24th MARCH 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
வெங்காய ஏற்றுமதிக்கான தடை காலவரையறையின்றி நீட்டிப்பு
- மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், வெங்காயத்தின் விலை அதிகரித்து விடாமல் இருப்பதற்காக இம்மாத இறுதி வரை வெங்காயத்துக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீட்டிக்கப்படுவதாக வெளிநாட்டு வர்த்தகத் தலைமை இயக்குநரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
- ஆசியாவின் வெங்காய ஏற்றுமதியில் 50 சதவீதம் அதிகமாக, இந்தியாவிலிருந்து தான் வெங்காய ஏற்றுமதியாகிறது. கடந்த மார்ச் 31, 2023 உடன் முடிவடைந்த நிதியாண்டில், வரலாற்றில் இதுவரை இந்தியாவிலிருந்து 2.5 மில்லியன் மெட்ரிக் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படாதது குறிப்பிடத்தக்கது.
- இந்நிலையில், அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளம் தொடங்கி இந்தியாவின் வெங்காய ஏற்றுமதியை அதிகமாகச் சார்ந்திருக்கும் மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் மத்திய அரசின் அறிவிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
- மேற்கண்ட நாடுகளில் வெங்காய விலை ஏற்றத்தைக் கண்டுள்ளதால், சீனா, எகிப்து ஆகிய நாடுகளில் வெங்காய ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக நிலவரங்கள் தெரிவிக்கின்றன.