17th MARCH 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
லமிட்டியே பயிற்சி 2024 கூட்டு ராணுவப் பயிற்சி
- இந்திய ராணுவம் மற்றும் செஷல்ஸ் பாதுகாப்புப் படைகளுக்கு (எஸ்.டி.எஃப்) இடையிலான கூட்டு ராணுவப் பயிற்சியான "லமிட்டியே-2024" இன் பத்தாவது பதிப்பில் பங்கேற்பதற்காக இந்திய ராணுவக் குழு இன்று செஷல்ஸுக்குப் புறப்பட்டது.
- இந்த கூட்டுப் பயிற்சி 2024 மார்ச் 18 முதல் 27 வரை செஷல்ஸில் நடத்தப்படும். கிரியோல் மொழியில் 'நட்பு' என்று பொருள்படும் ‘லமிட்டியே’ என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பயிற்சி நிகழ்வாகும்.
- இது 2001 முதல் செஷெல்ஸில் நடத்தப்படுகிறது. இந்திய ராணுவம் மற்றும் செஷல்ஸ் பாதுகாப்புப் படைகளின் கோர்கா ரைபிள்ஸ் பிரிவில் இருந்து தலா 45 வீரர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்க உள்ளனர்.
- அமைதி காக்கும் நடவடிக்கைகள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் ஏழாவது அத்தியாயத்தின் கீழ், துணை நகர்ப்புற சூழலில் மரபுசார் செயல்பாடுகளில் பரஸ்பர செயல்பாட்டை மேம்படுத்துவதே இந்த பயிற்சியின் நோக்கமாகும்.
- ஐ.நா. பொதுச் சபையில் ‘முஸ்லிம்கள் மீதான வெறுப்புணா்வுக்கு எதிரான நடவடிக்கைகள்’ என்ற பெயரில், பாகிஸ்தான் சாா்பில் வெள்ளிக்கிழமை வரைவு தீா்மானம் கொண்டு வரப்பட்டது.
- முஸ்லிம்களுக்கு எதிராக பாகுபாடு, விரோதம், வெறுப்புணா்வு மற்றும் வன்முறையை தூண்டுதல், அவா்களுக்கு எதிரான மதச் சகிப்புத்தன்மையற்ற பிற நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு அந்தத் தீா்மானம் கண்டனம் தெரிவித்தது.
- முஸ்லிம்கள் மீதான வெறுப்புணா்வை எதிா்த்துப் போரிட சிறப்புத் தூதரை நியமிக்குமாறு ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸிடம் அந்தத் தீா்மானத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
- இதைத்தொடா்ந்து தீா்மானத்துக்கு ஆதரவாக 115 நாடுகள் வாக்களித்தன. எந்தவொரு நாடும் தீா்மானத்துக்கு எதிராக வாக்களிக்கவில்லை. இந்தியா, பிரிட்டன், பிரேசில், ஜொ்மனி, இத்தாலி, உக்ரைன் உள்பட 44 நாடுகள் தீா்மானம் மீது வாக்களிக்காமல் புறக்கணித்தன.