26th MARCH 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
சிம் பயன்பாடு குறித்த பரிந்துரைகளை டிராய் வெளியிட்டுள்ளது
- இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) இன்று 'மெஷின்-டு-மெஷின் (எம் 2 எம்) தகவல்தொடர்புகளுக்கான உட்பொதிக்கப்பட்ட சிம் பயன்பாடு' குறித்த பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது.
- தொலைத் தொடர்புத் துறை, 09.11.2021 தேதியிட்ட கடிதத்தின் மூலம், (எம்2எம்) தகவல்தொடர்புகளுக்கு உட்பொதிக்கப்பட்ட சிம் பயன்பாடு குறித்து டிராய் சட்டம், 1997 இன் கீழ் பரிந்துரைகளைக் கோரியது.
- இது தொடர்பாக, பங்குதாரர்களிடமிருந்து கருத்துகள் / எதிர் கருத்துகளைக் கோருவதற்காக 25.07.2022 அன்று 'எம்2எம் கம்யூனிகேஷன்களுக்கான உட்பொதிக்கப்பட்ட சிம்' குறித்த ஆலோசனை அறிக்கையை டிராய் வெளியிட்டது.
- இதற்கு பதிலளித்த 15 பங்குதாரர்கள் தங்கள் கருத்துக்களை சமர்ப்பித்தனர். ஆலோசனை அறிக்கை மீதான திறந்த விவாதம் 14.12.2022 அன்று மெய்நிகர் முறையில் நடைபெற்றது.
- பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் / உள்ளீடுகள், இந்த விஷயத்தில் விரிவான விவாதங்கள் மற்றும் அதன் சொந்த பகுப்பாய்வின் அடிப்படையில், டிராய் தனது பரிந்துரைகளை இறுதி செய்துள்ளது.
- பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழு கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. அதற்கடுத்த நாளே பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் உடனடியாகப் போர்தொடுத்த இஸ்ரேல் இன்றுவரை தாக்குதல் நடத்திக்கொண்டு இருக்கிறது.
- பாலஸ்தீன சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி இதுவரை, 32,226-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் படையால் கொல்லப்பட்டிருக்கின்றனர். அதோடு, 74,518-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர்.
- இந்தப் போரில் இஸ்ரேலை உலக நாடுகள் பல எதிர்த்தபோதும், தொடக்கத்தில் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை அனுப்பிவைத்த அமெரிக்கா ஒரு கட்டத்தில், இஸ்ரேலுக்கு எதிராக நேரடியாக எதுவும் கூறாமல், வெறுமனே போர்நிறுத்தம் வேண்டும் எனக் கூவியது.
- தற்போது அதன் நீட்சியாகவே, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட காஸா போர்நிறுத்த தீர்மானத்தின்மீது வாக்களிப்பதிலிருந்து விலகியிருக்கிறது.
- அமெரிக்கா தன்னுடைய வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தாமல் விலகியதால், காஸா போர்நிறுத்த தீர்மானம் ஐ.நா-வில் முதன்முறையாக நிறைவேறியிருக்கிறது.
- நேற்று நடந்த இந்த வாக்கெடுப்பில், அமெரிக்காவைத் தவிர ரஷ்யா, சீனா உட்பட 14 நாடுகள் போர் நிறுத்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.