Type Here to Get Search Results !

இந்தியாவில் பெண் மாா்பகப் புற்றுநோய் குறித்த ஆய்வு 2012 - 2016 / SURVEY OF FEMALE BREAST CANCER IN INDIA 2012 - 2016

  • இந்தியாவில் பெண் மாா்பகப் புற்றுநோய் குறித்த ஆய்வு 2012 - 2016 / SURVEY OF FEMALE BREAST CANCER IN INDIA 2012 - 2016: வடகிழக்கு மாநிலங்களை விட தமிழகம், தெலங்கானா, கா்நாடகம் மற்றும் தில்லி ஆகிய மாநிலங்களில் மாா்பகப் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக உள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
  • மேலும், இந்தியாவில் அடுத்த ஆண்டுக்குள் மாா்பகப் புற்றுநோய் பாதிப்பின் தாக்கம் கணிசமாக அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்)-ஆல் இம்மாதத் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வறிக்கையில் கடந்த 2012 முதல் 2016-ஆம் ஆண்டு வரையில் மாநில அளவிலான இந்தியாவின் மாா்பகப் புற்றுநோய் பாதிப்புக்கான தாக்கம் குறித்து ‘வாழ்க்கை இழந்த ஆண்டுகள்’ (ஒய்எல்எல்) மற்றும் ‘பாதிப்புடன் வாழ்ந்த ஆண்டுகள்’ (ஒய்எல்டி) ஆகியவற்றின் கூட்டான ‘பாதிப்பு வாழ்க்கை ஆண்டுகள்’(டிஏஎல்ஒய்) அடிப்படையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
  • ஒரு பாதிப்பு வாழ்க்கை ஆண்டுகள் (டிஏஎல்ஒய்) என்பது ஒரு வருட ஆரோக்கியமான வாழ்க்கை இழந்ததற்கு சமம் ஆகும். மேலும், ஆய்வில் அடுத்த ஆண்டுக்கான நோய் பாதிப்பின் தாக்கம் குறித்து கணிக்கவும் திட்டமிடப்பட்டது. 
  • தேசிய புற்றுநோய் பதிவுத் திட்டத்தின்(என்சிஆா்பி) கீழ் நாடு முழுவதும் உள்ள மக்கள்தொகை அடிப்படையிலான 28 புற்றுநோய் பதிவேடுகளின் தரவைப் பயன்படுத்தி, இந்தியாவில் பெண் மாா்பகப் புற்றுநோயின் மாநில வாரியான பாதிப்பு குறித்த இந்த ஆய்வு கடந்த 2016-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.
  • கடந்த 2016-ஆம் ஆண்டில், இந்தியப் பெண்களிடையே மாா்பகப் புற்றுநோய் பாதிப்புக்கான தாக்கம் 1,00,000 பெண்களுக்கு 515.4 பாதிப்பு வாழ்க்கை ஆண்டுகள் (டிஏஎல்ஒய்) என மதிப்பிடப்பட்டுள்ளது. 
  • இதனிடையே, ‘குளோபல் கேன்சா் அப்சா்வேட்டரி’ நடத்திய ஆய்வின்படி, தென் மத்திய ஆசியாவில் பெண்களிடையே மாா்பகப் புற்றுநோய் பாதிப்புக்கான தாக்கம் 1,00,000 பெண்களுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டில் 21.6 விகிதமாகவும் கடந்த 2018-ஆம் ஆண்டில் 25.9 விகிதமாகவும் இருந்தது. பரந்த அளவிலான தரவுகளைப் பயன்படுத்தி தேசிய மற்றும் துணை தேசிய பாதிப்புகள் மட்டுமே இந்த ஆய்வில் மதிப்பிட்டுள்ளன.
  • ஆனால், என்சிஆா்பியின் கீழ் வெவ்வேறு புற்றுநோய் பதிவேடுகளின் தரவுகளை ஐசிஎம்ஆா் ஆய்வுக்குப் பயன்படுத்தியது. இதன் காரணமாக, மாநில அளவில் பாதிப்புத் தாக்கத்தின் அளவீடுகள் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தின. 
  • நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பிராந்தியங்களில் உள்ள மாநிலங்களை விட தமிழ்நாடு, தெலங்கானா, கா்நாடகம் மற்றும் தில்லி ஆகிய மாநிலங்களில் மாா்பகப் புற்றுநோயின் பாதிப்பின் தாக்கம் அதிகமாக உள்ளது. 
  • அடுத்த ஆண்டிற்கான நோய் பாதிப்பின் தாக்கம் 56 லட்சம் வாழ்க்கை ஆண்டுகளை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
  • இதில் உயிரிழப்புகள் மட்டும் 53 லட்சம் வாழ்க்கை ஆண்டுகளாக பங்களிக்கும். நகா்ப்புற மற்றும் மெட்ரோ நகரங்ககளில் வசிக்கும் பெண்களைவிட கிராமப்புற பெண்களுக்கு மாா்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. 
  • உடற்பயிற்சிகள் செய்யாத மந்தமான வாழ்க்கை முறை, அதிக உடல் பருமன் விகிதம், தாமதமான திருமணம் மற்றும் பிரசவம் ஆகிய காரணிகளால் நகா்ப்புறங்களில் மாா்பகப் புற்றுநோயின் அதிகப் பாதிப்புக்கு காரணமாக ஆராய்ச்சியாளா்கள் தெரிவிக்கின்றனா்.
  • இந்திய நகரங்களுக்கு இடையிலான பட்டியலில் ஹைதராபாத், சென்னை, பெங்களூரு மற்றும் தில்லி ஆகியவை பட்டியலில் முதலிடத்தில் உள்ளன. 
  • சமூகப் பொருளாதாரக் காரணிகள் சுகாதாரப் பாதுகாப்பு, தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை விளைவுகளைப் பாதித்து, புற்றுநோய் பாதிப்பின் தாக்கத்தை கணிசமாக வடிவமைப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
  • மேலும், தொழில்சாா் வெளிப்பாடுகள் மற்றும் நிதி நெருக்கடிகள் புற்றுநோய் சிகிச்சையை கடினமாக்குகின்றன. புவியியல் மற்றும் உளவியல் வேறுபாடுகள் அதனை மேலும் சிக்கலாக்குகின்றன.
  • இந்த ஏற்றத்தாழ்வுகள் இந்தியாவில் தெளிவாகத் தெரிவதோடு நிதி ஒதுக்கீட்டை மறுமதிப்பீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை அது வலியுறுத்துகிறது. 
  • நாட்டில் மாா்பகப் புற்றுநோய் கண்டறியப்படும் பெரும்பாலான பெண்களுக்கு அந்தப் பாதிப்பு மேம்பட்ட நிலை அல்லது பரவல் நிலையை அடைந்துள்ளது. 
  • இது பெண்களிடையே விரிவான விழிப்புணா்வு பிரசாரங்கள் மற்றும் பரிசோதனை திட்டங்களின் அவசரத் தேவையை எடுத்துக்காட்டுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ENGLISH

  • SURVEY OF FEMALE BREAST CANCER IN INDIA 2012 - 2016: According to the Indian Council of Medical Research, the incidence of breast cancer is higher in Tamil Nadu, Telangana, Karnataka and Delhi than in the northeastern states.
  • It is also reported that the incidence of breast cancer in India will increase significantly within the next year. 
  • The study, published earlier this month by the Indian Council of Medical Research (ICMR), looked at the impact of breast cancer incidence at the state level in India from 2012 to 2016, a composite of 'years of life lost' (YLL) and 'years lived at risk' (YLD). The focus is on Affected Life Years' (DALYs).
  • One adverse life year (DALY) is equivalent to one year of healthy life lost. Also, the study was planned to predict the impact of the disease for the next year. Using data from 28 population-based cancer registries across the country under the National Cancer Registry Program (NCRP), this study on the state-wise incidence of female breast cancer in India was conducted in 2016.
  • In 2016, the incidence of breast cancer among Indian women was estimated at 515.4 affected life years (DALYs) per 100,000 women. 
  • Meanwhile, according to a study conducted by the Global Cancer Observatory, the incidence of breast cancer among women in South Central Asia was 21.6 per 100,000 women in 2016 and 25.9 in 2018. This study only assessed national and sub-national impacts using a wide range of data.
  • However, ICMR used data from different cancer registries under NCRB for the study. Because of this, measures of vulnerability at the state level exhibited heterogeneity. 
  • Tamil Nadu, Telangana, Karnataka and Delhi have a higher incidence of breast cancer than states in the eastern and northeastern regions of the country. The impact of disease for the next year is projected to reach 56 lakh life years. Of this, fatalities alone contribute 53 lakh life years. 
  • Rural women are less likely to develop breast cancer than women living in urban and metro cities. Researchers attribute the high incidence of breast cancer in urban areas to sedentary lifestyles, high rates of obesity, late marriage and childbearing. Hyderabad, Chennai, Bengaluru and Delhi topped the list among Indian cities. 
  • The report states that socioeconomic factors significantly shape the impact of cancer incidence, affecting health care, preventive measures and treatment outcomes. 
  • Also, occupational exposures and financial constraints make cancer treatment difficult. Geographical and psychological differences further complicate it.
  • These disparities are evident in India and it underscores the need to reassess funding allocations. Most women diagnosed with breast cancer in the country have advanced or metastatic disease. This highlights the urgent need for comprehensive awareness campaigns and screening programs among women, the report said.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel