21st MARCH 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
மத்திய மின்துறை வெளியிட்ட 2022-23 ஆண்டுக்கான தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு மின்வாரியத்துக்கு 50-வது இடம்
- மத்திய மின்துறை 2022-23-ம்நிதியாண்டுக்கான 53 மின்விநியோக நிறுவனங்களின் நிதி நிலைமை, செயல்திறன் உள்ளடக்கிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
- இதில், தமிழ்நாடு மின்வாரியம் 50-வது இடத்தைப் பிடித்துள்ளது. ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் 2-க்கும் மேற்பட்ட மின்விநியோக நிறுவனங்கள் உள்ளன.
- தமிழகத்தில் தமிழ்நாடு மின்வாரியத்தின் துணை நிறுவனமான மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மட்டுமே அந்தப் பணிகளை மேற்கொள்கிறது.
- மத்திய மின்துறை அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள மின்விநியோக நிறுவனங்களின் செயல்திறன், நிதி நிலைமை போன்றவற்றை ஆராய்ந்து ஆண்டுதோறும் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது.
- அதன்படி, கடந்த 2022-23-ம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் தமிழக மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 50-வது இடத்தைப் பிடித்து 'சி மைனஸ்' என்ற கிரேடில் உள்ளது.
- தமிழ்நாடு மின்வாரியத்தின் மின்சார விற்பனைக்கும், வருவாய்க்கும் உள்ள இடைவெளி ரூ.1.06 கோடியாக உள்ளது. மேலும், மின்கட்டண வருவாயை தாமதமாக ஈட்டுவது, மின்கொள்முதலுக்கு அதிகம் செலவுசெய்வது உள்ளிட்டவை காரணங்களாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இத்தரவரிசைப் பட்டியலில் மகாராஷ்டிர மாநிலத்தில் தனியார் துறை மின்னுற்பத்தி நிறுவனமான அதானி எலக்ட்ரிசிட்டி நிறுவனம் முதலிடத்திலும், குஜராத் மாநிலம், சூரத்தில் உள்ள டோரண்ட் பவர் நிறுவனம் 2-வது இடத்தையும், அகமதாபாத்தில் உள்ள டோரண்ட் பவர் நிறுவனம் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.
- மத்திய அரசுக்கு எதிராக பரப்படும் தவறான தகல்களை கண்டறிந்து நீக்குவதற்காக உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டது.
- மத்திய அரசின் திட்டங்கள் குறித்து வெளியாகும் தவறான தகல்கள் குறித்து உண்மை கண்டறியும் குழு சரிபார்க்கும். அந்த தகவல் தவறு என கண்டறியப்பட்டால் அப்பதிவை சமூக வலைதளங்கள் உடனடியாக நீக்க வேண்டும், இல்லையெனில் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.
- இந்த நிலையில், மத்திய அரசின் உண்மை சரிப்பார்ப்புக் குழு அமைக்கும் அரசாணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
- தகவல் தொழில்நுட்ப திருத்தச் சட்டம் 2023-க்கு எதிரான வழக்கில், மும்பை உயர் நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு வரும் வரை இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- தேசிய மாணவர் படை, இந்திய அணுசக்திக் கழகம் இடையே 2024, மார்ச் 21 அன்று புதுதில்லியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பல்வேறு திட்டங்கள் மூலம் அணுசக்தியை அமைதியான முறையில் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- இதையடுத்து நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. தேசிய மாணவர் படையின் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் குர்பீர்பால் சிங், இந்திய அணுசக்திக் கழக நிர்வாக இயக்குநர் திரு பிவிஎஸ் சேகர் ஆகியோர் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
- இந்திய அணுசக்திக் கழகம் தொடர்புடைய நபர்களை தேசிய மாணவர் படையுடன் முகாம்களின் போது ஈடுபடுத்தி தேசிய மாணவர் படையினருக்கு அணுசக்தி குறித்த பல்வேறு செயல்பாடுகளை அளிக்கும்.
- இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், நாடு முழுவதும் உள்ள இந்திய அணுசக்திக் கழகத்தின் பல்வேறு வசதிகளை தேசிய மாணவர் படை வீரர்கள் பார்வையிடத் தனித்துவமான வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதுடன், அணுசக்தியை அமைதியான முறையில் பயன்படுத்துதல் முறை மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்த நேரடி அனுபவத்தை அளிக்கும்.