27th MARCH 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஒரே பாலின திருமண சட்டம் - தாய்லாந்து நாடாளுமன்றம் ஒப்புதல்
- தாய்லாந்தில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க வகை செய்யும் திருமண சமத்துவ மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- எந்த பாலினத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் திருமணம் செய்தால் அவர்களுக்கு சம உரிமைகள் கிடைப்பதை இந்த மசோதா சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது.
- இந்த மசோதா, சிவில் மற்றும் வணிக குறியீடுகளில் 'ஆண் மற்றும் பெண்' என்கிற வார்த்தைகளை 'தனிநபர்கள்' என்றும் 'கணவன் மற்றும் மனைவி' என்கிற வார்த்தைகளை 'மணம் புரிந்த இணையர்கள்' என்று மாற்றப்பட்டுள்ளது.
- இந்த மசோதா மீதான விவாதத்திற்குப் பிறகு இன்று ( 27.03.2024) வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, மொத்தம் உள்ள 415 உறுப்பினர்களில் 400 உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் பெருவாரியான உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேறியது.
- இந்த தம்பதிகளுக்கு முழு சட்ட உரிமைகள் மட்டுமல்லாமல் நிதி மற்றும் மருத்துவ உரிமைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகளை இந்த சட்டம் வழங்குகிறது.
- இதையடுத்து, நிறைவேற்றப்பட்ட மசோதா செனட் அவைக்கும் அதன் பிறகு ராஜ்ய ஒப்புதலுக்கு மன்னருக்கும் அனுப்பப்படும். பெரும்பாலும் கீழ் சபையில் நிறைவேற்றப்படும் சட்டத்திருத்தத்தை செனட் சபை ஏற்றுக்கொள்ளும் என்பதால், இந்த சட்ட மசோதாவும் செனட் சபையில் எதிர்ப்பின்றி நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அதன்பின்னர் மன்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். மன்னர் ஒப்புதல் அளித்தவுடன் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
- இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால், தென்கிழக்கு ஆசியாவில் இத்தகைய சட்டத்தை நிறைவேற்றிய முதல் நாடாக தாய்லாந்து மாறும். ஆசிய அளவில் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்திய நாடுகளில் தைவான் மற்றும் நேபாளத்திற்கு அடுத்தபடியாக மூன்றாவது நாடாக தாய்லாந்து கருதப்படும்.
- ஒன்றிய அரசின் பணியாளர் நலத்துறை அமைச்சகத்தின் துணை செயலாளர் வெளியிட்ட உத்தரவில், 'ஒன்றிய அரசின் நியமனக் குழு பரிந்துரையின் அடிப்படையில், தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) தலைமை இயக்குநராக, மகாராஷ்டிரா மாநில தீவிரவாத எதிர்ப்புப் படையின் (ஏடிஎஸ்) தலைவர் சதானந்த் வசந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
- அதேபோல் போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணியக டிஜி-யாக ராஜீவ் குமார் சர்மா என்பவரும், தேசிய பேரிடர் மேலாண்மை படையின் டிஜி-யாக பியூஷ் ஆனந்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முன்னதாக தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) தலைமை இயக்குநராக பணியாற்றி வரும் தின்கர் குப்தா வரும் 31ம் தேதி ஓய்வு பெறுவதால், அந்தப் பதவிக்கு சதானந்த் வசந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
- லோக்பால் அமைப்பின் நீதித்துறை உறுப்பினராக ரிது ராஜ் அவஸ்தி பொறுப்பேற்றார். அவருக்கு லோக்பால் தலைவர் நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
- லோக்பால் உறுப்பினர்களாக திரு பங்கஜ் குமார், திரு அஜய் திர்கி ஆகியோர் பொறுப்பேற்றனர். இதற்கான விழா தில்லியில் உள்ள லோக்பால் அலுவலகத்தில் நடைபெற்றது.
- தற்போதுள்ள இரண்டு நீதித்துறை உறுப்பினர்களான நீதிபதி பி.கே.மொஹந்தி, நீதிபதி அபிலாஷா குமாரி ஆகியோரும், உறுப்பினர்களான திரு டி.கே.ஜெயின், திருமதி அர்ச்சனா ராமசுந்தரம், திரு மகேந்தர் சிங் ஆகிய மூன்று பேரும் 2024 மார்ச் 24 அன்று லோக்பாலில் தங்கள் பதவிக்காலத்தை நிறைவு செய்ததால் புதிய நியமனங்கள் நடைபெற்றுள்ளன.
- ரிது ராஜ் அவஸ்தி, இந்திய லோக்பால் அமைப்பின் நீதித்துறை உறுப்பினராக சேருவதற்கு முன்பு, இந்தியாவின் 22 வது சட்ட ஆணையத்தின் தலைவராக பணியாற்றி வந்தார். அதற்கு முன்பு கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தார்.