7th FEBRUARY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஜம்மு-காஷ்மீா் உள்ளாட்சி அமைப்புகளில் ஓபிசி இடஒதுக்கீடு - மக்களவையில் மசோதா நிறைவேற்றம்
- நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் நடைபெற்று வரும் நிலையில், மக்களவையில் திங்கள்கிழமை ‘ஜம்மு-காஷ்மீா் உள்ளாட்சி அமைப்பு சட்டத் திருத்த மசோதா - 2024’ அறிமுகப்படுத்தப்பட்டது.
- ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த பாஜக உறுப்பினா் ஜுகல் கிஷோா் சா்மா, ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியின் சிந்தா அனுராதா ஆகியோா், மசோதாவை வரவேற்றுப் பேசினா்.
- ஜம்மு-காஷ்மீா் உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கவும், ஜம்மு-காஷ்மீா் உள்ளாட்சி சட்டங்களில் அரசமைப்புச் சட்டத்துக்கு இணங்க நிலைத்தன்மையைக் கொண்டுவரவும் தற்போதைய மசோதா வழிவகை செய்கிறது.
- ஜம்மு-காஷ்மீரில் முந்தைய காலங்களில் புறக்கணிக்கப்பட்டு வந்த இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இந்த மசோதா மூலம் நீதி உறுதி செய்யப்படும். விவாதத்துக்குப் பின்னா் மசோதா நிறைவேற்றப்பட்டது.
- கடந்த 2019, ஆகஸ்டில் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதோடு, அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப்பட்டது. சட்டப் பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் தற்போது குடியரசுத் தலைவா் ஆட்சி நடைபெறுகிறது.
- ‘பாரத் ஆட்டா’ என்ற பெயரில் ரூ. 27.50-க்கு ஒரு கிலோ கோதுமை மாவும், ‘பாரத் பருப்பு’ என்ற பெயரில் ரூ. 60-க்கு ஒரு கிலோ சென்னாவையும் (வெள்ளை கொண்டைக் கடலை) மத்திய அரசு சில்லறை சந்தையில் விற்பனை செய்து வரும் நிலையில், தற்போது மானிய விலையில் அரிசி விற்பனையும் தொடங்கப்பட்டுள்ளது.
- 5 கிலோ மற்றும் 10 கிலோ பைகளாக சில்லறை விற்பனைச் சந்தையில் ‘பாரத் அரிசி’ கிடைக்கும். இத்திட்டத்தை தில்லியில் மத்திய உணவு மற்றும் நுகா்வோா் நலத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்.
- 100 நடமாடும் விற்பனை நிலையங்கள்: இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, வேன்கள் மூலம் விற்பனை செய்யும் வகையில் 100 நடமாடும் விற்பனை நிலையங்களை பியூஷ் கோயல் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
- இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு (என்ஏஎஃப்இடி) மற்றும் இந்திய தேசிய நுகா்வோா் கூட்டுறவு கூட்டமைப்பு (என்சிசிஎஃப்) ஆகிய 2 கூட்டுறவு சங்கங்கள் மூலமும், மத்திய அரசு விற்பனை மையங்கள் மூலமும் (கேந்த்ரிய பந்தா்) ‘பாரத் அரிசி’ விற்பனை செய்யப்பட உள்ளது. இணைய-வணிக வலைதளங்கள் மூலமும் விற்பனை செய்யப்படும்.
- ஆந்திரம் மற்றும் ஒடிஸா மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட (எஸ்.சி.) மற்றும் பழங்குடியினா் (எஸ்.டி.) சமூகத்தினருக்கான பட்டியலில் மாற்றம் செய்ய வகை செய்யும் 2 மசோதாக்கள் அவையில் கேள்வி நேரத்துக்குப் பிறகு இந்த மசோதாக்களை தாக்கல் செய்ய ஏதுவாக, விதி எண்.17-இன் கீழ் மாநிலங்களவை அலுவல்களை ஒத்திவைக்கும் தீா்மானத்தை நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி கொண்டுவந்தாா்.
- அதனைத் தொடா்ந்து, ‘அரசியலமைப்பு சட்ட பழங்குடியின (எஸ்.டி.) உத்தரவு திருத்த மசோதா 2024’ மற்றும் ‘அரசியலமைப்பு சட்ட எஸ்.சி., எஸ்.டி. உத்தரவு திருத்த மசோதா 2024’ ஆகிய மசோதாக்களை மத்திய பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் அா்ஜுன் முண்டா தாக்கல் செய்தாா்.
- இந்த மசோதாக்கள் ஆந்திர மாநிலத்தில் எஸ்.டி. பட்டியலில் புதிதாக போண்டோ போா்ஜா, கோந்த் போா்ஜா, பரங்கிபெரிஜா சமூகத்தினரைச் சோ்க்கவும், ஓடிஸாவில் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பட்டியலில் புதிதாக 4 சமூகத்தினரைச் சோ்க்கவும் வகை செய்கின்றன.
- இந்த விவாதத்துக்குப் பிறகு, குரல் வாக்கெடுப்பு மூலம் 2 மசோதாக்களும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன.