி, அடையாளம், கலாச்சாரம் மற்றும் மொழி தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் சுமூகமாக தீர்க்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இதனுடன், நல்ல தீர்வை உறுதி செய்வதற்காக, ஒரு கூட்டுப் பணிக்குழுவை அமைக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel