3rd FEBRUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஒடிசாவில் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்
- ஒடிசாவில் ரூ.68,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கடந்த 2021ல் சம்பல்பூரில் உள்ள ஐஐஎம் வளாகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
- இந்த நிலையில், ரூ.400 கோடி மதிப்புள்ள வளாகத்தை இன்று திறந்துவைத்தார். மேலும் மின்சாரம், சாலை மற்றும் ரயில்வே போன்ற பல்வேறு துறைகளில் பல உள்கட்டமைப்பு திட்டங்களை வெளியிட்டார்.
- பிராந்தியத்தில் இணைப்பை மேம்படுத்தும் புரி-சோனேபூர் இடையேயான வாராந்திர விரைவு ரயிலையும் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
- மேலும் ஜார்சுகுடா தலைமை அஞ்சல் அலுவலக பாரம்பரிய கட்டடத்தையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த விழாவில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஆளுநர் ரகுபர் தாஸ், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இது குறித்த ராஜிநாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பியுள்ளார்.
- பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு எழுதியிருக்கும் ராஜிநாமா கடிதத்தில், தனிப்பட்ட காரணங்களுக்காகவும், தனிப்பட்ட பொறுப்புகளை கவனிக்கவும் பஞ்சாப் ஆளுநர் பதவியையும் சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் பொறுபாளர் பதவியையும் ராஜிநாமா செய்வதாகவும், தயவுகூர்ந்து, தனது ராஜிநாமாவை ஏற்றுக்கொள்ளும்படியும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிப்பது உள்பட பஞ்சாப் மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கடும் மோதல் நீடித்துவந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழக ஆளுநராக நான்கு ஆண்டுகள் பதவி வகித்து வந்த பன்வாரிலால் புரோஹித், கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பஞ்சாப் ஆளுநராக பதவியேற்றுக்கொண்டார்.
- இந்தியாவில் சிறந்த குடிமக்களுக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. அதாவது அரசியல், கலை, இலக்கியம், அறிவியல், விஞ்ஞானம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி வருகிறது.
- அந்த வகையில் பாஜக மூத்த தலைவரும், இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு (வயது 96) 'பாரத ரத்னா' விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
- பிரதமர் திரு. நரேந்திர மோடி புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று காமன்வெல்த் சட்டக் கல்விச் சங்கத்தின் – காமன்வெல்த் தலைமை வழக்கறிஞர்கள் மற்றும் தலைமைச் சட்ட ஆலோசகர்கள் மாநாடு 2024-ஐ தொடங்கி வைத்தார்.
- "நீதி வழங்குவதில் எல்லை தாண்டிய சவால்கள்" என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த மாநாட்டில், நீதித்துறை மாற்றம் மற்றும் சட்ட நடைமுறையின் நெறிமுறை பரிமாணங்கள் போன்ற சட்டம் மற்றும் நீதி, நிர்வாக பொறுப்பு; மற்றும் நவீன கால சட்டக் கல்வியை மறுபரிசீலனை செய்தல் தொடர்பான முக்கியமான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும்.
- இந்த மாநாட்டில் ஆசிய-பசிபிக், ஆப்பிரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளை உள்ளடக்கிய நாடுகளின் சர்வதேச பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கலந்துரையாடலுக்கான ஒரு மன்றத்தை வழங்குவதன் மூலம் இந்த மாநாடு ஒரு தனித்துவமான தளமாக செயல்படுகிறது.
- சட்டக் கல்வி மற்றும் நாடுகடந்த நீதி வழங்கலில் உள்ள சவால்களை எதிர்கொள்ள ஒரு விரிவான திட்டத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட தலைமை வழக்கறிஞர்கள் மற்றும் தலைமைச் சட்ட ஆலோசகர்களைக் கொண்ட வடிவமைக்கப்பட்ட ஒரு பிரத்யேக வட்ட மேசை மாநாடும் இதில் அடங்கும்.