Type Here to Get Search Results !

22nd MARCH 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


22nd MARCH 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

பொன்முடி அமைச்சராக பதவியேற்பு
  • சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து, அவர் அமைச்சர் பதவியை இழந்தார். 
  • இதை எதிர்த்து, பொன்முடி உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த வழக்கில், உயர்நீதிமன்றம் விதித்த தண்டனை மற்றும் அபராதத்தை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
  • இதையடுத்து அவருடைய தகுதி நீக்கம் ரத்தாகி மீண்டும் திருக்கோவிலூர் எம்,எல்,ஏ. ஆனார். இதைத்தொடர்ந்து அவருக்கு மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு முதலமைச்சர் பரிந்துரைத்தார். ஆனால் அதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்தார்.
  • ஆளுநரின் இந்த முடிவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு மனு நேற்று விசாரணைக்கு வந்தது. 
  • அப்போது தமிழக ஆளுநரின் செயல்பாடு தொடர்பாக சரமாரியான கேள்விகளை எழுப்பிய தலைமை நீதிபதி, ஆளுநர் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறுவதாக கண்டனம் தெரிவித்தார்.
  • மேலும் ஆளுநர் இவ்வாறு நடந்து கொள்வது முறையல்ல. தமிழ்நாடு ஆளுநர் உச்சநீதிமன்றத்தை அவமதித்துள்ளார். பொன்முடியை குற்றவாளி என தீர்மானித்த உத்தரவை உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு நிறுத்தி வைத்த பின், அவர் குற்றவாளி தான் என ஆளுநர் எங்களுக்கு பாடம் நடத்த முடியாது. ஆளுநருக்கு இரவு முழுவதும் காலக்கெடு விதிக்கிறோம் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் காட்டமாக தெரிவித்தார்.
  • உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, நேற்று மாலை சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி, மீண்டும் அமைச்சராக பதவியேற்க பொன்முடிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்தார். 
  • இதனை அடுத்து, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று (22.03.2024) பிற்பகல் 3.30 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சராக பதவி ஏற்றுள்ள பொன்முடிக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • மேலும், அமைச்சர் காந்தி கவனித்து வந்த கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியம் மீண்டும் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
  • பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரான ராஜகண்ணப்பன் கதர் மற்றும் கிராம தொழில்கள் துறையையும் இனி கவனிப்பார். அதேசமயம், அமைச்சர் காந்தி 3 மாதங்களுக்கு முன்பு இருந்ததைப் போல கைத்தறித்துறையை மட்டும் கவனிப்பார்.
புதுதில்லி தேசிய விலங்கியல் பூங்காவில் சர்வதேச காடுகள் தினம் கொண்டாட்டம்
  • புதுதில்லியில் உள்ள தேசிய விலங்கியல் பூங்காவில் நேற்று (21 மார்ச் 2024) சர்வதேச காடுகள் தினம் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டுக்கான சர்வதேச காடுகள் தினத்தின் கருப்பொருள் “காடுகளும் புதுமையும்: சிறந்த உலகத்துக்கான புதிய தீர்வுகள்” (Forests and innovation: new solutions for a better world) என்பதாகும். 
  • காடுகள், மரங்கள் மற்றும் நம் வாழ்வில் அவற்றின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த தினத்தின் நோக்கமாகும்.
  • இதனையொட்டி புதுதில்லி தேசிய விலங்கியல் பூங்காவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம் தொடர்பான ஒரு ஆவணப்படம் திரையிடப்பட்டது. பின்னர் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
  • நிலையான வன மேலாண்மை மற்றும் வளங்களின் பயன்பாடு ஆகியவை பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கு முக்கியமாகும். அது தொடர்பான செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்காகவே சர்வதேச காடுகள் தினம் கொண்டாடப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel