மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகம் / GULF OF MANNAR BIOSPHERE RESERVE
TNPSCSHOUTERSFebruary 03, 2024
0
மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகம் / GULF OF MANNAR BIOSPHERE RESERVE: தமிழ்நாட்டின் தென்கடற்கரையில் மன்னார் வளைகுடா தேசியப் பூங்காவை உள்ளடக்கி சுமார் 10,500 ச.கி.மீட்டரில் பரவியுள்ள இந்தியாவின் முதல் கடல்சார்ந்த காப்பகம் 1989ஆம் ஆண்டு உயிர்க்கோளக் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.
தாவரங்கள்
மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகம் / GULF OF MANNAR BIOSPHERE RESERVE: இக்காப்பகத்தில் கண்டறியப்பட்டுள்ள 160 பாசியினங்களில் 30 கடல்பாசியினங்கள் உணவாக பயன்படுகின்றன.
இங்கு மிகுந்து காணப்படும் கடற் புற்கள் கடல்வாழ் பாலூட்டிகளுக்கு உணவளிக்கின்றன.
கண்டல் மரவகைகள் மிகுந்து காணப்படும் இக்காப்பகத்தில் 46 தாவர இனங்கள் இவ்விடத்திற்கே உரித்தானவையாகும்.
விலங்குகள்
மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகம் / GULF OF MANNAR BIOSPHERE RESERVE: மன்னார் வளைகுடாப்பகுதியில் காணப்படும் அழகான பவழப்பாறைகள், பல கடல் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் உறைவிடமாக திகழ்கிறது.
முத்துக்கள் விளையும் சிப்பிகள், இறால் வகைகள், கடல் செவ்வந்தி, கிளிஞ்சல்கள் மற்றும் கடல்பசு போன்ற பல்லுயிர் வளம் மிகுந்து காணப்படுகிறது.
மேலும் 280 வகை கடற்பஞ்சுகள், 92 வகை பவழங்கள், 22 வகை கடல் விசிறிகள், 160 வகை பலசுணைப்புழுக்கள், 35 வகை இறால்கள், 17 வகை நண்டுகள், 7 வகை கடற்பெருநண்டுகள், 17 வகை தலைக்காலிகள் மற்றும் 103 வகை முட்தோலிகள் காணப்படுகின்றன.
அச்சுறுத்தல்கள்
மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகம் / GULF OF MANNAR BIOSPHERE RESERVE: முறையற்ற கடற்புற்கள் சேகரிப்பு மற்றும் சட்டத்திற்குப் புறம்பாக பவழத்திட்டுகளை அழித்தல் போன்ற செயல்பாடுகள் காப்பகத்திற்கு பெரும் அச்சுறுததல்களாகும்.
மனிதனின் செயல்பாடுகளால் இதுவரை 65 விழுக்காடு பவழத்திட்டுகள் அழிந்துவிட்டன.
ENGLISH
GULF OF MANNAR BIOSPHERE RESERVE: India's first marine reserve was declared a Biosphere Reserve in 1989, covering an area of about 10,500 sq. km including the Gulf of Mannar National Park on the southern coast of Tamil Nadu.
Plants
GULF OF MANNAR BIOSPHERE RESERVE: Out of 160 species of algae found in this reserve, 30 seaweeds are used as food.
Abundant sea grasses feed marine mammals.
46 species of plants are endemic to this reserve, which is rich in Kandal trees.
Animals
GULF OF MANNAR BIOSPHERE RESERVE: The beautiful coral reefs found in the Gulf of Mannar are home to many marine plants and animals.
Biodiversity such as pearl oysters, prawns, sea anemones, clinchels and sea cows is abundant.
There are also 280 species of sponges, 92 species of corals, 22 species of sea fans, 160 species of polychaetes, 35 species of shrimps, 17 species of crabs, 7 species of crabs, 17 species of cephalopods and 103 species of echinoderms.
Threats
GULF OF MANNAR BIOSPHERE RESERVE: Activities such as illegal seaweed harvesting and illegal destruction of coral reefs are major threats to the reserve. So far 65 percent of coral reefs have been destroyed by human activities.