23rd MARCH 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஊத்தங்கரை அருகே 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டெடுப்பு
- ஊத்தங்கரை அருகே 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், குன்னத்தூர் அருகே உள்ள சென்னானூர் பகுதி, தற்போது தமிழக அரசால் தொல்லியல் அகழ்வாய்வு செய்ய தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- இந்த இடத்திலிருந்து 300 மீ., தொலைவில் உள்ள மாந்தோப்பில், இரண்டு பனைமரங்களுக்கு இடையில், 16ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- இந்த நடுகல்லில் வீரன் ஒருவன், வலது கையில் ஈட்டியை ஏந்தியவாறும், இடது கையில் கேடயத்தை தாங்கியவாறும் பொறிக்கப்பட்டுள்ளது. கேடயத்தில் பூ வேலைப்பாடு செய்யப்பட்டுள்ளது தெளிவாக உள்ளது.
- பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக பூடான் சென்றுள்ளார். பாரோ சர்வதேச விமான நிலையத்தில் பிரதமர் மோடி தரையிறங்கியதும் அந்நாட்டு பிரதமர் ஷெரிங் டோப்காய், இந்திய பிரதமர் மோடியை ஆரத் தழுவி வரவேற்றார்.
- பின்னர் அந்நாட்டு ராணுவ மரியாதையை மோடி ஏற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பிரதமர் மோடிக்கு பூடானின் மிக உயரிய விருதான 'ஆர்டர் ஆப் தி ட்ருக் கியால்போ' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
- இதனை பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக், வழங்கினார். இந்த விருதை பெறும் அயல்நாட்டை சேர்ந்த முதல் நபர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றார்.
- கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ஆர்எல்வி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் விண்கலம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியது.
- இதன் பலனாக 2016-ம் ஆண்டில் ஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோவின் முதல் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஹெக்ஸ் என்று பெயரிடப்பட்ட இந்த விண்கலம் பத்திரமாக பூமிக்குத் திரும்பியது.
- இதன்பிறகு கடந்த 2023-ம் ஆண்டில் இஸ்ரோ தயாரித்த புதிய விண்கலம் ஹெலிகாப்டர் மூலம் வானில் பறக்க விடப்பட்டது. இந்த விண்கலம் பத்திரமாக ஓடுபாதையில் தரையிறங்கியது.
- இதைத் தொடர்ந்து இஸ்ரோ தயாரித்த 'புஷ்பக்' என்ற புதிய விண்கலம் ஹெலிகாப்டர் மூலம் வானில் பறக்கவிடப்பட்டது. இந்த விண்கலம் கர்நாடகாவின் சித்ரதுர்காவில் அமைக்கப்பட்டிருந்த ஓடுபாதையில் பத்திரமாக தரையிறங்கியது.
- அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் விஞ்ஞானியாக 2011-ம்ஆண்டு வரை பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஜெயந்த் மூர்த்தி.
- இவரது ஆராய்ச்சிகள் புளூட்டோ உள்ளிட்ட குறுங்கோள்களை மையப்படுத்தி இருந்தது. குறிப்பாக, பிரபஞ்சபுறஊதா கதிர்களின் பின்னணியைஅளவிடுவதில் கவனம் செலுத்தினார்.
- சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தில் நிகழக்கூடிய வானியற்பியல் மாற்றங்களை உற்று நோக்குவதாக இவரது ஆய்வுகள் அமைந்தது. நாசாவிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு தற்போது கவுரவ பேராசிரியராக வானியற்பியல் பாடம் கற்பித்து வருகிறார்.
- விண்வெளியில் செவ்வாய் கோளுக்கும் வியாழன் கோளுக்கும் இடையில் உள்ள சுற்று வட்டப் பாதையில் சுழன்றுகொண்டிருக்கிறது ஒரு குறுங்கோள்.
- சூரியனை சுற்றி வர 3 ஆண்டுகள் 3 மாதங்கள் கால அவகாசம் எடுக்கும் இந்த குறுங்கோள் '2005 ஈஎக்ஸ்296' (2005 EX296) என்றே இதுவரை அழைக்கப்பட்டது.
- தற்போது இதற்கு, '(215884) ஜெயந்த்மூர்த்தி' என்று சர்வதேச வானியல் சங்கத்தினர் பெயர்சூட்டி இந்திய வானியற்பியலாளர் ஜெயந்த் மூர்த்தியை கவுரப்படுத்தி இருக்கிறார்கள்.