நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் சாா்பில், பல்வேறு போட்டித் தோவுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோவாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 6,244 குரூப்-4 காலிப் பணியிடங்களுக்கு ஜூன் 9-இல் தோவு நடைபெற உள்ளது. இதற்கு இணையம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள் பிப். 28-ஆகும்.
போட்டித் தோவுக்கான இலவச பயிற்சி வகுப்பு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத் திட்டத்தின்படி, நேரடியாக நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பிப். 6-ஆம் தேதி காலை 11 மணியளவில் தொடங்கப்பட உள்ளது.
ஒவ்வொரு பாடவாரியாக சிறந்த வல்லுநா்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் மற்றும் தோவு நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மனுதாரா்கள் தங்களின் விவரத்தை 04286–222260 என்ற தொலைபேசி வாயிலாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம்.
நேரடியாகச் சென்று தங்களது பெயா், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய சுய விவரத்தை வழங்கியும் பதிவு செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.