Type Here to Get Search Results !

நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் / NILGIRIS BIOSPHERE RESERVE

 

  • நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் / NILGIRIS BIOSPHERE RESERVE: இந்திய அரசால் 1986 ஆம் ஆண்டு முதன் முதலில் அறிவிக்கப்பட்ட காப்பகமாகும். இந்தியாவில் காணப்படும் 10 உயிர்புவியியல் மண்டலங்களில் 2 மண்டலங்களை உள்ளடக்கி மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துளளது. 
  • இக்காப்பகத்தில் பலவித சூழலமைப்புகளும் பல்லுயிர் வளமும் நிறைந்து காணப்படுகிறது. கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் 5520 ச.கிமீ. பரப்பளவில் இது அமைந்துள்ளது. 
  • இக்காப்பகத்திற்குள் முதுமலை மற்றும் வயநாடு வனவிலங்கு சரணாலயங்கள், பந்திப்பூர், நாகர்ஹோலே மற்றும் முக்குர்த்தி தேசியப்பூங்காக்கள் மற்றும் அமைதிப் பள்ளத்தாக்கு போன்ற பாதுகாப்பு பகுதிகள் உள்ளன.

தாவரப்பரவல்

  • நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் / NILGIRIS BIOSPHERE RESERVE: முட்புதர்க்காடு, வறண்ட இலையுதிர்க்காடு, இலையுதிர்க்காடு, பசுமைமாறாக்காடு, மலைக்காடுகள், சோலைவனம், புல்வெளிகள் மற்றும் ஈரப்புலங்கள் என பல்வகை வனங்கள் இங்கு காணப்படுகின்றன.

தாவரங்கள்

  • நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் / NILGIRIS BIOSPHERE RESERVE: தாவர உயிர்ப்பரவல் மிகுந்து காணப்படுகிறது. ஏறத்தாழ 3300 பூக்கும் தாவர வகைகள் உள்ளன. இதில் 132 தாவர வகைகள் இவ்விடத்திற்கே உரித்தனவாக உள்ளன. 
  • பேயேலெப்சிஸ் என்ற தாவரப்பேரினம் உலகில் இங்கு மட்டும்தான் காணப்படுகிறது. இங்கு காணப்படும் 125 ஆர்க்கிட் இனங்களில் 8 இனங்கள் இவ்விடத்திற்கே உரித்தனவாகும். 
  • வாண்டா, லிபாரிஸ், பல்போஃபைலம், ஸ்பைராந்தஸ் மற்றும் திரிக்ஸ்பெர்மம் போன்றன இவ்விடத்திற்கே உரித்த மற்றும் அழிந்து வரும் முக்கிய இனங்களாகும்.
  • பெருநெல்லி, சிலைவாகை, நாவல், பலா, தோதகத்தி, ரோடோடென்ட்ரான் மற்றும் சந்தனம் போன்றவை இங்கு பொதுவாக காணப்படும் மரவகைகளாகும். 
  • நீலகிரி என்ற பெயர் வரக்காரணமான, நீல நிறத்தில் பூப்பூக்கும் குறிஞ்சி என்ற ஒரு சிறந்த தாவர இனம் இங்கு காணப்படுவது இக்காப்பகத்திற்கு கிடைத்த வரப்பிரசாதமாகும். மேலும் பல மூலிகைகளும் மிளகு போன்ற கொடியினங்களும் மிகுந்து காணப்படுகின்றன.

விலங்குகள்

  • நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் / NILGIRIS BIOSPHERE RESERVE: விலங்கினங்களைப் பொறுத்தமட்டில் 100 வகையான பாலூட்டிகள், 150 வகையான பறவைகள், 80 வகையான இரு வாழ்விகள் மற்றும் ஊர்வன, 300 வகையான வண்ணத்துப்பூச்சியினங்கள் மற்றும் எண்ணிலடங்கா முதுகெலும்பற்ற விலங்கினங்கள் காணப்படுகின்றன. 
  • மேற்கு மலைத்தொடர்ச்சிக்கு உரித்தான 60 வகையான ஊர்வன, 31 வகையான இருவாழ்விகள் மற்றும் 39 வகையான மீன் இனங்கள் இக்காப்பகத்தில் உள்ளன. 
  • டேனியோ, ஹிப்செலோபார்பஸ் மற்றும் புந்தியஸ் போன்ற நன்னீர் மீன் இனங்கள் இக்காப்பகத்தில் மட்டுமே காணப்படுகின்றன. நீலகிரி வரையாடு, நீலகிரிக்குரங்கு, தேவாங்கு, வெளிமான், புலி, காட்டெருமை மற்றும் யானை போன்றவை இங்கு பொதுவாக காணப்படும் விலங்கினங்களாகும்.

பழங்குடியினங்கள்

  • நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் / NILGIRIS BIOSPHERE RESERVE: தோடா, கோட்டா, குறும்பா, பனியா, இருளா, ஆதியா, எடநாடன், போன்ற பழங்குடியின மக்களுக்கு இக்காப்பகம் தாயிடமாக விளங்குகிறது. இவர்கள் பாரம்பரிய வேளாண் முறைகளை இன்றளவும் பின்பற்றி வருகின்றார்கள்.

அச்சுறுத்தல்

  • நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் / NILGIRIS BIOSPHERE RESERVE: திட்டமிடா சுற்றுலா, காட்டுத்தீ, மேய்ச்சல், ஓரின பயிர்சாகுபடி, தீவிர காடழிப்பு, தோட்டப் பயிர்கள் வேளாண்மை, கட்டுமானப் பணிகள் மற்றும் நீர்மின் சக்தி திட்டங்கள் போன்ற மனிதனின் செயல்பாடுகள் இக்காப்பகத்தின் அச்சுறுத்தல்களாகும்.

ENGLISH

  • NILGIRIS BIOSPHERE RESERVE: It was the first archive notified by the Government of India in 1986. The Western Ghats comprise 2 of the 10 biogeographic zones in India. The reserve is rich in diverse ecosystems and biodiversity.
  • 5520 sq km in the states of Karnataka, Kerala and Tamil Nadu. It is situated in area. The reserve includes protected areas such as Mudumalai and Wayanad Wildlife Sanctuaries, Bandipur, Nagarhole and Mukkurthi National Parks and Peace Valley.

Vegetation

  • NILGIRIS BIOSPHERE RESERVE: A variety of forests are found here like scrub forest, dry deciduous forest, deciduous forest, evergreen forest, montane forest, tropical forest, grasslands and wetlands.

    Plants

    • NILGIRIS BIOSPHERE RESERVE: Plant biodiversity is abundant. There are approximately 3300 species of flowering plants. 132 plant species are unique to this place. The plant genus Bayelepsis is found only here in the world. Out of 125 orchid species found here, 8 species are endemic to this place.
    • Wanda, Liparis, Bulbophyllum, Spiranthus and Trixpermum are the main endemic and endangered species of this area. Perunelli, Sillavakai, Nawal, Jack, Thothakathi, Rhododendron and Sandalwood are the common tree species found here.
    • A boon to the reserve is the presence of an excellent species of blue-flowered Kurinji, which gives rise to the name Nilgiris. Also many herbs and vines like pepper are abundant.

    Animals

    • NILGIRIS BIOSPHERE RESERVE: Fauna includes 100 species of mammals, 150 species of birds, 80 species of amphibians and reptiles, 300 species of butterflies and countless invertebrates.
    • The reserve has 60 species of reptiles, 31 species of amphibians and 39 species of fish endemic to the Western Range.
    • Freshwater fish species such as Danio, Hypselobarbus and Punthius are found only in this reserve. Animals commonly seen here include Nilgiri cheetah, Nilgiri monkey, Devangu, Deer, Tiger, Bison and Elephant.

    Tribes

    • The reserve is home to tribal people like Toda, Kota, Kurumba, Bania, Irula, Adiya, Edanadan etc. They are still following traditional farming methods.

    Threat

    • Human activities such as unplanned tourism, forest fires, grazing, monocultures, intensive deforestation, horticulture, construction works and hydropower projects are threats to this reserve.

    Post a Comment

    0 Comments
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

    Top Post Ad

    Below Post Ad

    Hollywood Movies

    close

    Join TNPSC SHOUTERS Telegram Channel

    Join TNPSC SHOUTERS

    Join Telegram Channel