29th MARCH 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
2047-ஆம் ஆண்டு வரை இந்திய பொருளாதாரம் 8 சதவீதம் வளா்ச்சி
- 2047-ஆம் ஆண்டு வரை இந்திய பொருளாதாரம் 8 சதவீதம் வளா்ச்சி அடைய முடியும் என்று சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) இந்திய நிா்வாக இயக்குநா் கிருஷ்ணமூா்த்தி வெங்கட சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.
- இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உள்நாட்டு நுகா்வின் பங்கு சுமாா் 58 சதவீதமாகும். எனவே உள்நாட்டு பொருளாதாரம் மீது இந்தியா கவனம் செலுத்த வேண்டும்.
- போதிய அளவு வேலைவாய்ப்புகளை உருவாக்க முடிந்தால், அது அதிக நுகா்வுக்கு வழிவகுக்கும். வேலைவாய்ப்புகளை உருவாக்க உற்பத்தித் துறையை ஊக்குவிக்க வேண்டியது அவசியம்.
- இதேபோல நிலம், தொழிலாளா், மூலதனம், வங்கி உள்ளிட்ட துறைகளில் சீா்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
- மத்திய பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான எச்.ஏ.எல். நிறுவனம் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரித்துள்ள தேஜஸ் இலகுரக போா் விமானம் (எல்.சி.ஏ. எம்.கே.1ஏ) பெங்களூரில் வியாழக்கிழமை வானத்தில் பறந்து, பல்வேறு சாகசங்களை அரங்கேற்றியது.
- முந்தைய தேஜஸ் விமானங்களைக் காட்டிலும் கூடுதல் தொழில்நுட்பத்துடன் புதிய வகை விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- புதியவகை விமானத்தில் அதிநவீன மின்னணு ரேடாா் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் போா்புரிவதற்கான புதிய தொழில்நுட்பங்கள், அதிகநவீன தகவல்தொடா்பு சாதனங்கள், கூடுதல் பதில் தாக்குதல் திறனுடன் கூடிய கருவிகள், மேம்படுத்தப்பட்ட பராமரிப்பு அம்சங்களும் புதிய வகை விமானத்தில் சோக்கப்பட்டுள்ளன.
- 18 நிமிடங்களுக்கு வானத்தில் பறந்த போா் விமானத்தை ஓய்வுபெற்ற தலைமை சோதனை விமானிக் குழு கேப்டன் கே.சி.வேணுகோபால் செலுத்தினாா்.
- இந்தியா - மொசாம்பிக் - தான்சானியா முத்தரப்பு பயிற்சியின் இரண்டாவது கட்டம் மொசாம்பிக்கில் உள்ள நாகாலாவில் 2024, மார்ச் 28 அன்று நிறைவடைந்தது.
- இந்த ஒரு வார காலப் பயிற்சி இந்தியா, மொசாம்பிக், தான்சானியா கடற்படைகளுக்கு இடையிலான மேம்பட்ட கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் இயங்குதன்மையின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.
- ஐ.என்.எஸ் தீர், சுஜாதா ஆகியவை மார்ச் 21 முதல் 28 வரை தொடர்ச்சியான கூட்டுப் பயிற்சிகள், பயிற்சி அமர்வுகள் மற்றும் கூட்டு நடவடிக்கைகளில் பங்கேற்றன.
- இது மூன்று கடற்படைகளுக்கும் அறிவைப் பரிமாறிக்கொள்வதற்கும், திறன்களை மேம்படுத்துவதற்கும், பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் விலைமதிப்பற்ற வாய்ப்புகளை வழங்கியது.
- இந்தப் பயிற்சி இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. ஆரம்ப துறைமுக கட்டம் மார்ச் 21 முதல் 24 வரை சான்சிபாரில் உள்ள ஐ.என்.எஸ் தீர் மற்றும் மாபுடோவில் உள்ள ஐ.என்.எஸ் சுஜாதா ஆகியவற்றில் ஒரே நேரத்தில் தீவிர பயிற்சி அமர்வுகள் நடைபெற்றன.
- ஐ.என்.எஸ் தீர் மற்றும் ஐ.என்.எஸ் சுஜாதா முறையே தான்சானியா மற்றும் மொசாம்பிக் கடற்படைகளில் இருந்து கடல் ரைடர்களை ஏற்றிக்கொண்டதிலிருந்து மார்ச் 24, அன்று கடல் கட்டம் தொடங்கியது.
- மொசாம்பிக் கடற்படைக் கப்பல் நமதிலி மற்றும் தான்சானியா கடற்படைக் கப்பல் ஃபட்டுண்டு ஆகியவற்றுடனான கூட்டு நடவடிக்கைகள், சாகர் (பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி) தொலைநோக்குக்கு ஏற்ப பிராந்திய கடற்படைகளுடன் குறிப்பிடத்தக்க ஒத்துழைப்பு மற்றும் நீடித்த முயற்சிகளை வெளிப்படுத்தின.
- மொசாம்பிக்கின் நாகாலாவில் ஐ.என்.எஸ் தீர், ஐ.என்.எஸ் சுஜாதா ஆகியவற்றில் நடைபெற்ற நிறைவு விழாவில் மூன்று கடற்படைகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
- வெற்றிகரமான ஒத்துழைப்பு, கடல்சார் திறன்களைப் புரிந்துகொள்வது மற்றும் பயிற்சியின் போது பகிரப்பட்ட நோக்கங்கள் ஆகியவற்றை நிறைவுக் குறிப்புகள் எடுத்துக்காட்டின.
- கடல்சார் பாதுகாப்பு மற்றும் பிராந்திய நிலைத்தன்மைக்குத் தொடர்ச்சியான ஒத்துழைப்பை இது வலியுறுத்தியது. விருப்பமான பாதுகாப்பு கூட்டாளியாக இந்தியாவின் உறுதிப்பாட்டை இது அடிக்கோடிட்டுக் காட்டியது.